ஜேகேவின் சில குறிப்புகள்: வலைப்பதிவு எழுதுவது ஆரோக்கியமானதாம்.

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Sunday, June 08, 2008

வலைப்பதிவு எழுதுவது ஆரோக்கியமானதாம்.

ஓயாமல் வலைப் பதிவுகள் எழுதுவதும், படிப்பதும், பின்னூட்டமிடுவதும் ஒரு வகையான OCD வியாதியாகத்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். SCIAM சஞ்சிகையின் ஜூன் மாத இதழ் கட்டுரையில் வலைப்பதிவு எழுதுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கலாம் என்கிறார்கள்(Blogging--It's Good for You). ஒருவர் உணர்வுகளையும் எண்ணங்களையும் எழுத்தில் வெளிப்படுத்தும் பொழுது பல சுகாதார பலன்களைப் பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு எழுதுபவர்கள் குறைந்த மன அழுத்தம், நல்ல தூக்கம், நினைவாற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பலன்களைப் பெறுகிறார்களாம்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் தமது எண்ணங்களை எழுத்தில் பகிர்ந்துகொண்ட ஒரு சிலர், மற்றவர்களை விட மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாக இருந்ததாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. இதுபோலவே வலைப்பதிவுகள் எழுதுவதும் உடல் ஆரோக்யத்திற்கு வழிகோளும் என்கிறார்கள்.

கட்டுரையிலிருந்து...

"Scientists now hope to explore the neurological underpinnings at play, especially considering the explosion of blogs. According to Alice Flaherty, a neuroscientist at Harvard University and Massachusetts General Hospital, the placebo theory of suffering is one window through which to view blogging. As social creatures, humans have a range of pain-related behaviors, such as complaining, which acts as a “placebo for getting satisfied,” Flaherty says. Blogging about stressful experiences might work similarly."

வலைப்பதிவு எழுதும் பொழுது டோப்பமைன்(dopamine) என்ற வேதிப்பொருள் குருதியில் அதிகம் காணப்படலாம் என்றும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வேதிப்பொருள் இசை, ஓவியம் போன்றவற்றை அனுபவிக்கும் பொழுதும் குருதியில் அதிகரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த ஆய்வுகள் எல்லாம் ஆரம்ப நிலையில் உள்ளவை. இன்னும் திட்டவட்டமாக எதையும் கூறுவதற்கில்லையாம். இதைப்பற்றி மேலும் தீவிரமாக ஆராய்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன.

ஆகவே நண்பர்களே, எல்லோரும் தொடர்ந்து பதிவுகள் எழுதி சுகாதாரமான வாழ்க்கையை பெறுங்கள் என்று வாழ்த்திவிடலாம் தான்...ஆனால் இந்த கட்டுரையை படித்துப்பாருங்கள்...


In Web World of 24/7 Stress, Writers Blog Till They Drop


வலைப்பதிவு எழுதுவதையே முழுநேரப்பணியாக கருதும் சிலர் மிகுந்த மன உளைச்சலுக்கு உட்படுகிறார்கள் என்று கூறுகிறது இக்கட்டுரை.

இந்த கட்டுரையிலிருந்து...

Other bloggers complain of weight loss or gain, sleep disorders, exhaustion and other maladies born of the nonstop strain of producing for a news and information cycle that is as always-on as the Internet.

எனவே...என்ன செய்றதுன்றத நீங்களே முடிவு பன்னிக்கோங்க....

Labels:

படித்தவர்களின் கருத்துகள் - 4

At Mon Jun 09, 08:49:00 AM GMT-6, Blogger கிரி சொன்னது

//வலைப்பதிவு எழுதுவதையே முழுநேரப்பணியாக கருதும் சிலர் மிகுந்த மன உளைச்சலுக்கு உட்படுகிறார்கள் என்று கூறுகிறது இக்கட்டுரை//

அப்படியாயாயாயாயாயாயாயா :-?

 
At Mon Jun 09, 12:55:00 PM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

கிரி...

நீங்கள் முழு நேரமா அல்லது பகுதி நேரமா...

 
At Mon Jun 09, 01:02:00 PM GMT-6, Blogger பிரேம்ஜி சொன்னது

இது புது விஷயம்.பகிர்வுக்கு நன்றி.

 
At Mon Jun 09, 01:41:00 PM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

பிரேம்ஜி...உங்களின் வருகைக்கும், ஊக்கத்திற்கும் என் நன்றிகள்

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல