ஜேகேவின் சில குறிப்புகள்: புலி இல்லாமல் புலிக் குழம்பு வைத்தல்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Wednesday, October 29, 2008

புலி இல்லாமல் புலிக் குழம்பு வைத்தல்

டிஸ்கி ஒன்னு: முதலில்... “புலி”யை அகராதியிலிருந்து நீக்கி விட வேண்டும். இந்தியாவின் தேசிய விலங்கைப்பற்றியோ அல்லது சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவலைப் பற்றியோ குறிப்பிடுவதாக இருந்தால்கூட “பூனை போன்ற ஒரு விலங்கு” என்றே சொல்லவேண்டும். மீறி யாராவது “புலி” என்று சொன்னால் ”இந்திய தண்டனைச் சட்டம்” பிரிவு 124A யின் கீழ் கம்பி எண்ண வைத்து விடுவார்கள். உங்களுக்கு சாப்பிட வேண்டுமா இல்லை கம்பி எண்ண வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

டிஸ்கி ரெண்டு/மூனு: சமையல் குறிப்பின் கடைசியில் இருக்கு. கொஞ்சம் பொருத்தருள்க

தேவை:

1) கொட்டை நீக்கப்பட்ட பழைய புலி இரண்டு துணுக்கு
2) குழம்பு வைக்கத் தேவைப்படும் மற்ற இத்யாதிகள்
2அ) இந்த குழம்பு ஐயர்/ஐயங்கார் வீட்டு ஸ்டைலில் வைக்கப்படுவதால் வெங்காயங்கள் பூண்டுகளுக்கு இங்கே வேலை இல்லை


செய்முறை:

1) முதலில் கொட்டை நீக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட புலிகளை தேசிய வடிநீர்(இதை தேசிய சிறுநீர் என்றும்/ தேசிய ஆண்மை இரை என்றும் சில இடங்களில் அழைப்பர்) விட்டு நன்கு கழுவ வேண்டும். இதன் மூலம் பல பிரிவினைக் கிருமிகள் கொல்லப்பட்டு, நாளை உங்களுக்கு வயிற்றுப்போக்கு வருவது தடுக்கப்படுகிறது.
2) அவ்வாறு கழுவப்பட்ட புலிகளை ஒரு சட்டியில் வைக்கவும்.
3) உங்கள் சமையல் அறையில் கொட்டை நீக்கப்படாத புலிகள் ஏதாவது இருக்கிறதா எனத் தேடவும். அப்படி ஏதேனும் இருப்பின் அவற்றை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட “ஹிட்” ஸ்ப்ரே கொண்டு அழிக்கவும்.
3அ) “ஹிட்” ஸ்ப்ரே விஷம் நிறைந்தது., அருகில் இருக்கும் அரிசி சோறையும் அழித்துவிடும் என்று சில மற மண்டைகள் சொல்லும். அவர்களை IPC Section124Aஇல் உள்ளே தள்ளிவிட வேண்டும்.
3ஆ) உங்களுக்கு ஹிட் ஸ்ப்ரே அடிக்க தெம்பு இல்லையென்றால் தெருவில் போகும் அஹிம்சைக்கு பெயர்போன புத்த சன்னியாசிகள் யாரையாவது கூப்பிட்டு அவர்களை அடிக்கச் சொல்லவும்.
3இ) கொட்டை நீக்கப்படாத புலிகளை நீங்கள் அழிக்கும் வரை அடுத்த நான்காவது சமையல் குறிப்பிற்கு நீங்கள் போக முடியாது.
4) கொட்டை நீக்கப்படாத புலிகள் ஏதும் இல்லையென்று சர்வதேச தரச் சான்று பெற்றுக்கொள்ளவும்.
5) தரச்சான்று பெற்ற பின் கொஞ்ச நாள் காத்திருக்கவும்.
6) பின், கொட்டை நீக்கப்பட்ட புலிகளை ”கெட்டுப் போய் நாற்றம் வருகிறதென்று” டாய்லெட் சின்கில் கொட்டி நிறைய தண்ணீர்(முடிந்தால் காவிரி நீர் விடவும். புலிகளுக்கு மிகவும் பிடித்தது) விட்டு கழுவவும்.
7) ”கொட்டை உள்ள/கொட்டை இல்லாத புலி ஏதும் இல்லாததால் புலிக் குழம்பு வைப்பது சாத்தியம் இல்லை” என்று ஒப்பாரி வைக்கவும்.
8) பின்னர் இருக்கும் இத்யாதி பொருட்களை வைத்து ஐயர் அல்லது ஐயங்கார் வீட்டு ஸ்டைலில் சாம்பார் வைக்கவும்

டிஸ்கி ரெண்டு : “புலி” என்ற சொல்லை அகராதியில் இருந்து நீக்கிவிட்டு நீ மட்டும் ஏன் பயன் படுத்துகிறாய் என்று யாராவது கேட்கும்பட்சத்தில்... ”நீங்கள் புலிக்குழம்பு வைக்கப்போய் ஜெயில் கம்பி எண்ணக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் “புலி” என்று நான் சொன்னதற்காக நான் ஜெயில் கம்பி எண்ண வேண்டியிருந்தால் அது ராஜினாமா மிரட்டல் விடுவது போல ஜுஜுபி மேட்டர்” என சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்

டிஸ்கி மூனு: பதிவில் எழுத்துப் பிழைகள் தெரிந்தோ தெரியாமலோ இருக்கலாம்.

Labels: ,

படித்தவர்களின் கருத்துகள் - 5

At Wed Oct 29, 12:45:00 PM GMT-6, Blogger உமையணன் சொன்னது

நான் தூக்கத்துல உளறினா சிறையில் போடுவாங்களா?

 
At Wed Oct 29, 01:53:00 PM GMT-6, Anonymous Anonymous சொன்னது

:)

 
At Wed Oct 29, 09:16:00 PM GMT-6, Blogger குசும்பன் சொன்னது

“புலி” இல்லாமல் குழம்பு வெச்சா எலி கூட மோந்து பாக்காது!!!:)

 
At Thu Oct 30, 12:20:00 PM GMT-6, Anonymous செழியன் சொன்னது

:-)

 
At Mon Dec 29, 10:59:00 PM GMT-6, Blogger Mira சொன்னது

:)

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல