"The Corporation"
டாகுமெண்டரி படங்களை காசு கொடுத்து பார்ப்பவர்கள் எல்லாம் ஒன்னு கடவுளாக இருக்க வேண்டும் அல்லது கழண்ட கேசாக இருக்க வேண்டும் என்பதே வெகு நாட்கள் வரை எனது தாழ்மையான கருத்தாக இருந்தது. சமீபத்தில் வாடகை வீடியோ கடையில் சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது கீழே காணும் இந்தப் படத்துடன் ஒரு DVD என் கவனத்தை ஈர்த்தது.
DVDயின் பின்குறிப்பை படித்ததில் அது ஒரு ஆவணப் படம் என்றும் அதில் மைக் மூர், சோம்ஸ்கி போன்ற பெருந்தலைகள் கூட பங்கேற்றிருக்கிறார்கள் என்றும் அறிந்தவுடன் சரி இதைப் பார்த்தால்தான் என்ன எனத் தோன்றியது. அப்புறம் "சரி பார்த்துவிடலாம்" என முடிவெடுத்தேன். சமீபகாலத்தில் நான் எடுத்த, என்னில் வெகுவான பாதிப்பை ஏற்படுத்திய, முடிவுகளில் அதுவும் ஒன்று என்பதை நான் அப்போது உணரவில்லை.
இந்த படம் நிறுவனங்களின்(Corporations) சமீபகால வளர்ச்சியையும் அவை அரசாங்கங்கள் மற்றும் தனி மனிதர்களின் மீது மறைமுகமாகச் செலுத்தும் அதிகாரங்களையும் ஆராய்கிறது. சென்ற நூற்றாண்டில் பல நாடுகளில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் தனி ஒரு குடிமகனுக்குறிய எல்லா உரிமைகளையும் நிறுவனங்களுக்கும் தந்தன. மனிதர்களைப் போலல்லாமல் "இலாபம்" ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட "நிறுவனங்கள்" எந்த மாதிரியான "குடிமகன்களாக" உருவெடுத்திருக்கின்றன என்பதை நாற்பதிற்கும் மேற்பட்ட நேர்முகங்களின் மூலம் விளக்குகிறது "த கார்ப்பரேஷன்".
சோம்ஸ்கி, மூர் தவிர பல நிறுவனங்களின் முன்னாள் இந்நாள் CEOக்கள், நோபல் பரிசு பெற்ற பொருளியல் வல்லுணர் மற்றும் "மேலாண்மை பெரியசாமி" பீட்டர் ட்ரக்கர் போன்றோருடைய பேட்டிகளையும் இப்படத்தில் காணலாம். அவை எல்லாவற்றையும் விட எனக்கு ஆர்வத்தைத் தூண்டியது நம்மூர் Dr வந்தனா சிவா அவர்களின் பேட்டிதான். பாசுமதி, புளி, மஞ்சள் போன்றவற்றிற்கு அளிக்கப்பட்ட பேடண்ட்களை எதிர்த்து ஐரோப்பிய நீதிமன்றங்களில் வழக்காடிவரும் குழுக்களில் இவர் முக்கிய பங்காற்றியிருக்கிறாராம்.
படத்தில் சொல்லப்படும் தகவல்கள் பெரும்பாலும் முகத்தில் அறைவது போன்ற எண்ணத்தைத்தான் என்னில் ஏற்படுத்தின. மான்சாண்டோவின் பசுமாட்டிற்கான rBGH(Bovine Growth Harmone) ஊசியைப் பற்றிய தகவலை கேட்டதிலிருந்து நான் ஆர்கானிக்(Organic) பால் மற்றும் காய்கறிகளை மட்டுமே இயன்றவரை சாப்பிட முயற்சிக்கிறேன். என்னை ஓ வென
வாயைப் பிளக்கவைத்த மற்றொரு செய்தி IBM நிறுவனத்திற்கும் ஹிட்லரின் ஹோலோகாஸ்டிற்கும் உள்ள தொடர்பை விளக்கியது. இவைபோல பலப்பல செய்திகள்...
சோசலிச பொருளாதாரச் சித்தாந்தங்களின் மீது நிறைய மதிப்பு வைத்திருக்கும் எனக்கு அந்த தத்துவங்களுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் உள்ள தூரத்தைக் காண்பதில் அவ்வப்போது ஒரு மாதிரியான disillusionment ஏற்படும். நவீன-லிபரல் பொருளாதாரக் கொள்கைகளின் மனிதாபிமானற்ற வழிகளையும்,விளைவுகளையும் இந்த ஆவணப்படத்தில் காணும்போது இச்சித்தாந்தங்கள் மட்டும் எல்லாப்பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையப்போவதில்லை என்பது மட்டுமாவது தெளிவாகிறது.
நீங்கள் வலது சார்பியோ,இடது சார்பியோ அல்லது நடுநிலைவாதியோ கதை-திரைக்கதை இல்லாத ஒரு படத்தை மூன்று மணி நேரம் பார்க்க உங்களுக்கு தெம்பிருக்குமானால் இந்தப்படம் ஏதாவது ஒரு வகையில் உங்கள் பார்வையை விசாலமாக்கும் என நான் நம்புகிறேன்.
மேலதிகத்தகவல்களுக்கான சுட்டிகள்
1) http://www.thecorporation.com/
2) வந்தனா சிவாவைப் பற்றி http://www.zmag.org/bios/homepage.cfm?authorID=90
3) வந்தனா சிவாவைப் பற்றி மேலும் http://www.google.com/search?q=Dr+Vandana+shiva
படித்தவர்களின் கருத்துகள் - 10
ஒரு மாதத்திற்கு முன் இந்த டாகுமெண்ட்ரியை பார்த்தேன். ஒரு நாட்டின் மொத்த தண்ணீரையும் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்ற கார்ப்பரேஷன் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்தேன். ஏனோ இல்லை.
இதை உங்களுக்கு நேரமம்/விருப்பமிருப்பின் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்.
// மான்சாண்டோவின் //
இந்த கம்பெனியை பற்றி வழக்கமான "அந்நிய ஏகாதிபத்திய" என்ற பாணியில் எழுதப்பட்ட கம்யூனிஸ்ட் சுவரொட்டி ஞாபகம் வருகிறது. இந்த கம்பெனியின் விஷத்தன்மையை ஒழுங்கான முறையில் மக்களிடம் எடுத்துச்செல்லாமல் வழக்கமான ஏகாதிபத்திய எதிர்ப்பு கோஷத்தால் கம்யூனிஸ்டு கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிய விட்டதோ என நினைக்க தோன்றுகிறது.
மான்சென்தோ பார்த்து பால் குடிக்க மறந்தீர்களா? http://www.peta.org/ வீடியோவை பார்த்தால் இறைச்சி சாப்பிடுவதையும் நிறுத்தி விடுவீர்கள்.
முகமூடியாரே,
//http://www.peta.org/ வீடியோவை பார்த்தால் இறைச்சி சாப்பிடுவதையும் நிறுத்தி விடுவீர்கள்.//
9 சொச்சம் ஆண்டுகளாக நான் இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவதில்லை...
நீங்கள் குறித்துக் காட்டியிருந்தது போல் பல நிறுவன அராஜகங்களை இந்தப் படத்தில் காண்பித்திருக்கிறார்கள். சுருக்கமாக இருக்கவேண்டும் என்று இரண்டைப் பற்றி மட்டும் எழுதினேன். வாய்ப்பு கிடைத்தால் இன்னுமொரு பாகம் போடலாம்.
வந்து பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி
அடடே உங்க பதிவையும், புன்னூட்டங்களையும் படிச்சா வயிறு கலக்குது வாத்யாரே :-)
முட்டை, இறைச்சிக்கு பால் (ஆர்கானிக்) ஊத்த வைச்சிடாதீஹப்பு.
நிறைய விதயங்களை அறியத் தந்தமைக்கு நன்றி :-)
This comment has been removed by a blog administrator.
குசும்பரே
//... பால் (ஆர்கானிக்) ஊத்த வைச்சிடாதீஹப்பு.//
:-)
PETA வீடியோக்களைப் பார்த்ததிலிருந்து நான் பாலுக்கும் பாலூற்றி(ஆர்கானிக் தான்) விடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன் :-)
நன்றி
Hmmm... a quite interesting post...
I was not surprised on seeing this post...
Everyother business entity tries to get favor and manipulate things for their sake... u kno.. its a business entity not a charity...
u have mastered the art of narating things in a interesting way...
JK, you could have added much more details. Hope u will do that in ur next post.
ஜகி (ஜக்கி?),
//you could have added much more details//
முன் சொன்னதுபோல் சுருங்க எழுத எண்ணினேன். ரொம்ப சுருங்கி விட்டது போல இருக்கு.
//Everyother business entity tries to get favor and manipulate things for their sake//
நீங்க சொல்றது சரிதான். தனி மனிதர்களும், சமுதாயமும், அரசுகளும் அதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றித்தான்்தான் இப்படம் கருத்தாடுகிறது்.
உங்கள் கருத்திற்கு நன்றி
For reference
http://riotofreasons.blogspot.com/2005/12/corporation.html
I can speak a little and understand a little Tamil. But am not good at reading Tamil. I am guessing we are on the same page here.
There is another interesting documentary releasing on DVD this month .... Walmart: The high cost of low price.
Have heard good things about it so far.
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல