கடைசியிலிருந்து தொடங்குங்கள்
சில நாட்களாக வழக்கத்திற்கு அதிகமாகத் திரைப்படங்களைப் பற்றி குறிப்புகளை எழுதுகிறேன்(நன்றி Blockbuster. அங்கு மாதத்திற்கு 25 வெள்ளி கொடுத்து, வேண்டிய DVDகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்). சமீபத்தில் த ஜாக்கெட்(The Jacket) என்று ஒரு ஆங்கில படம் பார்த்தேன். மேட்ரிக்ஸ் போன்ற ஒரு கதையமைப்புடன் கூடிய படம் என்பதால் கதையை புரிந்துகொள்ள சற்று பொருமை வேண்டியிருந்தது. முதல் இராக் போரில் ஈடுபட்ட ஒரு அமெரிக்க இராணுவ வீரன் அங்கிருந்து காயமடைந்து ஊர் திரும்புகிறான். பின் பயித்தியமாகி, ஒரு போலிஸ்காரனை கொன்று விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, மன நல மருத்துவமணையில் சேர்க்கப்ப்டுவான். அங்கு அளிக்கப்படும் தவறான அதி-தீவிரமான சிகிச்சையில் அவன் இறந்துபோவான். இது தான் மேலோட்டமான கதை.
ஆனால் படம் ஒரு புதுக்கவிதை போல பல்வேறு கருக்களை மிக இலாவகமாக கையாளுகிறது.
படத்தில் நீரெழுத்தில் எழுதப்பட்ட கதை "The real life begins only with the knowledge of death". எவ்வளவு உண்மை...உதாரணத்திற்கு, நம் வாழ்வில் மிக முக்கியமானது எது என்பதை தேடுவதிலே வெகு நேரத்தை கழித்துவிடுகிறோம். அப்படியே அதை தெரிந்து கொண்டாலும் அதைத்தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் அதிக கவணம் செலுத்துகிறோம். எல்லாவற்றையும் முடித்துவிட்டு அந்த முக்கியமான விஷயத்திற்கு வரும் போது....it's probably too late. படம் முடியும் போது இப்படியும் ஒரு படமா என்று வியக்க வைத்தது.
நீங்கள் யாராவது இப்படத்தை பார்த்திருந்தால்...உங்கள் கருத்து?
படித்தவர்களின் கருத்துகள் - 1
Real lifela unmaium adudan...., where we r, why we r, who we r, think? there wont be any menaings that is called ...... :(
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல