(ஏழை)உயிர்களின் பொருள்....
வெள்ளை நாட்டு ஊடகங்கள் நமது மக்களின் உயிரிழப்புகளைப் பற்றி அதிகமாகக் கண்டு கொள்ளவில்லை என்று தோழர்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம். CNN ஐ பார்த்துக்கொண்டிருந்ததில் அது எவ்வளவு உண்மை என்று தோன்றியது. நாகை மீனவ கிராமங்களுக்குப் பதில், அங்கு "beach resorts"ம் மேற்கத்திய சுற்றுலாப் பயனிகளும் பாதிக்கப்பட்டிருந்தால் ஊடகங்கள் அவற்றின் "சின்ன"த்திரைகளில், நாகைக்கும் சற்று அதிக இடம் ஒதுக்கியிருக்கலாம்.
ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, அடுத்தவர்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்ப்பதை விட நாம்தான் நமக்கு உதவியாக இருக்க வேண்டும்...
ஆனால், கோலங்களையும், மெட்டி ஒலிகளையும், நேரம் தவறாமல் ஒளி பரப்பிய, சன் TVகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். எதுவுமே நடக்கதது போல் மறுநாளிலிருந்து வேலைபார்த்துக் கொண்டிருக்கும் TCSகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
எனக்கு வயிற்றை குமட்டுகிறது...
பொதுவாகவே அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் நமது மக்களுக்கு ரொம்ப சகஜம்.
ஒரு சாமன்யனைக் கேட்டால் "சுனாமி, எனக்கு ஒரு புதிய வார்த்தை. செத்துபோனவர்கள் பாவம்" அவ்வளவுதான் அவன் பதிலாய் இருக்கும்.
அதிலும் இறந்தவர்கள் எல்லாம் ஏழைகள்...இருக்கும் பொழுதே அவர்கள் எல்லாம் வெறும் எண்ணிக்கைகள் தான்....இறக்கும் போது மட்டும் அரசாங்கமும், தொலைகாட்சிகளும் அவர்களுக்கு எங்கே ராஜ மரியாதை செய்துவிடப் போகின்றனர்.
அரசாங்கத்தையும், ஊடகங்களையும் தாண்டி மனிதம் இருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...இறந்தவர்களும், பிழைத்தவர்களும் வெரும் எண்ணிக்கைகள் அல்ல, அவர்களும் நம்மைப்போல கனவுகளும், கற்பனைகளும், ஊனும் உயிரும் கொண்ட மனிதர்கள்தான். அவர்களின் பிறப்புக்கும், இறப்புக்கும் ஏதாவது ஒரு பொருள் இருக்க வேண்டும்.
நான் தேடிக்கொண்டிருக்கிறேன்...
உங்களுக்குத் தெரிந்தாலும் சொல்லுங்கள்...
அதீத வலியுடன்
ஜேகே
படித்தவர்களின் கருத்துகள் - 2
//ஆனால், கோலங்களையும், மெட்டி ஒலிகளையும், நேரம் தவறாமல் ஒளி பரப்பிய, சன் TVகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். எதுவுமே நடக்கதது போல் மறுநாளிலிருந்து வேலைபார்த்துக் கொண்டிருக்கும் TCSகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.//
ரெண்டுக்கும் எப்படி முடிச்சுப் போடுறீங்கன்னு சொன்னா என்னை மாதிரி விளங்காமண்டைகளுக்கு விளங்கும்.
- TCSகளில் ஒண்ணு
காசி,
9/11 நிகழ்ச்சி நடந்த சில மணி நேரங்களில், ராமதொரைகள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டனர்....கொலையலை அடித்து மூன்று நாட்களாகியும் அனுதாபிக்க அவர்களுக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லை...இன்னும் சில நாட்களில் அவர்களும் சற்று நீழிக்கண்ணீர்(அல்லது நிஜக்கண்ணீர்) வடிப்பர். ஆனால் தற்போது கிழக்கத்தி ஏழைகளிடம் துக்கம் விசாரிப்பதைவிட, விடுமுறையிலிருக்கும் வெள்ளைகாரர்களுக்கு விளக்கம்(சுனாமி எவ்வாறு அவர்களை "பாதிக்கவில்லை" என்று) அளிப்பதுதான் அவர்களுக்கு முதல் பணி.(TCSஐயோ, ராமதொரையையோ தனிப்பட்ட முறையில் நான் குறை சொல்லவில்லை...அப்படி உங்களுக்கு தோன்றினால் மண்ணிக்கவும்)
ஜேகே
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல