என்ன நடக்கிறது இங்கே
ஒரே நாளில் இவ்வளவு மோசமான செய்திகளா...என்ன நடக்கிறது இங்கே. மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தலைவர் பெருமக்களே! ஏதாவது செய்யுங்கள். சீக்கிரம்.
1) தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு. : என் வண்டியில் எண்ணை காலி. இன்று போட முடியவில்லை. நாளை அலுவலகம் செல்வது கேள்விக்குறிதான்
2) நாடு முழுவதும் லாரி ஸ்ட்ரைக். இன்று நள்ளிரவு ஆரம்பம். காய்கறி விலை உயரும் அபாயம். : அப்போ சாப்பாடும் கஸ்டமா?
3) Oil Prices Return To Near-Record Highs : இன்னும் எவ்வளவுப்பா ஏத்த போறீங்க
5) ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிகள் : வீட்டுக் கடன் வட்டி விகிதம் 13.5 சதவீதமாக ஏற்றம். ஐயோ! வட்டி கட்டியே காலியாயிடுவோம் போலிருக்கே...
6) எங்கே போகிறது சென்னை? 30 நாளில் 24 கொலை : தினகரன் செய்தி. - உயிருக்காவது உத்திரவாதம் உண்டா.
7) 7 மாநிலங்களில் அபாய அளவில் ஊழல். தமிழகத்தில் மிக அதிகம் : இது ஒரு செய்தியான்னு நீங்க கேக்றது எனக்கு கேக்குது.
Labels: செய்திகள்
படித்தவர்களின் கருத்துகள் - 6
வீடு வாங்கலாம்-னு நினைச்சு வச்சிருந்தேனே.. மண்ணள்ளிப் போடறாங்களே.. பயமா இருக்கு..படிக்க.
வீடு வாங்கறதா?
கவண்ட மணி சொல்றமாதிரி ஒரு பபெர்ல வீடுன்னு எழுதி வாங்கிக்கலாம் வேணும்னா.
எல்லாம் நம்ம நேரம், என் நண்பனின் அலுவலகத்தில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட இருபது பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது எப்படி இருக்கு,
வேலைக்கும் உத்திரவாதமில்லை, இதையும் சேத்துக்கோங்க
செழியன், ஆமாம், வீட்டுக்கடன் இப்ப எட்டாக் கனி மாதிரிதான்.
Dhans,
"வேலைக்கும் உத்திரவாதமில்லை"...ரொம்ப சரி. இப்ப நிலைமை மோசமாத்தான் இருக்கு...
உங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
J.K, NEENGA,UNGALA MATHIRI PADICHAVANGA ARACIALUKU VAANGA, ENNA MATHIRI APPAVINGA VOTU PODAROM. O.K ARIVU
பதிவுகள் அருமை . உங்கள் நட்பு வட்டத்தில் இணையும் புதிய நண்பன் நான்.
ARIVUKKARASAN, என்னங்க இப்படி சொல்லீட்டீங்க...நானே எனக்கு ஓட்டு போட மாட்டேனே...
ARIVAKAM, உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல