குரோம் உலாவி
மைக்ரோசாப்ட்காரர்களுக்கு பெரிய அதிர்ச்சியுடன் விடிந்திருக்கும் இன்றைய தினம். மோசில்லா நிறுவனத்தின் நன்மக்களும் இந்த திடீர் தாக்குதலை எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். குரோம் எனும் வலை உலாவியை கூகிள் இன்று வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது. குரோம் பற்றிய செய்திகளை கூகிள் வித்தியாசமான முறையில் ஒரு காமிக்ஸ் கதை வடிவில் வெளியிட்டிருக்கிறார்கள்.
குரோம் காமிக்சில் சொன்னதை கூகிள் உண்மையில் செய்திருந்தால், இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கும், ஃபயர்ஃபாக்ஸுக்கும் இது ஒரு பெரிய போட்டியாக அமையும். கூகிளின் பிரபலத்தினால் குரோம் வெகு எளிதில் மக்களுக்கு எடுத்துச் செல்லப்படலாம். வலையின் மிகப் பெரிய நிறுவனமாக இருக்கும் கூகிள் தனது வலை சார்ந்த செயலிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு உலாவிகளின் துணை தேவை. தற்போது, IE மற்றும் பயர்பாக்ஸ் போன்றவற்றின் திறனைப் பொருத்துதான் கூகிள் செயலிகளின் திறன் அமையும். உதாரணமாக ஜிமெயில், கூகிள் மேப்ஸ் போன்ற வலைச் செயலிகளில் பயன்படுத்தப் படும் AJAX நுட்பம் IEயில் ஒரு மாதிரியும் பயர்பாக்சில் வேறு ஒரு மாதிரியும் செயல்படும். அதற்கு காரணம் அந்த உலாவிகள் ஜாவாஸ்கிரிப்டின் மூலம் HTTP கோரிக்கைகளை (Request) நிறைவேற்றும் முறையை வெவ்வேறுவிதமாக செய்கின்றன. அவற்றின் திறனும் அதைச்சார்ந்து வேறுபடும்.
மூன்றாம் நிறுவணங்களின் அல்லது எதிரி நிறுவணங்களின் (மைக்ரோசாப்ட்!) உலாவிகளை நம்பியிருப்பதால், கூகிள் தான் நினைக்கும் செயலிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் சுணக்கம் ஏற்படுவதாக கருதுகிறது. தானே ஒரு உலாவியை வெளியிடும் பட்சத்தில், தமது வலைச் செயலிகளுக்கு தேவையான செயல்திறன்களை உலாவியில் ஏற்படுத்த முடியும். அதன் மூலம் குரோம் பயனர்களுக்கு மற்ற உலாவிகளின் பயனர்களைவிட மேலும் சிறப்பான செயல்திறன்கள் கொண்ட வலைச்செயலிகளை கூகிள் வழங்கும். மைக்ரோசாப்டின் இலாபகரமான MS-Word/Excel/Power Point போன்ற செயலிகளுக்கு சமமான ஆனால் மலிவான செயலிகளை வலையின் மூலமே கூகிள் தரும். இதன் மூலம் மைக்ரோசாப்டிற்கு பல முனைகளில் சவாலை கூகிள் குரோம் மூலம் வழங்குகிறது.
குரோமின் முக்கிய அம்சங்களாக குரோம் காமிக்சில் கூறப்படுபவை
- புத்தம் புதிய ஜாவாஸ்கிரிப்ட் விர்சுவல் மெஷின். இது மற்றவற்றைவிட வேகமும், சிறந்த நினைவக மேலாண்மையையும்(Memory management) உடையது என்கிறார்கள்.
- இந்த புதிய ஜாவாஸ்கிரிப்ட் விர்சுவல் மெஷினை, தற்கால வலை நுட்பங்களை கருத்தில் கொண்டு வடிவமைத்திருக்கிறார்கள்.
- ஃபயர்ஃபாக்சை போல டாபுகளுக்கு முக்கியத்துவம். ஒவ்வொரு டாபிற்கும் தனி நிரல் ஓட்டம்(Separate Process for Each Tab).
- ஒவ்வொரு நிரல் ஓட்டமும், அஷ்டாவதனிகளைப்போல, பல செயல்களை ஒரே நேரத்தில் செய்யும் திறன் கொண்டவை
- ஓம்னிபாக்ஸ் எனப்படும் சுட்டிக்கான பொட்டி. சுட்டிகள் மட்டுமன்றி, தேடு பொறியாகவும், புக்மார்கராகவும், பல அவதாரங்களை இது எடுக்கிறதாம்.
- இப்படி இன்னும் பலப் பல...
இன்னும் சில மணி நேரங்களில் தரவிறக்கி ஓட்டிப்பார்த்துவிட வேண்டியது தான்.
பிகு: இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை உலகிற்கும் அறிவிக்கும் பொறுப்பு நம்மூர்காரர் சுந்தர் பிச்சைக்கு கிடைத்திருக்கிறது. இவர் கூகிளில் துணைத் தலைவர் பொருப்பில் இருக்கிறார்.
படித்தவர்களின் கருத்துகள் - 9
JK,
வரட்டும் பார்க்கலாம்... IE7 மாதிரி மொக்கையா இல்லாமே இருந்தா சரி.... :))
என்னயிருந்தாலும் Firefox'க்குதான் First preference... :)
நானும் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
ஆனால் Add Ons களால் அகலக்கால் பரப்பியுள்ள பயர்பாக்ஸ்சை அசைப்பது கஷ்டம்தான்
சிறப்பான பதிவு.
இதில் தமிழர் ஒருவரின் பங்கிருப்பது மேலும்
மகிழ்ச்சியை அளிக்கின்றது
தனது எளிமையான வடிவமைப்பின் மூலம் அனைவரிடமும் பிரபலமாக உள்ள கூகிள் இதிலும் தன் முத்திரையை பாதிக்கும் என நம்பலாம்.
விரிவான மற்றும் பல செய்திகளை கொடுத்தமைக்கு உங்களுக்கு என் நன்றிகள்.
இராம்,hisubash,இனியா,கிரி
உங்களது வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி
குரோம் வெளியிடப்பட்டது. முதல் பார்வை
என்னால் தரவிறக்க முடியவில்லை :-(
Nice blog on a latest development. See in page 9 of the comic how google projects Testing as a differentiator.
Vijay,
ஆம் படித்தேன் 'Test Driven Development' முறையின் சாதகங்களுக்கு குரோம் ஒரு எடுத்துக்காட்டு என்கிற ரேஞ்சில் சொல்லியிருந்தார்கள். உங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்திருக்குமே?
:)
கடைசியாக நேற்று இரவு குரோமை தரவிறக்கி எனது கணினியில் வெள்ளோட்டம் விட்டாச்சு...மிக்க மகிழ்ச்சி...ஆனால் தமிழில் எழுத முடியவில்லை. கூகிள் தமிழர்களை கைவிட்டுவிட்டது போன்ற ஒரு வருத்தம் :(
இந்த கமென்டை பயர்பாக்சில் இருந்தே எழுதுகிறேன்....
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல