ஜேகேவின் சில குறிப்புகள்: அதே கேள்வி... அதே பதில்...

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Sunday, March 29, 2009

அதே கேள்வி... அதே பதில்...

ஆனந்த விகடன் 1-ஏப்ரல்-2009 இதழில் ’டீன் கொஸ்டீன்’ என்ற பகுதியில் ஒரு கேள்வியும் அதற்கு ஒரு ’நிபுணரின்’ பதிலும்...

கேள்வி: ஆங்கிலம் தவிர இன்னொரு மொழி கற்றுக்கொள்ள ஆசை. இந்தி, பிரெஞ்சு, ஜாப்பனீஸ், மலாய் என்று ஆளாளுக்கு சாய்ஸ் சொல்லி குழப்புகிறார்கள். எனக்கு பார்மசி கம்பெனியில் மார்க்கெட்டிங் பணி. எந்த மொழி கற்றுக்கொள்ளலாம் என்று வழிகாட்டுவீர்களா? - எம். ஆறுமுகம், சென்னை-45


பதில்: சித்ரா கிருஷ்ணன், தலைவர், School of English and Foreign Languages, சென்னைப் பல்கலைக்கழகம்.

சர்வதேச அளவில் ஆங்கிலம் தவிர, பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், மற்றும் இத்தாலிய மொழிகளுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். இந்தியாவில் இந்தி மொழிதான் பெருவாரியான மக்கள் பேசும் மொழி. எனவே அதைக் கற்றுக்கொண்டால் இந்தியாவில் எங்கு சென்றாலும் சமாளிக்கலாம். உலகில் அதிக மக்கள் பேசும் மொழி சீனம். ஆனால் அதற்கு இங்கு டிமாண்ட் கிடையாது. எனவே, அதைக் கற்றுக் கொள்வதால் புதிய மொழியைத் தெரிந்து கொண்டோம் என்ற திருப்தி மட்டுமே.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகள் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பாகக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு வெளிநாட்டுத் தூதரகத்திலும் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெளி நாட்டுக்குச் செல்லும் வாய்ப்புகள் உங்களுக்கு இல்லாவிட்டால், இந்தி மொழியைக் கற்றுக் கொள்வது உசிதமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

Labels:

படித்தவர்களின் கருத்துகள் - 1

At Wed Apr 15, 11:12:00 PM GMT-6, Blogger வாதி சொன்னது

வெளி நாட்டிற்கு வேலைக்கு செல்ல வழி இல்லாத நிலையிலும் ,இந்தியாவிலேயே இருக்க வேண்டி இருந்தாலும் இந்தி கற்றுக்கொள்ள கூடாது. அது தீட்டு. தெய்வ குத்தம்.அப்படியே எதாவது மொழி கற்றுக்கொள்ள ஆசை இருந்தாலும்,பிரென்சு,சுலு ,டூட்டூ போன்ற மொழிகளை கற்றுக்கொள்ளலாம்

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல