குரல்வளையை நெறிக்காதீர்
காங்கிரஸ் கட்சியின் பாசிசத் தனமான கோரிக்கைகளுக்கு பயந்து கலைஞர் தொடங்கி வைத்த சட்டத்தின் பயணம் இன்று மானமிக்க தமிழர்கள் சீமான், அமீர் கைதில் முடிவடைந்து இருக்கிறது. இது ஈழத்தமிழர்களுக்கு யாராவது தீவிரமாக ஆதரவு தெரிவித்தால் அவர்களுக்கும் இதே கதிதான் எனும் பீதியைக் கிளப்புவதற்கான நடவடிக்கை. அல்லவா?
கலைஞர் அவர்களே....என்ன நடக்கிறது. தமிழீழ விடுதலைக்கு ஆதரவு தெரிவித்தால் அவர்களுக்கும் தீவிரவாத பயங்கர வாத முத்திரை குத்தி உள்ளே தள்ளுவதா...அவர்கள் என்ன அப்படி இந்திய இரையாண்மைக்கு குந்தகம் விளைவித்து விட்டார்கள். இந்தியா சிங்களர்களுக்கு ஆயுத உதவி செய்யவில்லையா. நிறுத்தச்சொல்லி பல ஆண்டுகளாக தமிழர்கள் குரல் கொடுக்கவில்லையா. அதற்கு ஒப்புக்கு சப்பானி காரணம் சொல்லி அவர்களது சிங்கள ஆதரவு கொள்கையை தொடரவில்லையா. நமது 40 உறுப்பினர்களின் தெம்பில் ஆட்சி நடத்திக் கொண்டு நமது சகோதரர்களுக்கு எதிரான இன அழிப்பிற்கு உடந்தையாக இருப்பது அயோக்கியத்தனம் இல்லையா. அதைத்தானே அமீர் சொன்னார்.
நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று சொன்னதைக்கூட விளையாட்டாகத்தானே எடுத்துக் கொள்கிறார்கள். ஏதோ முகமன்கூறுவது போல போர் பிரச்சனைக்கு தீர்வாகாது என கிளிப்ப்பிள்ளை போல சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும்.
இந்த போக்கு உணர்வுள்ள யாருக்கும் கடுப்பை கிளப்பாதா. அவர்கள், உன்னால் முடியாவிட்டால் சொல் நாங்கள் எங்கள் சகோதரர்களுக்கு உதவுகிறோம் என்று தானே சொல்வார்கள். அது தானே இங்கே நடக்கிறது. நீங்கள் கூட இது ஒரு அபயக்குரல் என்று மத்திய அரசிடம் சொன்னபோது அதைத்தானே உணர்த்தினீர்கள். அதற்காக சிலரை மட்டும் கைது செய்வது அரசியல் அபத்தம் மட்டுமல்ல...பிரச்சனையை திசை திருப்பி விடும்.
தயவு செய்து குரல்வளையை நெறிக்காதீர்கள்
படித்தவர்களின் கருத்துகள் - 4
பிள்ளையையும் கிள்ளுவானுகளாம் தொட்டிலையும் ஆட்டுவானுகளாம்.
ஒரு பக்கம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவா கை கோர்த்து நிற்பானுகளாம் இன்னொரு பக்கம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவா குரல் கொடுத்தா கைது செய்வானுகளாம்.தமிழனை கேனையன்னு நினைச்சிட்டானுக.
வைகோவின் கைதின் போதே கலைஞரின் இரட்டை வேடம் தெரிந்து விட்டதே.
சீமான், அமீர் கருத்து குறித்து வீராதி வீரர் வீரமணி என்ன சொல்கிறார்?.
குப்பன்_யாஹூ
ithu thavarana karuthu.nam muthalil indian apparanthan thamillan.ezha thamillar aatharavu veru,LTTE aatharavu veru. eppothum LTTE namba thagunthavargal illai.KARUNANITHI sariyagave seyalpadukirar ARIVUKKARASAN
@நக்கீரன்
தமிழர்களை மற்றவர்கள் எல்லாம் இவா என்றுதான் நினைத்திருக்கிறார்கள். தமிழர்களே அவ்வாறு என்னும்போதுதான் கடுப்பாக இருக்கிறது.
@குப்பன்_யாஹூ:
கருத்துகளுக்கு நன்றி.
@அறிவு:
LTTE பற்றி பல்வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால் ஒரு கருத்தை வெளிப்படுத்துவதற்காக் சிறையில் தள்ளுவது ஜனநாயகம் அல்ல. சுத்த மடத்தனம். மனிதர்களின் உணர்வுப்பூர்வமான் கொந்தளிப்பை அடக்க முனையும் பொழுது அது மேலும் தீவிரமான விதத்தில் வெளிப்படும்.
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல