ஜேகேவின் சில குறிப்புகள்: வேடிக்கை பார்க்கும் தமிழினமே....

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Sunday, February 01, 2009

வேடிக்கை பார்க்கும் தமிழினமே....

முத்துக் குமாரின் இறுதி ஊர்வலத்தில் எதிரொலித்த உணர்ச்சிப் பூர்வமான முழக்கங்கள் வலையுலகையும் தொடவேண்டுமென்பதற்காக நினைவிலிருந்த சில கீழே

முத்துக்குமாருக்கு...

வீர வணக்கம், வீர வணக்கம்
முத்துக்குமாருக்கு வீர வணக்கம்

வீர வணக்கம், வீர வணக்கம்
மாவீரன் முத்துக்குமாருக்கு
வீர வணக்கம் செய்கின்றோம்

தமிழக அரசே தமிழக அரசே
முத்துக்குமாரின் தியாகத்திற்கு
நிதி வேண்டாம் நிதி வேண்டாம்
நீதி வேண்டும் நீதி வேண்டும்


தமிழனுக்கு...

வேடிக்கை பார்க்கும் தமிழினமே!
உங்களுக்காகச் செத்தான் முத்துக்குமார்
இன்னும் ஏன் வேடிக்கை?
வீதியில் வந்து போராடு!

வேடிக்கை பார்க்கும் தமிழினமே!
உந்தன் எந்தன் வரிப்பனம்
உன் இனத்தை அழிப்பதற்கா?
நம் இனத்தை அழிப்பதற்கா?
வீதியில் வந்து போராடு!

ராஜிவ் காந்தி கொலை பற்றி...

கொன்றது யார்? கொன்றது யார்?
ராஜிவ் காந்தி படுகொலையில்....
செத்தது எல்லாம் போலீஸ்காரன்.
எங்கே போனான் காங்கிரஸ்காரன்?

ஏன் கேட்கவில்லை...

எரிகிறதே எரிகிறதே...
தமிழீழம் எரிகிறது...
இந்து கோயில் எரிகிறதே...

சோ பார்ப்பான் கேட்கல...
தினமலர் கேட்கல...
இந்துராம் கேட்கல...
கருணாநிதி கேட்கல...
ஜெயலலிதா கேட்கல...
விஜயகாந்த் கேட்கல...

ஏன்யா கேட்கல?

பாப்பான் சாகல!
பாப்பாத்தி சாகல!
அதான் கேக்கல.

குடும்ப அரசியல் பற்றி...

அழகிரிக்கு மதுரையாம்
ஸ்டாலினுக்கு சென்னையாம்
கனிமொழிக்கு டெல்லியாம்
பேரனுக்கு டீவியாம்
தமிழனுக்கு நாமமாம்
உனக்கும் எனக்கும் நாமமாம்.

துரோகம்

முதுகில் குத்தும் கருணாநிதியே
முத்துக்குமாரை கொன்றாயே

தமிழீழம்...

வெல்லட்டும் வெல்லட்டும்
புலிகள் படை வெல்லட்டும்
மலரட்டும் மலரட்டும்
தமிழீழம் மலரட்டும்

இதுபோல இன்னும் பல கோபமும், பொருளும், உணர்ச்சியும் பொதிந்த முழக்கங்கள். எல்லாவற்றையும் விட எனக்கு முக்கியமாகத் தோன்றியது தமிழக மக்களை நோக்கி எழுப்பப் பட்ட இந்த முழக்கம்தான்... தமிழர்களுக்கு காதில் விழுமா?

வேடிக்கை பார்க்கும் தமிழனமே
வீதியில் வந்து போராடு!

Labels: ,

படித்தவர்களின் கருத்துகள் - 5

At Sun Feb 01, 02:07:00 AM GMT-6, Anonymous Anonymous சொன்னது

"நேத்து பொற‌ந்த‌ பொடுசு வ‌ரைக்கும் என் குடும்ப‌த்துல‌ அத்த‌ன‌ பேரையும் ம‌ந்திரியாக்கி அழ‌கு பாக்குற‌தேய‌ல்லாம‌ல் வேறொன்ற‌றியேன் ப‌ராப‌ர‌மே.."-க‌லைஞ‌ர்

 
At Thu Feb 05, 12:36:00 AM GMT-6, Blogger இப்னு அப்துல் ரஜாக் சொன்னது

pls visit and give your feedback
http://www.peacetrain1.blogspot.com/

 
At Tue Feb 10, 04:33:00 AM GMT-6, Blogger baarathisubbaiyah சொன்னது

poradi saagamal tharkolai seithatharku enn ithanai aarpatam? J.K ARIVUKKARASAN

 
At Tue Feb 10, 06:39:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

அறிவு,

தற்கொலை எனக் கொச்சைப்படுத்த வேண்டாம். தனது உயிரை ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார் முத்துக்குமார். அதன் மூலம் எந்த தலைவராலும் ஏற்படுத்த முடியாத எழுச்சியை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறார். சில துரோகங்களை வரலாற்றில் கல்வெட்டாக பதிந்திருக்கிறார்.

அவரது மரணம் மிகப்பெரிய தியாகம்.

நமக்கு போராடவே துணிவில்லை. போராடுபவர்களையும், அதைவிடப் பெரிய தியாகம் செய்தவரையும் கொச்சைப் படுத்துவது எப்படி சரியாகும்?

 
At Tue Feb 10, 07:29:00 AM GMT-6, Anonymous Anonymous சொன்னது

அண்ணா ,வேலைப்பளு கொஞ்சம் அதிகம் அதான் உள்ளே வரமுடியவில்லை.அவ்வப்போது புலிகள் தகுந்த பதிலடி தருவது மனதில் ஒரு ஓரத்தில் கொஞ்சம் நம்பிக்கை ஊட்டுகிறது. என்னை கேட்டால் நம் நாட்டு அரசியல்வாதிகளை விட ராஜபக்ஷே சிறந்த மனிதர் .ஏன் என்றால் அவர் அவருடைய இனத்துக்காக போர் நடத்துகிறார் .நம்மவர்கள் நாற்காலிக்காக இனத்தை மறந்து விட்டார்கள்.

முத்துகுமாரின் மரணம் தியாகம்தான் என்றாலும் ,அதை இவர்கள் முன்னிலையில் செய்தது சற்று வருத்தம் தான் .மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் கரி கட்டையானர்கள் .ஆனால் எதிரிகள் ஒன்று கூடி விட்டார்கள்.மனிதனின் அடிப்படை குணங்களை விட்டு விட்டுத்தான் இவர்கள் பொது வாழ்க்கை என்று ஊரை ஏமாற்றுகிறார்கள் .

பாதிக்கப்படும் ஒவ்வொரு தமிழனின் பாவத்துக்கும் தமிழகம் பதில் சொல்லி ஆகவேண்டும் .இலங்கை இந்தியாவிற்கும் நமது அரசியல்வாதிகளுக்கும் தன் நிஜ முகத்தை காட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை. ஆனால் அப்பொழுதும் இந்த பாழாய்ப்போன அரசியல் வாதிகளுக்கு புலிகள் ஆதரவு தருவார்கள் .அவன்தான் தமிழன் .ஆனால் அதுதான் அவனது அழிவுக்கு வித்திடுகிறது என்பதை மட்டும் அவன் மறந்து விடுகிறான்.

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல