ஜேகேவின் சில குறிப்புகள்: கடலில எழுகிற அலைகளைக் கேளடி ஓ..

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Tuesday, December 28, 2004

கடலில எழுகிற அலைகளைக் கேளடி ஓ..

அலைகளெல்லாம் அழுகைகளாகத்தான் கேட்கின்றன...60000 உயிர்களை பலி கொண்ட இந்த அலைகளைப்பற்றி நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் வலிக்கிறது...இரண்டு நாட்களாக எந்த வேலையும் சரியாகவே ஓடவில்லை எனக்கு...

நில நடுக்கம் ஏற்பட்டு இரண்டு மணி நேரம் கழித்துதான் அலைகள் தமிழ் நாட்டை தாக்கியிருக்கின்றன. அரசாங்கம் ஒரு அறை மணி நேரம் முன்னால் எச்சரிக்கை விடுத்திருந்தாலே பல்லாயிரக்கணக்கான உயிர்களை காத்திருக்களாம். ஆனால் நமது வானியல் மற்றும் புவியியல் நிபுனர்கள் சாக்குப் போக்கு சொல்வதிலேயே கண்ணாக இருக்கிறார்கள். 6:55 க்கு ஏற்பட்ட நில நடுக்கத்தை உடனடியாக கருவிகள் மூலம் அறிந்து கொண்ட இவர்கள், ஒரு உத்தேசமாகவாவது "சூனமி" அலைகள் அடிக்களாம் என்று அறிவித்திருக்களாம்.

வேலை பர்க்கவேண்டிய நேரத்தில் நன்றாக தூங்கிவிட்டு இப்பொழுது, எங்களிடம் அது இல்லை, இது இல்லை அதனால்தான் முன்கூட்டி சொல்ல முடியவில்லை என்கிறார்கள். எனக்கென்னவோ, இவர்களுக்கு அறிவு இல்லை என்றுதான் தோன்றுகிறது. பின்னெப்படி, தேசிய கடலாய்வு நிலையத்தில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர், "இதுவரை சூனமி என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது" என்று சொல்லுவார்.

"கடற்கரை ஓரங்களில் பெரும்பாலும் ஏழை பாளைகள்தான் அதிகம் இருப்பர். இவர்கள் செத்தால் யாரும் கேட்கமாட்டார்கள், எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்த இது போன்ற இயற்கை சீரழிவுகள்தான் சரியான கருவி" என்று அரசாங்கமும், நமது விஞ்ஞான மேதாவிகளும் நினைத்திருப்பார்களோ என்னவொ....இல்லாவிட்டால் எப்படி இவர்களால் "இதுவரை சூனமி வராததால் நாங்கள் தயாராக இல்லை" என்றெல்லாம் காரணம் கூற முடிகிறது...

படித்தவர்களின் கருத்துகள் - 0

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல