ஜேகேவின் சில குறிப்புகள்: ஷாங்காய் குறிப்புகள்.

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Monday, June 09, 2008

ஷாங்காய் குறிப்புகள்.

ஷாங்காய் வெகுவேகமாக வளர்ந்திருக்கிறது(வளர்கிறது). இங்கு வரும் யாரும் தவறிப்போய் தாம் அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ உள்ள ஒரு பெரு நகருக்கு வந்துவிட்டதாக நினைக்க நிறைய வாய்ப்பு. நாம் சீனாவின் ஒரு நகரத்தில் இருக்கிறோம் என்பதை ஆங்காங்கே தெரியும் சீன எழுத்துக்களாலும், எதிரில் வரும் சீன முகங்களாலும் மட்டுமே உணர வேண்டியிருக்கிறது. அதுவும் பெரும்பாலான சீனார்கள் மேலைநாட்டவர்கள் போலவே உடையும் அணிந்துகொள்கிறார்கள். கட்டிடங்கள் முழுவதும் அதிபுதுக்கால வடிவமைப்புகள். பளிச்சென்றும், நல்ல அகலமாகவும் அமைக்கப்பட்டிருக்கும் பல்வழிச்சாலைகளும், அவற்றில் பவனிவரும் பள-பளா கார்களும் முன்னேறிய நாட்டவர்களைக்கூட கொஞ்சம் பொறாமை படவைக்கும்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஷாங்காய் பயனமாயினும் இப்பொழுதுதான் எழுதக்கிடைக்கிறது. இதற்கிடையில் ஒரு கடுப்பான நிகழ்வு. ஷாங்காயில், அதற்கு முன் கோலாலம்பூரில், இடையில் தஞ்சாவூர் பெரிய கோவிலில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அனது கேமராவின் SD நினைவட்டையிலேயே இருந்தன. சில நாட்களுக்கு முன் மடிக்கணினிக்கு மாற்ற முயற்சிக்கையில் ஒரு வைரஸ் எல்லா படங்களையும் சுவாஹா செய்து அதீத கடுப்பேற்றிவிட்டது. இப்பதிவில் இருக்கும் ஓரிரு படங்கள் என் உடன் வந்த சீன நண்பரால் எடுக்கப்பட்டவை.

- சீனாவில் உணவு ஒரு பெரிய பாடு. காரணம் சீன உணவு பிடிக்காமையல்ல.
பொதுவாக சீன உணவு வகைகளை வெளுத்துக் கட்டுவேன். பிரச்சனை சைவ சீன உணவை கண்டுபிடிப்பதுதான். சீனர்கள் pure-அசைவம் சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பாருங்கள் ஷாங்காயில் ஒரு "சுத்த சைவ" உணவகம் ஒன்று இருந்தது. நனும் நண்பரும் உள்ளே சென்று "சுறா முள் சூப்", "வறுத்த பன்றி கறி", "அவித்த இறால்" என ஒரு கட்டு கட்டினோம். "சுத்த சைவ" உணவகத்தில் "வறுத்த பன்றி கறி"யா என யோசிக்க வேண்டாம், பன்றி கறி போல இருக்கும் சைவக் கறிதான் (பெரும்பாலும் டோஃபுவைக் கொண்டு செய்திருந்தார்கள்). சாப்பிட்டுவிட்டு எங்களுக்கு பரிமாறிய ஊழியருக்கு டிப்ஸ் கொடுத்தேன் அதை வாங்க மறுத்துவிட்டு என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

- அந்த சமயத்தில் தான் திபெத் பிரச்சனை வெடித்திருந்தது. என் நண்பரிடம் அதைப்பற்றிக் கேட்க யத்தனித்தபொழுது, அது காதிலேயே விழாத மாதிரி காட்டிக்கொண்டு அந்த மேட்டரையே தவிர்த்துவிட்டார். நானும் ஒழுங்காக ஊர் வந்து சேரவேண்டும் என்ற அவாவில் வேறு யாரிடம் அந்த மேட்டரை பின்னர் எடுக்கவில்லை.

- ஷாங்காயின் புதிய புதோங் விமான நிலையம் நகரின் மையத்திலிருந்து ~30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புத்தம் புதிதாக ஒரு இரண்டாவது டெர்மினலை அப்போதுதான் திறந்திருந்தார்கள். எம்மாம் பெருசு...

- நகரிலிருந்து விமான நிலையம் சென்றுவர "காந்த மிதவை" இரயில் விட்டிருக்கிறார்கள். 8 நிமிடத்தில் நகரிலிருந்து விமான நிலையம் செல்கிறது.

- சென்னையில் ஓடும் இன்போசிஸ் பணியாளர் பேருந்துகள் எல்லாம் சாதரணமானவையாக இருந்தே பார்த்திருக்கிறேன். ஷாங்காய் இன்போசிஸ் பணியாளர்களுக்கு A/C பேருந்துகள். ஹ்ம்ம்ம்ம்...

-நம்மூரில் மட்டும்தான் பெட்ரோல் டீசல் பிரச்சனை என்றில்லை. சீனாவிலும் இவை சகாய விலையில் அரசு நிறுவனங்களால் விற்கப்படுகின்றன. குருட்டாம் போக்கில் குருடாயில் விலை ஏறியிருக்கிறதல்லவா. அதனால் பலத்த நட்டத்தில் இயங்கிய அரசு எண்ணை நிறுவனங்களால் போதுமான அளவு டீசல் தரமுடியாததால், பல கனரக வாகனங்கள் பல எண்ணைக் கடைகளில் வெகு தொலைவிற்கு வரிசை கட்டி நின்றிருந்தன. சீனாவில் டீசல் தட்டுப்பாடா...ஆச்சரியமாயிருந்தது..யானைக்கும் அடி சருக்கும்போல.

- திரும்பும் பொழுது இரண்டு தமிழ் அன்பர்களைச் சந்திக்க நேர்ந்தது. வின்சென்ட் மனப்பாறையில் கதவு, சாளரம் போன்றவற்றில் மர வேலைப்பாடுகளைச் செய்யும் கலைஞர். 30 வயது இளைஞர். பன்னிரண்டாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறார். ஆனால் நவீன நுட்பங்களைப் கையாளுவதில் முன்னோடியாக இருக்கிறார். கணினிகளை பயன்படுத்துவதில் வல்லுணர். CNC இயந்திரங்களைக் கொண்டு மரவேலைகளை துரிதமாக முடிக்கும் ஒரு தொழிற்சாலையை மனப்பாறையில் தொடங்கியிருக்கிறார். மேலும் பல புதிய இரக CNC இயந்திரங்களை வாங்குவதற்காக தனியாக ஷங்காய் வந்திருந்தார். தென்னிந்தியாவில் மர வேலைகளுக்கு CNC இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் தான் ஒரு முன்னோடி எனத் தெரிவித்தார். அவரின் தன்னம்பிக்கையும் தொழில் முனைப்பும் என்னை ஆச்சரியப்படுத்தின. அவரது நிறுவனத்தின் வலைத்தளம் http://wood3dart.com/cus.htm

- இன்னொரு அன்பரை கோலாலம்பூர் விமான நிலையத்தில் சந்தித்தோம்(நானும் வின்சென்டும்). பெரம்பலூரைச் சேர்ந்த அவருக்கு திருமணமாகி மூன்று பெண்கள். இரண்டாண்டுகளுக்கு முன் வேலைக்காக மலேசியா வந்தவர், சட்டப்பூர்வமான வேலை கிடைக்காமலும், செய்த வேலைக்கு சம்பளம் கிடைக்காமலும் தொடர்ந்து பலரால் ஏமாற்றப் பட்டிருக்கிறார். கடைசியில் எப்படியாவது ஊருக்க வரவேண்டும் என்று கொஞ்சம் இருந்த பணத்தையும் ஒரு முகவரிடம் கொடுத்து ஒரு போலி பாஸ்போர்ட்/விசா/டிக்கெட் பெற்று இந்தியாவிற்கு திரும்பவிருந்தார். மலேசிய சோதனைகளைத் தாண்டி விமானத்தில் ஏறிவிட்டார். வழி நெடுக கவலையாகவே இருந்தவரை சென்னையில் குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். எனக்கு மிக வருத்தமாக இருந்தது. அவர் செய்த ஒரே பாவம் இந்தியாவில் பிறந்ததுதானோ என்று நினைத்துக் கொண்டேன். மற்ற நாடுகளில் யாரும் ஒரு நல்ல கூலி வேலை கிடைப்பதற்காக இவ்வளவு சிரமப்படுவதில்லை.

- என் வழக்கமான குட்டிப் பதிவுகளைவிட இது இரண்டு மடங்கு நீண்டு விட்டதாலும். நீளமாய் எழுதி உங்களை இம்சை படுத்த விரும்பாததாலும்(அதாவது நீளமாய் எழுதனால் நீங்கள் யாரும் படிக்கமாட்டீர்கள் என்பதாலும்) இப்போதைக்கு ஒரு "தொடரும்" என்பதோடு முடித்துக் கொள்கிறேன்.

பிகு: தொடராவிட்டாலும் "பொளந்து கட்டிவிடமாட்டீர்கள்" என்ற நம்பிக்கைதான்

Labels: ,

படித்தவர்களின் கருத்துகள் - 17

At Mon Jun 09, 09:43:00 AM GMT-6, Blogger பிரேம்ஜி சொன்னது

ருசியா இருந்திச்சு உங்க குறிப்புகள்

 
At Mon Jun 09, 09:46:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

பின்னூட்ட நன்றிகள் பிரேம்ஜி.

 
At Mon Jun 09, 10:03:00 AM GMT-6, Blogger கதிர் சொன்னது

看英文報紙學英文,中國郵報給你第一手的英文時事、英文新聞,讓你更易閱讀英文報紙,輕鬆吸收英文時事、英文新聞

 
At Mon Jun 09, 10:04:00 AM GMT-6, Blogger கதிர் சொன்னது

உங்களுக்கு படிக்க தெரியாதுன்னு எனக்கும் தெரியும். அதுனால நானே மொழிபெயர்த்து சொல்லிடரேன்.

அது வேற ஒண்ணுமில்லீங்ணா.
உங்க பதிவு சூப்பர்ன்ற மேட்டர அப்டி சுத்தி வளைச்சு அடிச்சிருக்கேன்.

 
At Mon Jun 09, 10:07:00 AM GMT-6, Blogger கதிர் சொன்னது

好崗位

 
At Mon Jun 09, 10:08:00 AM GMT-6, Blogger கதிர் சொன்னது

மூணாவது பின்னூட்டம் ஹோம்வொர்க் மச்சி

 
At Mon Jun 09, 10:39:00 AM GMT-6, Blogger KARTHIK சொன்னது

நல்ல பதிவு

 
At Mon Jun 09, 11:08:00 AM GMT-6, Blogger Athisha சொன்னது

ஷாங்காய் பற்றி தமிழில் இதுதான் முதல் பதிவாக இருக்க வேண்டும்

உங்கள் பதிவு , அந்த நகரை சுற்றி பார்த்த அனுபவத்தை தந்தது ,

நன்றி JK

 
At Mon Jun 09, 12:15:00 PM GMT-6, Anonymous Anonymous சொன்னது

Thambi,

Do you really know Mandarin? If you know, it is pretty impressing. How did you learn it? I am very curious, and I am craving to learn. Any suggestions?
Thanks

 
At Mon Jun 09, 12:51:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

தம்பி, வாவ்...UI சொல்வது போல "I am impressed too". நீ ஹா, நீ ஹா மா என ஓரிரு வார்த்தைகளை கற்றுக்கொள்ளவே தாவு தீர்ந்துவிட்டது

 
At Mon Jun 09, 12:52:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

கார்த்திக், அதிஷா...உங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் எனது வந்தனங்கள். மிக்க நன்றி

அன்புடன்
ஜேகே

 
At Mon Jun 09, 10:15:00 PM GMT-6, Blogger கதிர் சொன்னது

தெரிஞ்ச மாதிரியே பில்டப் கொடுத்தா எல்லாரும் நம்பிடறாங்களே! :))

ஆமா ஷாங்காய்ல பொண்ணுங்களே இல்லீயா?. இல்ல அவங்கள பத்தி தனியா பதிவு வருமா?

 
At Tue Jun 10, 12:27:00 AM GMT-6, Blogger லக்கிலுக் சொன்னது

நமது பதிவுலக நண்பர் மா.சிவக்குமார் ஷாங்காய் நகரில் சில காலம் வசித்தவர். அவருக்கு சீனமொழியை படிக்கவும் கூட தெரியும்.

 
At Tue Jun 10, 07:30:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

தம்பி, அப்படியா மேட்டர். நினைத்தேன்.

லக்கிலுக், வருகைக்கும், தகவலுக்கும் நன்றி

 
At Tue Jun 10, 07:49:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

அதிஷா,

வலையில் தேடியதில் கிடைத்த ஷங்காய் பற்றி முன்னர் எழுதப்பட்ட பதிவு.

ஷாங்காய் பயணம்

 
At Wed Jun 11, 12:39:00 PM GMT-6, Blogger சுரேகா.. சொன்னது

ஷாங்காய் குறிப்புகள் சூப்பரு!

handy Recovery ன்னு ஒரு சாப்ட்வேர் எல்லா கார்டிலேருந்தும் அழிஞ்ச படங்களை எடுத்துக்கொடுத்துடும். கொஞ்சம் முயற்சி பண்ணுங்களேன். ! கண்டிப்பா படங்கள் கிடைக்கும்.

 
At Fri Jun 27, 10:54:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

சுரேகா.

நீங்க கொடுத்த ஐடியா மிக்க பயன் உள்ளதாக இருந்தது. ஹேண்டி ரெகவரிய வச்சி கொஞ்ச படங்கள தேத்திட்டேன். பல படங்கள் வரலன்னாலும், சில வந்துருக்கு. மிக்க மகிழ்ச்சி. ரொம்ப நன்றி.

ஜேகே

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல