ஜேகேவின் சில குறிப்புகள்: புலிகள் பற்றிய புத்தகங்கள் கண்காட்சியில் தடை

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Friday, January 09, 2009

புலிகள் பற்றிய புத்தகங்கள் கண்காட்சியில் தடை

தமிழக அரசின் கருத்துச் சுதந்திர பறிப்பு/குரல்வளை நெறிப்பு தொடர்கிறது. பத்ரி மற்றும் பாரா வின் பதிவுகளின் படி, சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரன் பற்றிய புத்தகங்களை விற்கக் கூடாதென தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளதாம். இதைத் தொடர்ந்து பாபாசியினர் புத்தக கண்காட்சியில் இந்த புத்தகங்களை விற்கக் கூடாது என எல்லா பதிப்பகங்களுக்கும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றிய புத்தகங்கள் விற்கக் கூடாது என்ற போர்வையில் இந்த தடை உத்தரவு விதிக்கப் பட்டிருந்தாலும் இது யாரைக் குறி வைக்கிறது என்பது தெள்ளத் தெளிவு. தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஈழ ஆதரவு சூறாவளியால் புத்தகச் சந்தையில், புலிகள் பற்றிய புத்தகங்கள் அதிகம் விற்பனையாகியிருக்கும். உடனடியாக, உளவுத்துறை மூலம் இந்த உத்தரவு வந்திருக்கும்.

இது எவ்வளவு அடாவடியான பாசிசத்தனமான செயல் என்பதை பொழிப்புரை கொடுத்து விளக்க வேண்டியதில்லை. இவர்களின் இந்தச் செய்கை ஒன்றே போதும் இவர்கள் பக்கம் எந்த நியாயமும் இல்லை என்பதை உணர்த்த. ஈழத்தமிழர்களின் பிரச்சனை பற்றி படித்தவர்கள் கூட தவறான புரிதலைக் கொண்டிருக்கும் தமிழகத்தில், அதிக விழிப்புணர்வுதான் தேவை. ஆனால் இது அவர்களின் அஜென்டாவிற்கு எதிராக அமைவதால், மக்கள் இருட்டிற்குள்ளும் ஆதிக்க ஊடகங்களின் பிரச்சாரங்களுக்கு ம் கொட்டிக்கொண்டும் இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

தமிழக அரசின் துரோகப் பட்டியலில் இன்னுமொரு வரி. இன்னும் என்னவெல்லாம் தடை செய்யப்பட விருக்கின்றனவோ. தமிழ் வலைப்பதிவுகளில் ஈழ ஆதரவு தூக்கலாக தெரிகிறதென்று அவற்றிற்கும் தடை பிறப்பத்தாலும் ஆச்சரியப் பட முடியாது.

மக்களே விழித்துக் கொள்ளுங்கள்...

-----------------

பத்ரியின் பதிவிலிருந்து

புத்தகங்கள் விற்பனை செய்யக்கூடாது...
(இந்தியாவில்) தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றிய புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சி அரங்குகளில் விற்பனை செய்யக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு ஒன்று காவல்துறையிடமிருந்து புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்துக்கு (பபாஸி) வந்துள்ளது.

பபாஸி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சென்னை புத்தகக் கண்காட்சியில், கிழக்கு பதிப்பகம் அரங்கில் கீழ்க்கண்ட புத்தகங்கள் இப்போதைக்கு விற்பனைக்குக் கிடைக்கா:

1. அல் காயிதா
2. தாலிபன்
3. விடுதலைப் புலிகள்
4. உல்ஃபா
5. பிரபாகரன்
6. லஷ்கர்-ஈ-தோய்பா
7. எல்.டி.டி.ஈ (மினிமேக்ஸ்)

இந்தப் புத்தகங்கள் எல்டாம்ஸ் ரோடில் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் காட்சியகத்திலும் இணையம் வழியாகவும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. தமிழகத்தின் அனைத்துக் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இது தொடர்பாக மேலும் விவரங்கள் கேட்கும் நிலையில் இருக்கிறோம். எனவே மேற்கொண்டு தகவல் தெரிந்ததும் எழுதுகிறேன்.

Labels: ,

படித்தவர்களின் கருத்துகள் - 0

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல