ஜேகேவின் சில குறிப்புகள்: ஆழிப் பேரழிவு?

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Wednesday, December 28, 2005

ஆழிப் பேரழிவு?

சில நாட்களுக்கு முன் மயன் கலாச்சாரத்தைப் பற்றியும் அதன் அழிவைப் பற்றியும் ஒரு பதிவு எழுதியிருந்தேன். இந்து
நாளிதழில் சில நாட்களுக்கு முன் வெளியான ஒரு கட்டுரை உலகளாவிய பேரழிவைப் பற்றி சில கருத்துகளை முன் வைக்கிறது.


கால நிலை மாற்றம், குறிப்பாக பூமியின் வெம்மை அதிகமாதல்(Global Warming), மக்கள் தொகை அதிகரிப்பு, விரைவாக அழிந்து போகும் இயற்கை வளங்கள், சீரழியும் நன்னீர் ஆதாரங்கள் போன்ற பிரச்சனைகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் புவிப் பேரழிவு கூப்பிடு தூரத்தில் அதாவது நமது காலத்திலோ அல்லது நமது குழந்தைகளின் காலத்திலோ வந்துவிடலாம் என பல அறிஞர்கள் ஊகிக்கிறார்களாம். ஓங்கித் தழைத்த மயன் கலாச்சாரமும் இது போலத்தான் குறுகிய காலகட்டத்தில் அழிந்து போனது. அக்கலாச்சாரம் அழிந்ததற்கான பல காரணிகள் இன்றைய நிலைக்கும் பொருந்தும். அதில் Unsustainable வாழ்க்கை முறைதான் முக்கியமான ஒன்று. ஒரு வேறுபாடு என்னவென்றால், மயன்களுக்கும் மற்ற கலாச்சாரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. பிரச்சனை வந்தபோது அவர்கள் மட்டுமே அழிந்து போனார்கள். ஆனால் நம் நிலைமை அப்படியில்லை. நல்லதோ கெட்டதோ, உலகமயமாக்கல் எல்லோரையும் கெட்டியாக இனைத்திருக்கிறது. ஒருத்தருக்கு வலித்தால் எல்லோருக்கம் வலிதான்.

2050 வாக்கில் இந்தியா பொருளாதாரத்தில் உலகின் மூன்றாவது இடத்தை வகிக்கும் என பண்டிட்களெல்லாம் ஆரூடம் கூறும் பொழுது, நான் ஆழிப் பேரழிவைப் பற்றி பதிவு போடுவது எனக்கே எரிச்சலாகத்தான் இருக்கிறது. ஆனால் பல பிரச்சனைகளை பிய்த்து உதறும் விவாத களங்கள் கூட, சூழல் சீர்கேடு, Unsustainable வளர்ச்சி போன்ற முக்கியாமான பிரச்சனைகளை விவாதிப்பதில்லை. அரசாங்கமும் இவற்றைப் பற்றி அதிகம் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. எத்தனை அரசியல் கட்சிகள் சுற்றுச் சூழல் கொள்கைகள் வைத்துள்ளன?

இப்படியே போனால், பேரழிவு என்று ஒன்று வந்தால் அது நம்மிடம் சொல்லிக்கொள்ளாமல்தான் வரும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அப்படியே அது சொல்லிவிட்டாலும் நமது சமுதாயத்தின் செவிட்டுக் காதுகளுக்கு கேட்கவா போகிறது.

படித்தவர்களின் கருத்துகள் - 2

At Sat Dec 31, 01:50:00 AM GMT-6, Blogger Jaggy சொன்னது

Smile at the Past with Pride and Grace
Live each today with Joy and Verve
Look at every tommorrow with Hope And Faith
This year may all your efforts be rewarded
and all your dreams come true
Wishing you a Happy New Year

 
At Sun Jan 01, 08:04:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

ஜகி,
நன்றி.
உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல