ஜேகேவின் சில குறிப்புகள்: பட்டாம் பூச்சிகளைக் கொன்றவள்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Thursday, June 14, 2007

பட்டாம் பூச்சிகளைக் கொன்றவள்

நீ நகக்கண்ணில் முகம்பார்த்த போது
சிலிர்த்துக்கொண்டது ஒரு பட்டாம் பூச்சி

ஒரு கோடியில் தேடி உனைக்கண்ட
முகக்கண்ணில் மின்னலாய்த் தோன்றி பறந்தன சில

அரவமற்ற தெருவில் எதிர்கொண்ட போது
ஒரு நொடி மலர்ந்த உன் இதழ்களுக்காக
எத்தனை ஆயிரம் சிறகடித்திருக்கும்.

பொருளற்ற சொல்லெல்லாம் புரிந்துகொண்டு
சொல்லற்ற பொருளை மட்டும் மறந்துவிட்ட
நீ இவற்றை என்ன செய்யப்போகிறாய்

எதற்கும் கொஞ்சம் பொறு
என் பட்டாம் பூச்சிகளிடம் குட்பை
சொல்லி வைக்கிறேன்
நீ கொன்றுவிட்டால் சாகப்போவது
பட்டாம் பூச்சிகள் மட்டுமல்ல
நானும் தான்.

படித்தவர்களின் கருத்துகள் - 5

At Fri Jun 15, 07:16:00 AM GMT-6, Anonymous Anonymous சொன்னது

good one :) enna nethu nite 'adigam aiducha'? ennaku ponna patha patam poochi vara matengudhu! puliya karaikira mathri iruku :)

 
At Sat Jun 16, 12:33:00 PM GMT-6, Anonymous Anonymous சொன்னது

'adigam aiducha' nu pala meaning varramathiri ketta eppidi?
etharkum solli vaikkiren. nan sarayam kutippatheyillai. sarayam kutippavarkalai en arukileye vara vita matten. :)

JK

 
At Mon Dec 03, 07:33:00 PM GMT-6, Blogger வாதி சொன்னது

arumai mikka arumai

 
At Mon May 25, 10:56:00 PM GMT-6, Anonymous Angel சொன்னது

"பொருளற்ற சொல்லெல்லாம் புரிந்துகொண்டு
சொல்லற்ற பொருளை மட்டும் மறந்துவிட்ட
நீ இவற்றை என்ன செய்யப்போகிறாய்"

romba nalla erukku! Jai!

Cheer's
Angel

 
At Tue May 26, 12:41:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

ஏஞ்சல்...உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல