ஜேகேவின் சில குறிப்புகள்: கிளிநொச்சி வீழ்ந்தது! What the Fuck!

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Friday, January 02, 2009

கிளிநொச்சி வீழ்ந்தது! What the Fuck!

நானொன்றும் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளன் இல்லை. ஆனால் குழந்தைக்கு கூட புரியும் புலிகளை ஒழித்த பின் சிங்கள அரசாங்கம் யாரிடம் சமாதனம் பேசப்போகிறார்கள் என்று. ஒன்று இரண்டாம்தர குடிமகனாக இருக்க ஒத்துக்கொள் இல்லை போரில் எந்த நாதியும் இல்லாமல்மடி என்று ஏன் ஒரு தலைவிதி இவர்களுக்கு. தமிழர்களாய்ப் பிறந்ததாலா?

பிரபாகரன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத்தான் வெளிச்சம். தமிழர்களுக்கு ஈழம், ஈழம், இறுதிப்போர் என்று ஆசைகாட்டிவிட்டு இப்படி ஒரு அழிவில் போர் முடிந்ததென்றால் பிரபாகரனின் துரோகம்தான் எல்லாவற்றையும் விட பெரிதாக இருக்கும். எத்தனை பேர் தமது உயிரை இவரது கையில் கேள்வி கேட்காமல் கொடுத்தார்கள்....

பதவி சுகத்திற்காக இடுப்பில் இருக்கும் வேட்டியையும் அவிழ்த்துத் தர முதலில் நிற்பார் போல இருக்கிறது நமது தமிழினக் காவலர். தூ....இப்படியும் ஒரு பிழைப்பு...

ஆனால் பாருங்கள் அந்த பதவிக்கே வேட்டு வரப்போகிறது. காங்கிரசையும், மத்திய பதவியையும் இப்போதும் உதற மறுத்தால், திமுகவிற்கு வரலாறு காணாத தோல்வி கிடைக்கும் என்பது உறுதி....

கலைஞரே(இதுவே கடைசி முறை இவரை கலைஞர் என்று அழைக்கப்போவது)...இந்த சமயத்திலும் நீங்கள் தீர்க்கமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதை மன்னிக்கவே முடியாது. திமுக தமிழகத்தில் ஆழ குழிதோண்டி புதைக்கப் படும். மக்கள் கொதிப்பதின் வெப்பம் உங்களுக்கு மட்டும் எப்படி சுடாமல் இருக்கிறது.... பதவி துண்டென்று நீங்கள் தானே சொன்னீர்கள். வேட்டி அவிழ்கிறது இனம் அழிகிறது இனியும் தேவையா இந்த மானங்கெட்ட துண்டு...

Labels: , ,

படித்தவர்களின் கருத்துகள் - 10

At Fri Jan 02, 08:08:00 AM GMT-6, Blogger மாயாவி சொன்னது

ஜே.கே, என்ன ஆத்திரமா இருக்கா?

நீங்க என்னதான் அசிங்கமா திட்டினாலும், எழுதினாலும் ஏன் வேட்டியையே உருவினாலும் அந்த தமிழினத்(துரோகி) தலைவர் அசைய மாட்டார். பதவி, குடும்பம் அதைத் தவிர எதுவுமே தெரியாது. அம்மணமா இருந்தாலும் ஆட்சியில இருக்கனும்.
அதுதான் தமிழினத்(துரோகி) தலைவரோட ஒரே நோக்கம்.

நானும் விடுதலப்புலிகளின் ஆதரவாளன் கிடையாது. ஆனால் உப்பு போட்டு சோறு சாப்பிடும் தமிழன்.

 
At Fri Jan 02, 08:15:00 AM GMT-6, Blogger வெத்து வேட்டு சொன்னது

Praba is too dumb to realize what he can and cannot...and he doesn't know how to work with other people to set a goal and acchieve..if you read his interviews..he always mentions he learns things from MOVIES..he lives in dream world and believes in super hero syndrome (read all ltte propaganda materials)..what a moron..
when India moved to stop ltte from Capturing Jaffna in 2000 he should have realized what is happening around him..in my opinion it is too late for him...i think India is working towards "eliminating" him and impose a solution like Rajiv's (in my opinion that will be a half baked solution which both side would feel they still didn't accheive anything)
India is going to be Tamil's protectors and destroyers

 
At Fri Jan 02, 08:39:00 AM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

மாயாவி...ஆம் ஆத்திரமாக இருக்கிறது. காஸாவில் குண்டுபோட்டால் அரபு நாடுகள் கேட்கின்றன...டார்பூரைப் பற்றி உலகமே பேசுகிறது. ஈழத்தில் பஞ்சப் பராரிகளாக, மிருகங்களுக்கு (மிருகங்களைக் கொன்றால் ப்ளூ கிராஸாவது கேட்கும்) உள்ள உரிமைகூட இல்லாமல் இருக்கும் தமிழர்களைப்பற்றி ஏன் யாருமே கேட்கமறுக்கிறார்கள். முட்டாள் பாகிஸ்தானை ஒன்றும் செய்ய துப்புகெட்ட இந்த இந்தியாவில் வாழும் மானங்கெட்ட தமிழனாக இருக்கின்றேன் இல்லையா...ஆத்திரமாகத்தான் இருக்கிறது....

 
At Fri Jan 02, 10:03:00 AM GMT-6, Blogger Namakkal Shibi சொன்னது

:((

 
At Fri Jan 02, 10:51:00 PM GMT-6, Blogger ஓர்மைகள் சொன்னது

புலிகளின் காலை வாரிவிட்டது தமிழக துரோகிகள்தான்.

http://mathilukal.blogspot.com/2009/01/blog-post_02.html

 
At Fri Jan 02, 11:50:00 PM GMT-6, Blogger SanJaiGan:-Dhi சொன்னது

எல்லாப் புகழும் பிரபாகரனுக்கே ஜேகே. சமாதானம் பேச இருந்தவர்களை எல்லாம் கொன்று குவித்த புண்ணியவான் அவர்தானே. இலங்கை தமிழ் எம்பிக்கள் இன்னும் பிரபாகரனுக்கு வால் பிடிக்காமல் தமிழ மக்களுக்காக இலங்கை அரசுடன் ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்க வேண்டும். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் அதிக பட்சம் குரல் கொடுக்கத் தான் முடியும் . தமிழர்களின் உணர்ச்சியை தூண்டிவிட்டு ஓட்டு வாங்க முடியும். ஈழ மக்களுக்கு இவர்களால் ஒன்றும் ஆகாது. அதை இலங்கை தமிழ் தலைவர்கள் தான் செய்யவேண்டும்.

//காங்கிரசையும், மத்திய பதவியையும் இப்போதும் உதற மறுத்தால், திமுகவிற்கு வரலாறு காணாத தோல்வி கிடைக்கும் என்பது உறுதி....//

என்ன ஒரு சுயநலம் இது ஜேகே. திமுகவின் வரலாறு காணாத தோல்விக்காக தான் மத்திய பதவிகளை துறக்க வேண்டுமா? இந்த மக்களுக்கு செய்யும் நன்மையாக பார்க்காமல் எதற்கு வெற்றி தோல்வி எலலாம் இங்கு வருகிறது?

 
At Sat Jan 03, 12:23:00 AM GMT-6, Anonymous Anonymous சொன்னது

உண்மையில் இந்த போரை 2004 - M ஆண்டு முதல் நடத்துவது இந்திய அரசுதான். நான் கேட்பது எல்லாம் ஒன்று தான். இந்த மதிகெட்ட M K நாராயணன் தமிழனாக இருந்தால் இப்படி நடப்பானா?? சொந்தநாட்டில் நடக்கும் திவிரவாதத்தை ஒழிக்க வக்கில்லாத ஆசாமி இலங்கையில் என்ன மயிருக்கு விடுதலைபுலிகளை எதிர்க்கவேண்டும்?? பச்சையாக கேட்டால் அவன் தங்கச்சி இலங்கையில் கிளிநொச்சியில் இருந்தால் இந்தியா இலங்கைக்கு உதவ ஒப்புகொள்வானா?? இந்தியாவுக்குள் A K 47 துப்பாக்கியுடன் வருபவனை தடுக்க முடியாத இவன் என்ன மயிருக்கு இலங்கைக்கு ரேடார் கொடுக்க வேண்டும்?? அவனையும் அவங்க அம்மாவையும் கிளிநொச்சிக்கு நாடுகடத்த வேண்டும்

உண்மை தமிழன்.

 
At Sat Jan 03, 07:06:00 AM GMT-6, Anonymous Anonymous சொன்னது

Mr sanjen or whatever your name,
Apart from saying nasty things about tigers do you have anything constructive or realistic to say?
you say the tigers killed all the people who came for peace.
Where did you get the facts and figures?
It is the srilankan govt which sabotaged the peace talk from the start.
while they were having peace talks,
srilankan govt drowned tigers cargo ship,thanks to indian snooping and assistance.
While they were talking,behind the back of tigers, then srilankan ruling party was plotting to split the tigers and succeeded in making karuna the greatest traitor of the eelam tamil history after kakkai vanniyan.
while the ceasefire was on ,srilankan govt aided and abetted the killing of batticaloa political wing leader kousalyan,former tamil MP chandra nerhu,sitting tamil MP joseph Pararajasingham,another tamil MP Raviraj,vanni Tamil MP sivanesan,Colombo Tamil MP Maheswaran,Father karunarathnam ,tamil journalist nadesan,another famous tamil journalist sivaram ,Trincomalle tamil people federation leader vigneswaran and many others.Thousands of innocent tamils were killed by srilankan forces and their paramilitaries. these killings happened when the ceasefire was on.
you people are hellbent on hiding all the human rights violation and the war crimes committed by srilankan govt and try to depict them as some sort of angels with whom the tamil people can do business with.
The truth is sinhala govt and it's institutions are immersed in racist ideology and they are not prepared to have meaningful power sharing arrangement with tamils.
To cheat the international community the sinhala will talk about devolution and will make sure the devolution wouldn't even have the power of a village council .
India and other countries know the sinhala govt's cheating game ,but they are also in it for their own geopolitical,military and economical benefits.
For india and other countries the eelam tamil nation is dispensable for their own political games.eelam tamils are a small price for their geopolitics.
Only the people power can change this reality.

 
At Mon Jan 05, 09:49:00 AM GMT-6, Anonymous Anonymous சொன்னது

//நீங்க என்னதான் அசிங்கமா திட்டினாலும், எழுதினாலும் ஏன் வேட்டியையே உருவினாலும் அந்த தமிழினத்(துரோகி) தலைவர் அசைய மாட்டார். பதவி, குடும்பம் அதைத் தவிர எதுவுமே தெரியாது. அம்மணமா இருந்தாலும் ஆட்சியில இருக்கனும்.
அதுதான் தமிழினத்(துரோகி) தலைவரோட ஒரே நோக்கம்.//

சரியா சொன்னீங்க. என்ன ஒரு நாடகம். இந்திய அரசியலில் ஒரு கேவலமான ஒரு கபடதாரி.

 
At Mon Nov 09, 08:25:00 AM GMT-6, Anonymous Anonymous சொன்னது

I found this site using google.com And i want to thank you for your work. You have done really very good site. Great work, great site! Thank you!

Sorry for offtopic

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல