ஜேகேவின் சில குறிப்புகள்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Sunday, October 03, 2004

வெகு நாட்களுக்குப் பிறகு இன்று இரண்டாம் முறையாக "பொன்னியின் செல்வன்" படிக்க ஆரம்பித்தேன். தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை கதை கலமாக கொண்ட வரலாற்று புதினம் என்பதால் வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே எனக்கு இந்த கதை பிடிக்கும்... பழையாறையும், கொடும்பாலூரும் கதையில் வரும்போது, மிக அருகிலிருந்தும் அவ்விடங்களை பார்க்காத குற்ற உணர்வு எழுந்தது.... அடுத்தமுறை வாய்ப்பு கிடைக்கும் பொழுது கட்டாயமாக இந்த வரலாற்று சிறப்பு மிகுந்த ஊர்களை சுற்றிப்பார்க்க வேண்டும்....

முதல் பாகத்தில் 23 அத்தியாயங்களை இன்று படித்தேன்...

"Project Madurai" குழுவினருக்கு ஒரு பெரிய "கும்பிடு"..for digitizing பொன்னியின் செல்வன்.

மற்ற படி இன்று வேரு ஒன்றும் சிறப்பு இல்லை...EPDM பற்றிய ஒரு கட்டுரைக்கான குறுவுரையை(abstract?) எழுதினேன்...

வட கிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள், வருத்தம் கலந்த நிதர்சனத்தை நினைவு படுத்தியது. எத்தனை காலம் தான் இந்த அரசியல் பிரச்சனைகள் வெடிமருந்து வழிப்பேசும்...

நாளை வேலைக்கு செல்லவேண்டும் என்பதுதான் இப்போதைக்கு எனக்கிருக்கும் ஒரே அழுப்பான விஷயம்.

மீண்டும் சந்திப்போம்...அன்புடன் ஜேகே


படித்தவர்களின் கருத்துகள் - 0

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல