காதலற்ற கவிதை
நீ வன்முறை
தெரிந்திருக்க நியாயமில்லை
எனக்கும்தான்
முதலில்
மழையின் நகக் கீறல்களுக்கு
இறகற்ற சிறகுகள்
ஆறுதல் அளித்த மற்றொரு
சாதாரண நாளில்
உன்னிடம் நான் தூதுவிட்ட
மௌனச் சிதறள்களின்
முகத்தில் அறைந்தது
உன் வன்முறை
விளிம்பில் நின்ற
பிரளயம் நிரம்பிய
மனதின் தாங்கவொன்னா
உறுத்தல்
உன்னிடம் அனுப்பிய
சொற் சிதறள்களை
வெற்றிடத்தில் தெளித்த
கனமெனக்கு உணர்த்திவிட்டது
உன் பயங்கரம்
என் மீது காட்டிய
எந்த வித வருத்தமுமற்ற
வெறுப்பை
திருபித்தர
யத்தனிக்கும் ஒவ்வொரு கனமும்,
கோபம் நிறைந்த
எண்ணங்களில் எரித்திட
முனையும் ஒவ்வொரு பொழுதும்
கலவரமூட்டுமுன்
பெயர் மட்டுமென்னை
இனித்தே வதைப்பதேன்.
Labels: மடக்கி
படித்தவர்களின் கருத்துகள் - 1
கனமான கவிதை !
”சோளகர்” நாவல் பற்றிய உன் பதிவுக்குக் காத்திருக்கிறேன். சீக்கிரம் எழுது.
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல