வன்முறை மிக்க மௌனம்
நெரிசல் மிகுந்த நம் தனிமையை
நிறைத்திருக்கிறது
வன்முறை மிக்க மௌனம்
அடர் கிளை மரங்களுதிர்க்கும்
சருகுகளாய் மிதக்கும்
சில சொற்பிணங்கள்
தட்டிடத் தட்டிடக் கொட்டிய
உண்டியல் பிளவினை உற்றுப் பார்க்கிறேன்
இன்னும் இருக்கிறதா நாணயமென்று
சென்ற மழைக் குட்டையில் முட்டையிட்டு
குஞ்சு பொறித்த கொசுக்களின்
குருதிகள் நொதித்து நாற்றமடிக்கின்றன
உன் வன்முறை வலிப்பதைவிட
அயர்ச்சியாய் இருக்கிறது
வலிகளையும், அயர்ச்சியையும் கழுவிடக்
காத்திருக்கிறேன் அடுத்த மழைக்காக
Labels: மடக்கி
படித்தவர்களின் கருத்துகள் - 3
மௌனம்,அறிவிக்கப்படாத வன்முறைதான்.
அதேவேளை, வன்முறை அயற்சி தருகிறது என்பது எனக்கு புரியவில்லை.
தொடர்ந்து எழுதுங்கள்.
செழியன்...//தொடர்ந்து எழுது//
தொடர்ந்து எழுதுவோம்..
வீட்டில் BSNL internet வேலை செய்யவில்லை. அதான் ஜிடால்கில் வரவில்லை...இன்னிக்காவது வேலை செய்யுதான்னு பார்ப்போம்
அறிவகம் உங்கள் வருகையை எதிர்பார்க்கிறது ஜெ.கே...
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல