The Mosquito Coast
பெரும்பாலும் திரைப்படங்களைப் பற்றி நான் அபிப்ராயங்கள் வைத்துக்கொள்வது இல்லை. ஆனால் நேற்று பார்த்த The Mosquito Coastஐப்பற்றி எழுதத்தோன்றுகிறது. என்பதுகளின் ஆரம்பத்தில் வெளியான ஒரு ஆங்கில நாவலைத்தழுவிய படம் இது. படம் ஒன்றும் சூப்பர் டூப்பராக ஒடவில்லையாம். ஆனாலும் இந்த படத்தின் கதை ஒரு சிரிய தாக்கத்தை என்னில் ஏற்படுத்தியது. காட்டுமிராண்டித்தனமான கன்ஸ்யூமர் கலாச்சாரத்தை வெறுக்கும் ஒரு பொறியாளர் தனது மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு பூகோள வரைபடத்தில் இல்லாத, ஒரு ஹூந்துராஸ் காட்டின் ஒரு பகுதிக்கு குடி பெயர்கிறார். அங்கு ஒரு "utopia"வை அமைக்க முற்படும் அவருக்கு கிடைக்கும் வெற்றிகளையும், தோழ்விகளையும், அந்த பயனதில் அவரும் அவரது குடும்பத்தினரும் எவ்வாறு மாறுகின்றனர் என்பதும்தான் கதை.எனக்கென்னவோ இந்த படம், சோசலிசத்தை மினியேச்சர் வடிவத்தில் காண்பிக்க முற்பட்டதாக தோன்றியது. சோசலிசத்திலும், ஒரு கட்டத்தில் அரசியல்வாதிகள் மக்களை மறந்துவிட்டு கொள்கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள். கடைசியில் எதை அவர்கள் வெறுத்தார்களோ அதுவாகவே ஆகிவிட்டனர். மனிதம் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.இந்த குருட்டுத்தனமான கொள்கைவெறிதான் சோசலிசத்தின் charmஐ குறைத்துவிட்டது.
படத்தைவிட நாவல் இன்னும் சிந்தனையைத்தூண்டுவதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த புத்தகம் அதுதான்.... :-)
படித்தவர்களின் கருத்துகள் - 3
வித்தியாசமான கதைக்களம். சென்னையிலிருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறேன். இதைப் போல இன்னொரு ஆவணப்படத்தை நூலகத்தில் பார்த்தேன். ஆப்பிரிக்காவின் உள்ள ஒரு பழங்குடி இனத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு, 1950-60களில் அங்கு சென்ற ஒரு பிரிட்டிஷ் ஆய்வாளர், அவர்களுடனே தங்கி விட்டார். சுமார் 30-40 வருடங்கள் கழித்து அவர் வெளியுலகிற்கு வந்த போது அவருக்கு ஏற்பட்ட அனுபங்களை ஒரு ஆவணப்படமாக எடுத்துள்ளார்கள். படம் பெயர் ஞாபகமில்லை. பார்த்துவிட்டு பதிகிறேன்.
ஆழமான பார்வை. தேடிப் பிடித்து 'The Mosquito Coast' பார்த்துவிடுகிறேன்.
narain sir,"கொசுக் கரை" படம் பார்க்க கிடைத்ததா? அந்த இன்னொரு படத்தை பத்தியும் தகவல் தெரிஞ்சா சொல்லுங்கோ.
Pasupathy sir, இது கொஞ்சம் பழைய படம்ன்றதாலே கிடைப்பது சற்று சிரமமா இருக்கலாம். பார்க்க முடிந்தால் உங்கள் கருத்தையும் சொல்லுங்க.
பின்னூட்ட கருத்துக்களுக்கு மிக நண்றி...
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல