முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்
முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் யூதரில்லை.
பின், அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கம்யூனிஸ்டில்லை
பின், அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியில்லை
பின் என்னைத் தேடி வந்தார்கள், எதிர்த்துக் கேட்க யாரும் மிச்சமில்லை.
:(
- ஒரு ஜெர்மன் பாதிரியார் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் எழுதிய கவிதையின் உத்தேச தமிழ் வடிவம்.
படித்தவர்களின் கருத்துகள் - 7
அசல் கவிதைக்கான இணைப்பையும் தந்திருக்கலாமே...
தங்கள் கருத்துக்கள் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!!
நண்பர்களே, இது ஒரு ஜெர்மன் பாதிரியார் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் எழுதிய கவிதையின் உத்தேச தமிழ் வடிவம். இந்த தமிழ் வடிவமே நமது உபயம்(பலபேர் இதை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள்).
பாபா, தமிழ்குழந்தை,
வருகைக்கு நன்றி.
எனக்கு சரியான அசலின் இணைப்பு கிடைக்கவில்லை. Sorry
---பலபேர் இதை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்---
அப்படி தேடியதில் கிடைத்த ஒன்று...
கடைசியாக என்னைத் தேடி வந்தார்கள் - பிகே சிவகுமார்
அந்த கவிதை அருமை..
அசல் எழுதிய்வரைப்பற்றிய
தகவல்களை அறிய
இங்கு செல்லவும்
இண்டி ராம்
http://en.wikipedia.org/wiki/First_they_came...
கயல்விழி முத்துலெட்சுமி, இண்டி ராம்,
உங்களது பின்னூட்டங்களுக்கு நன்றி
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல