BNDer ஆகுங்கள்.. வித்தியாசமாக நன்றி சொல்லுங்கள்...
இன்று நுகர்வு கலாச்சாரத் திருவிழா. அமெரிக்கா முழுவதும் மக்கள் பொருட்களை வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறார்கள். உடனடித் தள்ளுபடி, மடலில் தள்ளுபடியென எக்கச்சக்கமாக டீல் போட்டு வாடிக்கையாளர்களை சுண்டியிளுக்கிறார்கள் கடைகாரர்கள்.
"குறைந்த விலையில் வாங்கும் வாடிக்கையாளருக்கும் அதிக அளவில் பொருட்களை விற்கும் கடைகாரருக்கும் வரி வசூலிக்கும் அரசாங்கத்திற்கும் அதன் மூலம் பொது மக்களுக்கும் நல்லது தானே. இதிலென்ன பிரச்சனை"ன்னு நீங்கள் கேட்கலாம்(கேட்காமலும் இருக்கலாம்...உங்களுக்கு ஏற்கனவே விசயம் தெரிந்திருக்கும் பட்சத்தில்).
இந்தியாவில் இருப்பவர்களை விட அமெரிகாவில் இருப்பவர்கள் 30 மடங்கு அதிகமாக நுகர்கிறார்களாம்(அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் 60 மடங்கு நுகர்கிறார்கள்னு பட்சி சொல்லுது..ஹி ஹி). தேவைக்கதிகமாக பொருட்களை வாங்குவதும், அவற்றை வாங்குவதற்காகவே சம்பாதிப்பதும், அப்படிச் சம்பாதிப்தற்காகவே வாழ்வதுமென பல பேர் வாழ்க்கையை வீட்டில் தொலைத்துவிட்டு மால்களில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதைத்தவிர, உலகில் இருக்கும் இயற்கை வளங்களுக்கு ஒரு வரம்பிருக்கிறது, ஆனால் வரம்பற்ற நுகர்வு கலாச்சாரம் இருக்கும் கொஞ்ச வளத்தையும் அதிவேகதில் உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்படப் போவது நாமல்ல, நம் பிள்ளைகுட்டிகளும் அவர்களோட பிள்ளைக்குட்டிகளும் தான்.
இன்னிக்கி சீப்பா கெடைக்கிற "Electronic Gizmos"ல்லாம் வாங்கம வேற என்ன செய்யிறதுன்னு கேக்குறீங்களா...
ரொம்ப ஈசியான கேள்வி, பதிலும் ஈசிதான். "Day After Thanks Giving"க்கு பதிலா "Buy Nothing Day"ன்னு ஒன்ன புதுசா வந்திருக்கு. நீங்க செய்யவேண்டியதெல்லாம் இன்னிக்கி கடைகள்ள போய் காசு செலவுபன்னாமே, குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ ஜாலியா நேரத்த செலவு பன்னனும். அவ்ளோதான். மேலதிகத் தகவலுக்கு இங்கே கிளிக்குங்கள்.
Happy Buy Nothing Day!
படித்தவர்களின் கருத்துகள் - 2
//தேவைக்கதிகமாக பொருட்களை வாங்குவதும், அவற்றை வாங்குவதற்காகவே சம்பாதிப்பதும், அப்படிச் சம்பாதிப்தற்காகவே வாழ்வதுமென பல பேர் வாழ்க்கையை வீட்டில் தொலைத்துவிட்டு மால்களில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்//
There are certain things we need to have.
There are thing we like to have.
Some things are good to have.
இதில் ஒருவன் (ஒருத்தி) எங்கு நிறுத்தவேண்டும் தனக்குத்தானே கட்டுப்பாடு விதித்துக் கொள்ளவேண்டும். இல்லாட்டி தேடலின் முடிவில் வெறுமையே மிஞ்சும்.
//தேடலின் முடிவில் வெறுமையே மிஞ்சும்.//
உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்
நன்றி கல்வெட்டு...
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல