ஜேகேவின் சில குறிப்புகள்: செலாமட் தடாங் க மலேசியா

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Monday, March 03, 2008

செலாமட் தடாங் க மலேசியா

ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும் பொழுதும் எனது வருத்தமும் பொறாமையும் அதிகரிக்கும். அதேதான் இந்தமுறை மலேசியா சென்ற பொழுதும். இந்தியா ஒரு பின் தங்கிய நாடு(வளரும் நாடு என்பதெல்லாம் சும்மா நம்மை நாமே முதுகு சொறிந்துகொள்ளுதல்) என்பது நாம் அறியாத விசயம் அல்ல. ஆனால் எவ்வளவு பின் தங்கியது என்பதை வெறும் புள்ளிவிபரங்களைப்பார்த்தோ செய்திகளைப்படித்தோ புரிந்துகொள்ள முடிவதில்லை. மற்ற நாடுகள் எவ்வளவு வளர்ந்திருக்கின்றன என்பதை நேரில் பார்க்கும்பொழுதே அது மண்டையில் உறைக்கிறது. இந்தியாவைப் போலவே மலேசியாவும் பிரித்தானியரிடம் இருந்து கடந்த நூற்றாண்டின் பின்பகுதியில் சுதந்திரம் பெற்றது. ஆரம்பத்தில் இந்தியாவைபோலவே ஏழை நாடாகத்தான் இருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் கொள்கைகளாலும் நடவடிக்கைகளாலும் தற்போது அபரிமிதமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. 2010ல் வறுமையை முற்றிலும் ஒழித்துவிடுவோம் என்கிறார்கள். கோலாலம்பூர், எந்த ஒரு வளர்ந்த நாட்டின் நகருக்கும் நிகராக விளங்குமென நினைக்கிறேன். வெறும் 2 கோடி மக்கள் தொகையுள்ள ஒரு நாட்டிற்கு, அதுவும் இந்தியாவின் தன்மைகள் பலவற்றையும் பெற்று, இந்தியாவிற்கு வெகு அருகில் இருக்கும் ஒரு நாட்டிற்கு, இப்படி அபரிமிதமாக வளர்ந்து மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய இயலுகிறது. இந்தியாதான் இன்னும் கக்கூஸ் முதல் கரண்ட் வரையிலான எந்த அடிப்படைத் தேவைகளையும் ஒழுங்காக பூர்த்தி செய்யாமல், கடைந்தெடுத்த வறுமையில் மக்களைப்போட்டு வதைக்கிறது. சாதியால், மதத்தால், வகுப்பால் சிதறுண்ட ஆண்டை-அடிமைத்தனம் நிறைந்த சமூகங்களும், சுயநலமிக்க, தீர்க்கநோக்கமற்ற, அறிவற்ற தலைவர்களும், எவ்வளவு சகதியையும் சகித்துக்கொள்ளும் உணர்வற்ற, கல்வியறிவற்ற, மூடநம்பிக்கைகளில் மூழ்கிபோன சோம்பேறி மக்களும்தான் இதற்கு காரணம். ஒவ்வொரு நிமிடமும் நமது இயலாமையை, நூற்றாண்டுத் தோல்விகளை எண்ணி நான் வெட்கித் தலை குனிகிறேன்.

மலேசியாவில் ஆச்சரியப்படத்தக்க இன்னுமொரு விசயம். பொருட்கள் எவ்வளவு விலை குறைவாக உள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 20ரூபாய்(1.8 வெள்ளி), CNG 10ரூபாய்(.8 வெள்ளி). பெரும்பாலான கார்கள் CNGயில் தான் ஓடுகின்றனவாம். எரிபொருள் செலவு மிகமிகக் குறைவு. அற்புதமான பல்வழிச் சாலைகளும், குறைந்த எரிபொருள் விலையும், பொதுவாக விலைவாசியை குறைவாக வைத்திருக்கின்றனவென நினைக்கிறேன். குளிரூட்டப்பட்ட நடுத்தர தமிழ் உணவகங்களில் உணவின் விலை சென்னையில் உள்ளதைவிட குறைவாக உள்ளது. சாதா தோசை 15ரூபாய்க்கும், மசால் தோசை 25 ரூபாய்க்கும் கிடைக்கிறது.

இந்த வாரத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலை மக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள், முக்கியமாக தமிழர்கள். HINDRAFன் நிலைப்பாட்டை பெரும்பான்மையான தமிழர்கள் ஆதரிப்பதாகவே தோன்றுகிறது. வாடகைகார் ஓட்டும் தமிழர்களிடம் பேசியபொழுது அவர்கள் எல்லோரும் இதை வலியுறுத்தினார்கள். நான் சென்ற நிறுவனத்தில் பணியாற்றும் மேலாளர்(ஒரு தமிழர்) மட்டுமே HINDRAFன் மீது குறை சொன்னார்.

இன்னொரு சுவையான விசயம். இந்த முறை பணியின்பொழுது நான் சந்திக்க நேர்ந்த குழு ஒரு முழுமையான் பன்னாட்டுக்குழு. மொத்தம் இருந்த ஒன்பது பேரில், ஒரு மலேசிய சீனர், இரண்டு மலேசிய தமிழர்கள், மூன்று அமெரிக்கர்கள், ஒரு மெக்சிகோக்காரர், ஒரு உக்ரேன் நாட்டவர், ஒரு செக் நாட்டவர் அடக்கம். ஒவ்வொரு மொழியிலும் எப்படி வணக்கம் சொல்வார்கள் என்பதை கேட்டு அட்டவணையாக தொகுத்துள்ளேன். :)


செலாமட் தடாங் க மலேசியா - அதாங்க "மலேசியாவுக்கு வாங்க"

Labels: , ,

படித்தவர்களின் கருத்துகள் - 6

At Mon Mar 03, 11:01:00 AM GMT-6, Anonymous Anonymous சொன்னது

I would consider this as an irresponsible post, particularly when you say you are ashamed comparing India's progress against Malaysia's!

The comparison is absolutely not fair. You cannot compare the (1)size (land and people); (2) The deep legacy; (3) cultural and social diversity; (4) the nature of political structure maintaining a largest democracy.

Anything small in size and focused is controllable and manageable. But, its managing the large social structure that is beyond ones' imagination is what matters. Living with social integrity in such condition is what makes us proud.

I hope you show remorse to what you said in your post.

 
At Mon Mar 03, 11:23:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு வக்கனையாக என்னைத்திட்டும் அனாமதேய அன்பரே. 70ரூபாய் சம்பளத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் ஏர்பிடிப்பவனிடமும், மாதம் 800வெள்ளி சம்பளத்திற்காக ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் வட்டிக்கு வாங்கி கட்டி மலேசியாவிற்கும், அமீரகத்திற்கும் சென்று வயைக்கட்டி வயிற்றைக்கட்டி வேலைபார்க்கும் பாவப்பட்ட ஜென்மங்களிடமும் சொல்லுங்கள் "இந்தியா பெரிய நாடாக இருப்பதாலும், இந்தியாவின் ஜனநாயக முறையினாலும்தான் உங்களுக்கு நல்ல கல்வியயையும், வேலையையும் தரமுடியவில்லை"யென்று. உங்கள் காரணத்தை ஏற்றுக்கொண்டு உங்களுக்கும், நீங்கள் கொண்டாடும் "பெருமைபடத்தக்க இந்தியாவிற்கும்" வணக்கம் வைப்பார்.

 
At Mon Mar 03, 11:27:00 AM GMT-6, Blogger Vasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன் சொன்னது

கனிந்த வணக்கம்.

எங்கள் தேசிய மொழியான 'பஹாச மலேசியா'(Bahasa Malaysia)
Bahasa - 'பாஷை' எனபதிலிருந்து மருவி வந்தது.

'செலாமாட் டாத்தாங் க மலேசியா'
என்றுதானே சொல்ல வந்தீர்!

 
At Mon Mar 03, 11:32:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

செலாமாட் டாத்தாங் வாசுதேவன் இலட்சுமனன்.

ஆங்கிலத்தில் கொடுத்ததை உத்தேசமாக தமிழில் எழுதினேன். நிச்சயம் தவறாக இருக்கும் என்று தெரியும். சரியான உச்சரிப்பை சுட்டிக்காட்டியதற்கு நன்றி

 
At Mon Mar 03, 12:02:00 PM GMT-6, Anonymous Anonymous சொன்னது

First off, no one is scolding you. You have problem in interpreting feedback vs scolding. Its up to you to take a feedback or leave it out depending on your level of maturity.

Second, even if sitting in America, I am an Indian and take pride in being an Indian. I dont like to catch some eye candy and try/compare America with India.

 
At Mon Mar 03, 12:14:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

அனமதேய அன்பரே! வளருங்கள்.

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல