ஜேகேவின் சில குறிப்புகள்: தாமரன்கோட்டை அரசு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை.

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Monday, June 02, 2008

தாமரன்கோட்டை அரசு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள தாமரன்கோட்டை(எங்க ஊருதாங்க) கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி ரபியா பேகம், 493 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் அரசுப்பள்ளிகளில் முதலிடத்தையும், மாநில அளவில் மூன்றாவது இடத்தையும், தஞ்சை மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்று தன்னிகரற்ற சாதனை படைத்துள்ளார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவரது குடும்பத்தினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வியாபாரத் தொழில் செய்வதற்காக தாமரன்கோட்டையில் குடியேறினர். இவரது தகப்பனார் முதலில் ஒரு பெட்டிக்கடை வைத்திருந்தார். பெட்டிக்கடையில் போதிய வருமானம் இல்லாததால் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வளைகுடா நாட்டிற்கு வேலைக்குச் சென்றிருக்கிறார். இவ்வாறான ஒரு சாதரண பின்னனியைக் கொண்ட செல்வி ரபியா பேகம், ஒரு சாதரண அரசு பள்ளியில் படித்து மாநில அளவிலான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது பள்ளியைச் சேர்ந்தவர்களுக்கும் ஊர்வாசிகளுக்கும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது.

அரசு பள்ளிகளும், சரியாக நிர்வாகம் செய்தால், நல்ல கல்வியைத் தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். செல்வி ரபிகா பேகத்திற்கு வாழ்த்துக்கள்.

http://thatstamil.oneindia.in/news/2008/05/30/tn-sslc-state-topper-ram-ambigai.html

http://www.andhimazhai.com/news/viewmore.php?id=7550
Girl finishes State third

Labels: ,

படித்தவர்களின் கருத்துகள் - 4

At Mon Jun 02, 08:50:00 PM GMT-6, Blogger ஜோதிபாரதி சொன்னது

Vazhtthukkal!

Anbudan,
Jothibharathi.

 
At Tue Jun 03, 03:49:00 AM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

ஜோதிபாரதி, உங்கள் வாழ்த்துக்களை ரபிகா பேகத்திடம் தெரிவிக்கிறேன். மிக்க நன்றி
ஜேகே

 
At Wed Jun 11, 09:57:00 AM GMT-6, Blogger ram சொன்னது

மேல்நிலைப்பள்ளி மாணவி?
பத்தாம் வகுப்பு (உயர்நிலைப்பள்ளியல்லவா)
மதிப்பெண் 493?
பத்தாம் வகுப்பில் 1000/ +2/1200
ஒரு குழப்பமளிக்கிறதே
தகவல்களை சரியாகக் கேட்டு திருத்தம் செய்யக்கேட்டுக்கொள்கிறேன்
எனது கணக்கீடு தவறென்றால் விளக்கமளிக்கவும்


இதுமகிழ்ச்சியளிக்கும் செய்தியே

தற்காலத்தில் பரம ஏழை, கிராமக் குடும்பத்தினரின் குழந்தைகள்தான்
அரசுப் பள்ளிகளுக்கு செல்கிறார்கள்.

மத்தியதரவகுப்பினர்
பெரும்பாலான நகரக் குழந்தைகள் எல்லாம் ஆங்கிலவழிக் கல்வியளிக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியிலேயே படிக்கின்றனர்
இணைய வலைப்பூக்களில் தமிழில் எழுதும் பெரும்பாலானவர்களின்
குழைந்தைகளும் அவர்களது உற்றார் உறவினர்களின்
குழந்தைகளும் மெட்ரிகுலேஷன் பள்ளியிலேயே
படித்து வருகின்றனர்.
அப்படியிருக்கையில் இந்த பெண் அரசுப்பள்ளியில் படித்து மாநில அளவில் ( அரசு சார்பற்ற பள்ளிகளையும் சேர்த்து) மூன்றாம் இடத்தைப் பெற்றிருப்பது பெருமைப் படவேண்டிய விஷயம் தான்.

இண்டி ராம்

 
At Wed Jun 11, 10:42:00 AM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

இண்டி ராம் அவர்களே,

ரபியா "அரசு மேல்நிலைப்பள்ளி"யில் படித்த பத்தாம் வகுப்பு மாணவி. அவர் பெற்றது 500 க்கு 493 மதிப்பெண்கள். தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்புத்தேர்வுகள் 500 மதிப்பெண்களுக்குத்தான் நடைபெறுகின்றன.

உங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

அன்புடன்
ஜேகே

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல