ஜேகேவின் சில குறிப்புகள்: 2008 ஒலிம்பிக்கின் கதாநாயகர் (ஃபெல்ப்ஸ்/போல்ட் அல்ல)

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Tuesday, August 26, 2008

2008 ஒலிம்பிக்கின் கதாநாயகர் (ஃபெல்ப்ஸ்/போல்ட் அல்ல)

இந்தியாவின் வழக்கமான ஒலிம்பிக் புலம்பல்களுக்கும் அப்பால் 3 பதக்கங்களுடன் இந்த முறை நாமெல்லாம் திருப்தியடைந்திருக்கிறோம். அபினவும், சுஷீலும், விஜேந்தரும் பதக்கங்கள் வென்ற போது தேசமே சந்தோசம் அடைந்தது என்பது மிகையாக இருக்காது.

அந்த சூழலைத்தான் அப்கானிஸ்தான் தனது முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற தருணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து போர்சூழலில் இருக்கிறது ஆப்கன். தற்போது மீண்டும் தாலிபானின் வன்முறைகள் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவிலேயே ஒலிம்பிக் பயிற்சிக்கான உள் கட்டுமானங்கள் ஒன்றும் இல்லை என்று புலம்புகிறோம் அப்படியெனில் ஆப்கானிஸ்தானில் எப்படியிருக்கும்?

ஆனால் இதையும் தாண்டி ஆப்கானிஸ்தானின் நிக்பாய் ரொஹுல்லா டேக்வான்டோவில் வெண்கலப்பதக்கம் வென்றிருக்கிறார். அவர்தான் இந்த ஒலிம்பிக்கின் கதாநாயகர் என்கிறேன்.

First-ever Olympic medal sparks national pride in Afghanistan

படித்தவர்களின் கருத்துகள் - 0

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல