காஷ்மீரிடமிருந்து இந்தியாவிற்கு விடுதலை வேண்டும் :அருந்ததி ராய்.
காஷ்மீரில் மீண்டும் போராட்டம் வெடித்திருக்கிறது. இந்த முறை வழக்கத்திற்கு மாறாக குண்டுகளும், தோட்டாக்களும், இரத்த சகதிகளும் இல்லாமல், மக்கள் கடலாய் பொங்கி வந்து போராடுகிறார்கள். இந்தியாவின் மருந்து இந்தியாவிற்கே திருப்பித் தரப்படுகிறது.
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். ஆனால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது? அது ஏகாதிபத்தியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அருந்ததி ராய் அவுட்லுக்கில் ஒரு பெரிய கட்டுரை எழுதியுள்ளார். முதல் சில பத்திகளில் அப்பட்டமான ஒரு தலைப் பட்சமான இந்திய எதிர்ப்பு கட்டுரையாகப் பட்டது. ஆனால் முழுதும் படித்த பொழுது. இந்திய லிபரல்களின் நிலைப்பாட்டை இதற்கு மேலும் தெளிவாகச் சொல்லமுடியாது எனத் தோன்றியது.
“...[போராட்டக்காரர்களின் ] கோஷத்தில் ஒன்று என்னை கத்தியைப்போல வெட்டியது, என் இதயத்தை உடைத்தது:
“நாங்கா பூக்கா ஹிந்துஸ்தான், ஜான் சே ப்யாரா பாகிஸ்தான்” (பசியும், அம்மணமும் நிறைந்தது இந்துஸ்தான். உயிரினும் பொக்கிஷமானது பாகிஸ்தான்).
ஏன் இதை கேட்பதற்கு மிகத்துயரமாக இருக்கிறது என்று யோசித்தேன். மூன்று காரணங்கள் தோன்றின. முதலாவது, அந்த கோஷத்தின் முதல் பாதியில் உள்ள நமது மனங்ளை கூனிக்குறுகவைக்கும் "சூப்பர் பவர்" இந்தியாவைப் பற்றிய மறுக்க முடியாத உண்மை. இரண்டாவது, இது போன்ற ஒரு சமத்துவமே அற்ற ஒரு இந்தியா உருவாவதற்கு காரணமாகவோ, அல்லது அதற்கு ஒத்துழைப்பு வழங்கியோ வந்திருக்கும் மற்ற "நல்ல நிலைமையில்" உள்ள இந்தியர்கள். மூன்றாவது "எப்படி இந்த அளவிற்கு பாதிக்கப்பட்ட ஒரு கூட்டம் அவர்களைப் போலவே பாதிக்கப்பட்ட இன்னொரு கூட்டத்தைப் பார்த்து நக்கலடிக்க முடிகிறது" என்ற வருத்தம். அநீதிகளால் பாதிக்கப் பட்டவர்கள் வெகு எளிதில் அதே அநீதிகளை நிகழ்த்துபவர்களாக மாறுவதற்கான விதைகளை அந்த கோஷத்தில் என்னால் காணமுடிகிறது.”
“Perhaps now that the threat of violence has receded and there is some space in which to debate views and air ideas, it is time for those who are part of the struggle to outline a vision for what kind of society they are fighting for. Perhaps it is time to offer people something more than martyrs, slogans and vague generalisations. Those who wish to turn to the Quran for guidance will no doubt find guidance there. But what of those who do not wish to do that, or for whom the Quran does not make place? Do the Hindus of Jammu and other minorities also have the right to self-determination? Will the hundreds of thousands of Kashmiri Pandits living in exile, many of them in terrible poverty, have the right to return? Will they be paid reparations for the terrible losses they have suffered? Or will a free Kashmir do to its minorities what India has done to Kashmiris for 61 years? What will happen to homosexuals and adulterers and blasphemers? What of thieves and lafangas and writers who do not agree with the "complete social and moral code"? Will we be put to death as we are in Saudi Arabia? Will the cycle of death, repression and bloodshed continue? History offers many models for Kashmir's thinkers and intellectuals and politicians to study. What will the Kashmir of their dreams look like? Algeria? Iran? South Africa? Switzerland? Pakistan? ”
.....
“However, none of these fears of what the future holds can justify the continued military occupation of a nation and a people. No more than the old colonial argument about how the natives were not ready for freedom justified the colonial project. ”
......
“The Indian military occupation of Kashmir makes monsters of us all.It allows Hindu chauvinists to target and victimise Muslims in India by holding them hostage to the freedom struggle being waged by Muslims in Kashmir. It's all being stirred into a poisonous brew and administered intravenously, straight into our bloodstream.
At the heart of it all is a moral question. Does any government have the right to take away people's liberty with military force?
India needs azadi from Kashmir just as much—if not more—than Kashmir needs azadi from India. ”
இதற்கிடையில், தோல்வி மனப்பான்மையை முனையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்கிறார் பி இராமன். அந்த தோல்வி மனப்பான்மைக்கு அருந்ததி ராயின் மேற்கண்ட கட்டுரைதான் காரணமாம்.
Labels: காஷ்மீர்
படித்தவர்களின் கருத்துகள் - 2
JK,
I disagree with most part of Roy's analysis and have posted my thoughts here.
http://shivoham.blogspot.com/
So how are things going? I'm Raj (remember we met through Vijaygopal)
Raj,
வாங்க வாங்க. என்ன இப்படி கேட்டுட்டீங்க...உங்கள மறக்க முடியுமா?
உங்களோட வலைப்பதிவ படித்தேன். அருமையாகவும் ஆழமாகவும் ராயின் கருத்துகளுக்கு மறுப்பெழுதியிருந்தீர்கள்.
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல