நெகிழும் சீனப் பெருஞ்சுவர்(வலைச்சுவர்)
என்ன ஆச்சரியம். சீனத்தின் வலைத்தடுப்புச்சுவர் நெகிழத் தொடங்கியிருக்கிறது. பல ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த BBC செய்தித்தளம் இப்பொழுது தெரிகிறது. சென்ற வாரம்கூட வலைப்பதிவுகளை படிக்க முடியவில்லை. blogspot மற்றும் wordpress முடக்கப்பட்டிருந்தது. அதையெல்லாவற்றையும் விட ஆச்சரியமானது விக்கியப்பீடியாவைக் கூட தடுத்திருந்தார்கள்.
நேற்றுமுதல் வலைப்பதிவுகளை படிக்க முடிந்தது. இன்று சோதித்த பொழுது விக்கிப்பீடியாவும் திறக்கிறது. தமிழ் விக்கியை விட ஆங்கில விக்கி மெதுவாக திறக்கிறது போலிருக்கிறது. எனினும் வீக்கி, வலைப்பதிவுப் பக்கங்கள் இல்லாமல் கையொடிந்திருந்தது. இப்பொழுது கொஞ்சம் மகிழ்ச்சி.
பலகாலமாக இருந்துவரும் இவ்வலைத் தணிக்கை பற்றி மக்கள் சீனத்தின் திடீர் மனமாற்றம் மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. திபெத் போராட்டங்களால் உலக அளவில் தமது பெயருக்கு ஏற்பட்டிருக்கும் கலங்கத்தை கலைவதற்கான ஏற்பாடா? இல்லை உலக ஒலிம்பிக் சம்மேளனத்தின் இந்த வேண்டுகோளுக்கு செவி மடுத்திருக்கிறார்களா எனத்தெரியவில்லை. வலைப் பயனர்கள் வலைத்தணிக்கையை பெரும்பாலும் தொழில்நுட்பம் கொண்டு தாண்டிவிடலாம். எனவே பெரும்பாலும் அது உபயோகமற்றது என நினைத்துவிட்டார்களா. எப்படி இருப்பினும் இது ஒரு வரவேற்கவேண்டிய நடவடிக்கை. எத்தனைகாலம் இப்படியெனப் பார்க்கலாம்.
Labels: சீனா, திபெத், வலைத்தணிக்கை
படித்தவர்களின் கருத்துகள் - 0
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல