ஜான் கிரிஷாமின் "தி அப்பீல்" & ஒபாமா - ஒரு புனைவு
சட்டத்துறை சார்ந்த விறுவிறு புதினங்களுக்குப் பெயர் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஜான் கிரிஷாமின் புத்தம் புதிய படைப்பு "தி அப்பீல்". இந்த கதை அலசும் முக்கியமான விடயம் தேர்தல் வெற்றிகள் எப்படி பணத்தினால் வாங்கப்படலாம் என்பதாகும். ஒரு பெரும் பண முதலை, தனக்கு வேண்டிய தீர்ப்பை பெருவதற்காக, ஒரு மாகாண உச்ச நீதிமன்ற தேர்தலில், அவர் தேடிக்கண்டு பிடித்த வேட்பாளரை நிறுத்தி, நிறைய பணம் செலவு செய்து அவரை வெற்றிபெறச் செய்கிறார். இந்தக் கதையையும், தற்போதைய அமெரிக்க அதிபர் தேர்தல் நிகழ்வுகளையும் ஒப்புநோக்குவது தவிர்க்கவியலாததாகிறது. :)
அதற்கு முன் புதினத்தின் கதைச் சுருக்கம். க்ரேன் கெமிக்கல்ஸ் நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக பல டன் எடையுள்ள வேதிக்கழிவுகள் அடங்கியுள்ள பீப்பாய்களை போமோர் எனும் ஊரின் ஒதுக்குபுறமான இடத்தில் புதைக்கிறது. வேதிப்பொருள் கசிந்து நிலத்தடி நீரில் கலப்பதால் அதனை பயன்படுத்தும் அவ்வூர் மக்கள் புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். புற்று நோயால் பதிக்கப்பட்ட ஜெனட் பேக்கர் க்ரேன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கிறார். வழக்கின் தீர்ப்பில் ஜூரி, க்ரேன் கெமிக்கல்ஸ் ஜேனட் பேக்கருக்கு 41 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும் எனத்தீர்ப்பளிக்கிறது. க்ரேன் கெமிக்கல்சின் பங்கு கனிசமாக வீழ்ச்சியடைகிறது. நிறுவனம் திவாலாகும் நிலையில், அதன் அதிபதி கார்ல், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அப்பீலுக்கு வரும்பொழுது எப்படியும் சாதகமான தீர்ப்பை பெற முயல்கிறார்.
அதற்காக, மேல்முறையீடிற்கு முன் வரும் உச்ச நீதிமன்ற தேர்தலில் தனக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கக்கூடிய ஒரு நீதிபதியை தேர்ந்தெடுக்க முயற்சி செய்கிறார். அதற்காக, நல்ல தோற்றமும், பேச்சாற்றலும் உடைய, மக்களிடம் எடுபடக்கூடிய, இதுவரை எந்த பதவியும் வகித்திராத ஒரு வழக்கறிஞரை கண்டுபிடித்து அவரை தேர்தலில் வேட்பாளராக போட்டியிட சம்மதிக்கவைக்கிறார். அதுவரை நீதிபதியாக இருந்தவரின் கடந்த கால தீர்ப்புகளை தமது தேவைக்கேற்ப திரித்து விமர்சனம் செய்கிறார். பணத்தை நிறைய செலவு செய்து தேர்தல் பிரச்சாரம் செய்து, மக்களிடையே அப்போதிருக்கும் நீதிபதியின் மீது ஒரு பய உணர்சியை ஏற்படுத்தி, தனது வேட்பாளரை வெற்றி பெற வைக்கிறார். தீர்ப்பை தனக்கு சாதகமாகப் பெற்றுக்கொள்கிறார்.
இந்த கதையில் வரும் நீதிபதி வேட்பாளரின் பாத்திரத்திற்கும், ஒபாமாவிற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. நான்கைந்தாண்டுகளுக்கு முன்னர் ஒபாமாவை பெரும்பாலானோருக்கு தெரியாது. அதிகமான பதவிகள் வகித்தவரல்ல. அதனால் அவர் எப்படி முடிவெடுப்பார் எனத் தெரியாது. மக்களின் தற்போதை பல்ஸிற்கேற்ப நிலையெடுத்து விளாவாரியாகப்பேசலாம். எதிரிகளை விமர்சிக்கலாம். பிரச்சாரத்திற்கான பணம் எக்கச்சக்கமாய் இருக்கிறது. அருமையாகப் பேசுகிறார், நல்ல தோற்றம். இதைவைத்து மக்களை கவர்கிறார்.
ஆக, எனது இந்த சதிக்கதையின் (conspiracy theory) நீதி (அல்லது கேள்வி): இவரும் இன்னொரு "மஞ்சூரியன் வேட்பாளராக" இருப்பதற்கான சாத்தியகூறுகள் என்ன? :)
Labels: ஆங்கிலப் புதினம், ஒபாமா, ஜான் கிரிஷாம்
படித்தவர்களின் கருத்துகள் - 4
interesting comparison..
but anything is possible in
this world..u never know..!!
Sen! Thanks for your comments.
How you have drawn parallels here is correct. But why Obama? How is he worser than others? Or how others are better? Is not-being-known-few-years-back the criterion? Are you bitten by 'popularity' bug?
PS: I dont know enough about Obama & Hiliary to compare them. To me, everyone look the same. I think you picked Obama since "low-popularity" was a primary aspect of your comparison. Am I right?
சதீஷ், நீங்கள் சொல்வது சரிதான். ஹிலாரி இரண்டு முறை செனட்டராகவும் இரண்டு முறை வெள்ளை மாளிகையிலும் இருந்திருக்கிறார். மெக்கெயினும் பலமுறை செனட்டராக இருந்திருக்கிறார். ஒவ்வொரு விடயத்திலும் என்ன நிலைப்பாட்டை எடுதிருக்கிறார்கள் என்பதை அவதானிக்கலாம். இப்போதைய மக்களின் பல்ஸிற்கேற்ப நிலையெடுத்து பேசமுடியாது. ஹிலாரியின் இராக் ஓட்டு அவரை இன்னும் துரத்துகிறது. ஒபாமாவிற்கு அப்படியில்லை. ஒபாமா மற்றவர்களைவிட மோசமானவர் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம். அவருடைய அருமையான பேச்சைத்தவிர
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல