ஜேகேவின் சில குறிப்புகள்: எல்லோருக்கும் வணக்கம்.

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Sunday, June 08, 2008

எல்லோருக்கும் வணக்கம்.

மாதத்திற்கு ஒரு பதிவு, சில நேரங்களில் வருடத்திற்கு ஒரு பதிவு என எப்போதாவது எழுதும் நான் தினசரி ஒன்று எழுதுவது எப்படி என்று தெரியவில்லை. பார்க்கலாம். என் வலைப்பதிவை இந்தவார நட்சத்திரப்பதிவாக முன்னிறுத்தியிருக்கும் தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி.

பொதுவாக எனது பதிவுகள் "இதை"ப்பற்றித்தான் என்று இருந்ததில்லை. என்ன தோன்றுகிறதோ அல்லது எதைப்பற்றியெல்லாம் எழுத முடிகிறதோ அல்லது எழுத நேரம்கிடைக்கிறதோ அதைப்பற்றியெல்லாம் எழுதுவேன். யாரும் படித்து பாராட்ட வேண்டும், பின்னூட்டமிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு "சிலகுறிப்புகளில்" ஒன்றும் இருந்ததில்லை. எழுதவேண்டும் என்ற ஒரு itchற்காகவே நான் பெரும்பாலும் எழுதுவது. எப்போதாவது யாராவது எட்டிப்பார்த்து பின்னூட்டமிட்டால் நிச்சயம் மகிழ்ச்சிதான். அது போலவே இந்த வாரமும் போகும் என்று நினைக்கிறேன்.

எனது ஆர்வக் கோளாறுகள் பல களங்களைத் தொடுபவை. நான் ஆழ உழுவதை விட அகல உழும் டைப். அன்றாடம் படிக்கும், கேட்கும், சந்திக்கும் பல விடயங்களை பதிவில் எழுத வேண்டும் என்று நினைப்பேன். வெகு அரிதான நேரங்களிலேயே அது நடக்கும். எப்பொழுதாவது எழுதத்தோன்றும் பொழுது சரக்கு ஒன்றும் இருக்காது. இப்போதும் அப்படியே. மிக ஆர்வத்துடன் எழுத யத்தனித்தாலும் ஏழெட்டு பதிவுகளுக்கு சரக்கு எங்கிருந்து தேற்றுவது என்பதே எனக்குள்ளிருக்கும் இப்போதைய முக்கிய கேள்விக்குறி.

சொற்குற்றம், பொருட்குற்றமெல்லாம் என் பதிவில் விரவிக்கிடக்கும். தவறாமல் சுட்டிக்காட்டுங்கள். கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும், அவற்றை எப்பொழுதும் வரவேற்பேன்.

Labels:

படித்தவர்களின் கருத்துகள் - 23

At Mon Jun 09, 01:34:00 AM GMT-6, Blogger Divya சொன்னது

நட்சத்திர வாழ்த்துக்கள் ஜேகே!!

 
At Mon Jun 09, 01:36:00 AM GMT-6, Blogger Divya சொன்னது

\\பொதுவாக எனது பதிவுகள் "இதை"ப்பற்றித்தான் என்று இருந்ததில்லை. என்ன தோன்றுகிறதோ அல்லது எதைப்பற்றியெல்லாம் எழுத முடிகிறதோ அல்லது எழுத நேரம்கிடைக்கிறதோ அதைப்பற்றியெல்லாம் எழுதுவேன். யாரும் படித்து பாராட்ட வேண்டும், பின்னூட்டமிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை.\\

எதிர்பார்பற்ற எண்ணம் பாராட்டத்தக்கது:))

 
At Mon Jun 09, 01:46:00 AM GMT-6, Blogger .:: மை ஃபிரண்ட் ::. சொன்னது

வாழ்த்துக்கள் ஜேகே..

தினமும் எழுதமுடியலைன்னு வருத்தம் வேண்டாம். நீங்க எழுதுறதே நல்ல பதிவுகள்தான். அது போதும் எங்களுக்கு. கலக்குங்க.

 
At Mon Jun 09, 01:57:00 AM GMT-6, Blogger நாஞ்சில் பிரதாப் சொன்னது

சும்மா, பூந்து கலக்குங்க தலைவரே....

 
At Mon Jun 09, 04:10:00 AM GMT-6, Blogger திகழ்மிளிர் சொன்னது

வாழ்த்துக்கள்

 
At Mon Jun 09, 04:35:00 AM GMT-6, Blogger சந்தோஷ் = Santhosh சொன்னது

ராசா நீயா இந்த வார நட்சத்திரம்.. அடிச்சி விளையாடு ராசா.. வழக்கம் போல கலக்கு நீயி..

 
At Mon Jun 09, 07:31:00 AM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

Divya,
.:: மை ஃபிரண்ட் ::.,
நாஞ்சில் பிரதாப்,
திகழ்மிளிர்,
சந்தோஷ் = Santhosh,

உங்கள் அனைவரது வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

 
At Mon Jun 09, 07:35:00 AM GMT-6, Blogger தம்பி சொன்னது

ஜே.கே.ரித்திஸ் மாதிரி இந்த வாரம் ரசிகர்களை பொளந்து கட்டவேண்டுமாய் வேண்டுகிறோம்

 
At Mon Jun 09, 07:49:00 AM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

தம்பி, அது யாருங்க "ஜே.கே.ரித்திஸ்".

"பொளந்து கட்டவேண்டுமா"...

அய்யய்யோ... நம்மல பொளந்து கட்டிருவிங்க போலருக்கே.

 
At Mon Jun 09, 08:44:00 AM GMT-6, Blogger கிரி சொன்னது

//தம்பி, அது யாருங்க "ஜே.கே.ரித்திஸ்".//

இப்படி ஒரு கேள்வி கேட்ட ஜே கே வை ஒரு நாளைக்கு 4 பதிவு எழுதும்படியும், அதில் இரு பதிவு ரித்தீஷ் புகழ் பாடும் படியும் இருக்க வேண்டும் என்று அகில உலக ரசிகர் மன்றம் சார்பாக ஆணையிடுகிறேன்.

 
At Mon Jun 09, 09:04:00 AM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

வாங்க கிரி..

நாலு பதிவா...கால் வாசி பதிவுக்கே கண்ண கட்டுதே..

 
At Mon Jun 09, 09:42:00 AM GMT-6, Blogger பிரேம்ஜி சொன்னது

வருக வாழ்த்துக்கள்.

 
At Mon Jun 09, 09:50:00 AM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

மிக்க நன்றி பிரேம்ஜி!

 
At Mon Jun 09, 10:51:00 AM GMT-6, Anonymous viknesh சொன்னது

vaazthukal...polanthu kadda vendam.. polakame kaddunga...

 
At Mon Jun 09, 11:03:00 AM GMT-6, Blogger அதிஷா சொன்னது

ஆரம்பமே அசத்தலா இருக்கே ...

 
At Mon Jun 09, 12:54:00 PM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

விக்னேஷ், அதிஷா...

உங்கள் வரவிற்கும், வரவேற்பிற்கும் எனது அன்புநிறைந்த நன்றிகள்

அன்புடன்
ஜேகே

 
At Mon Jun 09, 01:36:00 PM GMT-6, Blogger கோபிநாத் சொன்னது

நட்சத்திர வாழ்த்துக்கள் :)

 
At Mon Jun 09, 01:38:00 PM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

கோபிநாத், உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் பல நன்றிகள்.

 
At Mon Jun 09, 04:52:00 PM GMT-6, Blogger இலவசக்கொத்தனார் சொன்னது

வாழ்த்துகள்

 
At Tue Jun 10, 07:35:00 AM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

நன்றி இலவசக்கொத்தனார்.

 
At Tue Jun 10, 07:51:00 AM GMT-6, Blogger மங்களூர் சிவா சொன்னது

ஸ்டார் வார வாழ்த்துக்கள் ஜேகே!!

 
At Wed Jun 11, 12:28:00 PM GMT-6, Blogger சுரேகா.. சொன்னது

வாழ்த்துக்கள் சார்! கலக்குங்க!

 
At Thu Jun 12, 11:06:00 PM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

மங்களூர் சிவா, சுரேகா,

நன்றி

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல