ஜேகேவின் சில குறிப்புகள்: ஈழ ஆதரவு முன்னணி கோரி ஆயிரம் வலைப் பதிவுகள்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Tuesday, March 03, 2009

ஈழ ஆதரவு முன்னணி கோரி ஆயிரம் வலைப் பதிவுகள்

அன்புள்ள வலைப்பதிவுலக நண்பர்களே,

உலகின் எந்த மனிதாபிமானக் குரலும் ஈழத்தமிழருக்காக ஒலிக்காத நிலையில், நாடாளுமன்றத் தேர்தலைத்தான் நம்மில் பலரும் நம்பியிருந்தோம். நமக்காக நாம்தான் குரல் கொடுக்க வேண்டும் எனவே நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழகம் தேர்ந்தெடுக்கும் என்று கனவு கண்டு கொண்டிருந்தோம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்ட இன்னிலையில் ஈழ ஆதரவுக் குரல் கொடுத்த சில கட்சிகள் கூட தமது அரசியல் வாழ்வைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழின எதிரிகளுடனும், துரோகிகளுடனும் கூட்டணி அமைத்துக் கொள்ளத் தயாராகிவிட்டதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. தமிழர்களின் தலையில் கொல்லி வைத்த தற்போதைய அரசிற்கு முட்டுக் கொடுத்த அதே கூட்டணியையும், இந்த அரசின் ஈழக் கொள்கையுடன் தமக்கு உடன்பாடுதான் என்று சொன்ன எதிர்க்கட்சியின் கூட்டணியையுமா மீண்டும் நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்?

அரசியல் கட்சிகள்தான் என்ன செய்வார்கள்? ஈழத்தமிழர் நலன் முன்னிறுத்தி தேர்தல் களம் இறங்கினால் டெபாசிட் மிஞ்சாது என்பதே அவர்களது கருத்து. அதனால் கொஞ்சமேனும் குறுகுறுக்கும் மனச்சாட்சியையும் கழற்றி வைத்துவிட்டு சந்தர்ப்பவாத கூட்டணிகளுக்குத் தயாராகிவிடுகிறார்கள். ஆனால் அந்தக் காலம் இதுவல்ல. இத்தருணத்தில் ஈழ ஆதரவு நிலை எடுக்காத கட்சிகள்தான் டெபாசிட் இழக்கப் போகின்றன. எல்லாம் மாறிவிட்டது என்பதை அவர்கள் உணரவேண்டும். அல்லது நாம் அவர்களை உணரச்செய்யவேண்டும்.

ஆனால், தலைவர்களின் தவறான கூட்டணி முடிவுகளால், ஈழ ஆதரவு வாக்குகள் பிளவு பட்டு எதிரிகளுக்கு நன்மையாகிவிடும் நிலை ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. அதைத் தடுப்பதற்காக நம்மாலான ஒரு முயற்சியாக நாம் தமிழக அரசியல் கட்சிகளை ஈழ ஆதரவு முன்னனி அமைக்கக் கோரி ஆயிரம் வலைப்பதிவுகள் எழுதுவோம் என உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். தமிழில், ஆங்கிலத்தில், மற்றும் நமக்குத் தெரிந்த அனைத்து மொழிகளிலும் எழுதுவோம். இந்தத் தேர்தலில் வலையுலகமும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். உங்கள் வரலாற்றுக் கடமையை செய்ய உரிமையுடன் அழைக்கிறேன்.

சுருதி குறையாமல் குரல் கொடுப்போம், உறுதி குறையாமல் போராடுவோம். தமிழீழ சுயநிர்ணய உரிமையை ஆதரிக்காத எந்த அரசியல் கட்சியையும் புறக்கணிப்போம்.

Labels: , , ,

படித்தவர்களின் கருத்துகள் - 5

At Tue Mar 03, 02:33:00 PM GMT-6, Blogger பாக்யா... சொன்னது

நான் நினைத்ததை நீங்கள் கூறி இருக்கிறீர்கள்.. இதுவே நமக்கு சரியான தருணம்...

 
At Tue Mar 03, 02:37:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

வருக பாக்யா...

உங்களது கருத்தையும் பதிவிடுங்கள். நமது குரலை உரக்கச் சொல்வோம்.

 
At Tue Mar 03, 03:37:00 PM GMT-6, Blogger எல்லாளன் சொன்னது

நன்றி

எம்மால் முடிந்த வரை பரப்புரை செய்வோம்
உண்மைத் தமிழர்களை வெளிக்கொண்டு வருவோம்

 
At Tue Mar 03, 07:53:00 PM GMT-6, Anonymous Anonymous சொன்னது

சிலர் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்கிறார்கள். புறக்கணிப்பதினால் தமிழ் விரோதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப வாக்குகள் விழும். தற்பொழுது திமுக கூட்டணியில் பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் இருக்கிறது. அதிமுக கூட்டணியில் மதிமுக, இந்தியக் கம்னியூஸ்ட் இருக்கிறது. எனது வாக்கு இப்படி அமையும்.

எனது தொகுதியில்
பாமக/ விடுதலைச் சிறுத்தைகள் -அதிமுக/மார்க்சிட் கம்னியூஸ்ட் போட்டியிட்டால் எனது வாக்கு பாமக /விடுதலைச் சிறுத்தை
மதிமுக/இந்தியக் கம்னியூஸ்ட் -திமுக/காங்கிரஸ் போட்டியிட்டால் எனது வாக்கு மதிமுக/இந்தியக் கம்னியூஸ்ட்
மதிமுக/இந்தியக்கம்னியூஸ்ட் - பாமக/விடுதலைச்சிறுத்தைகள் போட்டியிட்டால் எனது வாக்குகள் வேட்பாளர்களில் யார் தமிழ் உணர்வு கூடியவர் என்று பார்த்துப் போடுவேன்

அதிமுக/மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் - காங்கிரஸ் போட்டியிட்டால் எனது வாக்கு சுயேட்சை வேட்பாளர் ஒருவர் அல்லது பிஜேபி( வேட்பாளரைப் பொறுத்து)
திமுக -அதிமுக/மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் போட்டியிட்டால் எனது வாக்கு சிலவேளைகளில் திமுகவுக்கு போடுவேன் (வேட்பாளரைப் பொறுத்து) அல்லது சுயேட்சைக்கு வழங்குவேன்

 
At Thu Mar 05, 04:49:00 AM GMT-6, Anonymous Anonymous சொன்னது

Pongappa
Sarasari thamilan valaipathivellama padichu ottu podaran.
Ilavasam thane munnale nikkuthu.

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல