ஜேகேவின் சில குறிப்புகள்: மக்களின் பேரெழுச்சியே இப்போதைய அவசரத் தேவை: சிறிதுங்கா ஜெயசூரியா

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Sunday, February 15, 2009

மக்களின் பேரெழுச்சியே இப்போதைய அவசரத் தேவை: சிறிதுங்கா ஜெயசூரியா

இலங்கையில் இன அழிப்புப் போரும் அதன் விளைவாக தமிழர்களின் மனித அவலமும் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், பெரும்பாலான சிங்களர்கள் போருக்கு ஆதரவாகவும், தமிழர்கள் தேசிய அபிலாசைகள் உலகத்திற்கே பெரிய இடரை விளைவிக்கும் என்கிற ரீதியிலும் தான் குரல் எழுப்பி வருகிறார்கள். சர்வதேச சமூகமும் ஏதோ சில தமிழ் ஆடுகள் இறந்து போகின்றன, அவற்றை கொடுமை செய்து கொல்லாதீர்கள், எதிகலான முறையில் கொல்லுங்கள் என்ற வகையில்தான் நிலைப்பாடு எடுத்துள்ளன. இந்த பின்னனியில்தான் சிறிதுங்க ஜெயசூரியா அவர்கள் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிப்பதாக இருந்தது.

சிறிதுங்கா ஜெயசூரியா, இலங்கை ஐக்கிய பொதுஉடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பெற்றவர். தேர்தல் அறிக்கையிலேயே தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவு தெரிவித்திருந்தவர்.

From Blogger Pictures


இவரைப் அறிமுகம் செய்துவைத்தார் Committee For Workers International என்ற சோசலிச அமைப்பைச் சேர்ந்த, லண்டனில் இருந்து வந்திருந்த, ஈழத்தமிழர் சேனன். அவர் கூறுகையில், எத்தகைய கொலை மிரட்டல்களுக்கு எதிராக தனது கருத்தை ஜெயசூரியா முன்வைக்கிறார் என்பதைக் குறிப்பிட்டர். மனித உரிமைகள் மீறல் இருக்கலாம் என்று கூறியதற்காக BBC, CNN, ஜெர்மன் தூதர் மற்றும் சுவிஸ் தூதர் போன்ற ஆனானப்பட்டவர்களையே நாட்டை விட்டு துரத்துவோம் என மிரட்டும் அரசு இயந்திரம், ”இனப்படுகொலையை நிறுத்து” எனக் குரல் கொடுக்கும் சிங்களவரை என்ன செய்வார்கள் என்பதை யாரும் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் பொழுது, ஜெயசூரியா சொன்னார் “நான் ஒன்றும் மறைந்து கொண்டு பிரச்சாரம் செய்யவில்லை. நான் இலங்கைக்கு திரும்பச் செல்வேன். நான் கொலை செய்யப் படலாம். எனது தோழர்கள் பலர் கொலை செய்யப் பட்டுள்ளார்கள்.” இவரது தன்னலமற்ற பணிக்கு நான் தலை வணங்குகிறேன்.


பேச்சின் சாராம்சத்தை எனது ஆங்கிலப் பதிவில் இட்டுள்ளேன். நமது போராட்டத்தையும் அதன் நியாயத்தையும் தமிழர்களிடம் மட்டுமல்லாது பிறருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முறையில் இனிமேல் பொதுவாக ஆங்கிலப் பதிவில்தான் அதிகம் எழுதப் போகிறேன்.


சேனனின் அறிமுகம்
From Blogger Pictures


ஜெயசூரியா பேசுகிறார்
From Blogger Pictures


பார்வையாளர்கள்
From Blogger Pictures


பார்வையாளர்கள்
From Blogger Pictures

படித்தவர்களின் கருத்துகள் - 2

At Tue Feb 17, 11:30:00 AM GMT-6, Anonymous Anonymous சொன்னது

I read that SL government has eliminated many Sinhalese journalists or driven them out of country, when they wrote about the govt excesses.
Democracy is a mockery when people in power pursue their own agenda - be it Indian or SL govt.

 
At Wed Feb 18, 12:55:00 PM GMT-6, Blogger வளர்மதி சொன்னது

பதிவிற்கு மிக்க நன்றிகள் ஜேகே.

இப்போதுதான் வாசித்தேன்.

ஆங்கிலத்தில் எழுத முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன்.

இன்றைய மிக அவசியத் தேவைகளில் அதுவும் ஒன்று.

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல