ஜேகேவின் சில குறிப்புகள்: அதிபுது கூகிள் டாய்லெட்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Friday, June 27, 2008

அதிபுது கூகிள் டாய்லெட்

கூகிள் நிறுவனம் எதைச் செய்தாலும் அது செய்தியாகிறது. காரணம் அது மற்றவர்களைத் தாண்டி ஒரு படி மேலே சென்று எல்லோரையும் "வாவ்" என சொல்ல வைப்பதே. அது போலத்தான் இதுவும் என்றாலும், கொஞ்சம் ஓவர். இருந்தாலும் பாருங்கள், "நம்ம முதலாளிகள் எல்லாம் ஏன் இப்படி யோசிக்க மாட்டங்கறங்க" என்ற வருத்தம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

கூகிளின் தலைமை அலுவலகத்தில் உள்ள கழிவறை பற்றிதான் மேட்டர். அதுலயும் டெக்னாலஜிய ஏகத்துக்கு காட்டி அமர்க்களப் படுத்தி இருக்கிறார்களாம்.



கூகிளர்கள் வெளியேற்றிய பிறகு காகிதத்தை வைத்துக்கொண்டு சிரமப்பட வேண்டியதில்லை. பொத்தானைத் தட்டினால், முன்னால், பின்னால் என தானியங்கி தண்ணீர் அடித்து கழுவி விட்டு காயவைத்தும் விடுமாம். ஹ்ம்ம்ம்ம்

Behold the Google Office Toilet


Google Employees Even Get Japanese Space Toilets

Labels:

படித்தவர்களின் கருத்துகள் - 4

At Fri Jun 27, 02:42:00 PM GMT-6, Blogger மருதநாயகம் சொன்னது

அது என்ன Energy saver என்று ஒரு வசதி இருக்கிறதே :-)

 
At Fri Jun 27, 04:06:00 PM GMT-6, Blogger Muthu சொன்னது

this facility is available in Japan for the past 15years. most of the houses & public toilets has this facility.

 
At Fri Jun 27, 07:34:00 PM GMT-6, Blogger Nilofer Anbarasu சொன்னது

தலைப்ப பார்த்தவுடனே நா ஏதோ கூகிள் ரீடர், கூகிள் நோட் புக், கூகிள் எர்த், மாதிரி இது புதுசுன்னு நினைச்சு வந்தேன்....

 
At Fri Jun 27, 09:14:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

மருதநாயகம்,

அது சும்மா டுபாகூர்னு நினைக்கிறேன். மிகச் சிறந்த "Energy Saver" தொழில் நுட்பத்திற்கு அவர்கள் இந்திய முறையைத்தான் கையாள வேண்டும் :-)

முத்து,
நானும் கேள்விப் பட்டேன். தொழில்நுட்பத்தை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதில் ஜப்பானியர்களை மிஞ்ச முடியாது. ஆனால், அதிலும் ஒரு "Wand Cleaning"ஐ சேர்த்து கூகிளர்கள் மற்றவர்களை புருவம் உயர்த்த வைக்கிறார்கள்.

ராஜா,

சாரி ஏமாந்துட்டிங்களா.


உங்கள் அனைவரது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல