ஜேகேவின் சில குறிப்புகள்: இருத்தலெனும் சாபம்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Wednesday, May 20, 2009

இருத்தலெனும் சாபம்

மரணங்களின் நிழல்கள்
கட்டி இழுக்கின்றன
என் கால்களை
படுகொலையின் ஓலங்கள்
தேடியலைகின்றன செவிப்பறைகளை
ஊடக வாய்க்கால்களில் ஓடும்
தேசியச் சாக்கடைகள் தெறிக்கின்றன
மனிதத்தின் முகத்தில்
எனக்கும் ஆசைதான்
அப்பழுக்கற்ற இருத்தலைத் தேடுவதில்
ஆனால் இன்றெனக்கு
இருப்பதற்கு பொருமையில்லை
இருக்கவும் தெரியவில்லை
பெருவெளியை நிறைத்திருக்கும் விசும்பில்
சாவின் சுவடுகளில் படிந்திருக்கும்
துரோகப் புண்களில் வடியும்
சீழ் துடைக்க
என்னிடம் இல்லை
மயிலிறகோ, விரல்களோ, கரங்களோ
கோபங்கள் என்னைச்
சிறிது சிறிதாக சிதைக்கின்றன
கவிதைச் சுயமைதுனம் செய்து
காயங்களில் களிம்பு தடவுகிறேன்
எல்லாம் குமட்டுகிறது
இக் கவிதை உட்பட

Labels: , ,

படித்தவர்களின் கருத்துகள் - 3

At Thu May 21, 04:38:00 AM GMT-6, Anonymous Anonymous சொன்னது

தங்களின் ஆற்றாமை "புரிகிறது"தலைவரே!

நமது அரசியல் தலைவர்களின் "உயிருக்கு" எவ்ளவு பாதுகாப்பு

இன்று ராஜிவ் காந்தி இறந்த நாலாம்!

தலைவர்கள் வருவார்களாம் கல்லறைக்கு!

அதுக்கு பாதுகாப்பு படை!

என்ன நாடு இது! தமிழன் என்று சொல்ல நாக்கு கூசுகிறது!

உங்களை போன்று ஆற்றமையுள்ள...,

"தட்டி கேட்க்க வக்கு இல்லாத தமிழன் ஒருவன் நான்"!

 
At Sun May 24, 05:12:00 PM GMT-6, Blogger Veera சொன்னது

The world what we live is scar the hell out of me. I am just feeling for the first time to be born as who can think and when I think of all the conspiracy which is being staged by the so called democracy I am really scared to see that there is no neutral body or anybody who can show justice of at least pity. But another person in me could not accept defeat yet.The conspiracy started 20 years ago with the killing of Rajeev who was sympathetic for the cause of Palastiene and Tamils in Srilanka. The fact that Srilanka govt. put India in tight spot by arresting and killing Tamil rebels during peace time when IPKF was there probably to initiate conflict between IPKF and Tamil rebels and the fact that Sri Lanka gave arms to LTTE to fight IPKF, and Fox Jeyawardna is capable of such an act who said he saved 1200 Srilankan Soldiers by bringing IPKF. There is a greater and much distressing conspiracy in every act. Even now the conspiracy that KP was behind the killing of the Rebel leader is shocking and if it is true he helped those power who dont want any unrest or problem on hearing the news of leader's death and made him to give the announcement that he is alive to raise hopes of Tamils around the world and reduce the impact of the news of death and then to announce later when the everybody is almost certain that the LTTE leader is alive.But the only hope is the video picture Army has released which is nearly fake which give the last straw of hope that he has foilded this conspiracy attempt by make his body double to sacrifice his life to escape into the darkness of fake death to come out some time , but that is wishful hope thats all.
Will India Awake? or India is already Hijaked by external forces in form of CIA, ISI, Mozzat and NSI (of Srilanka)

Your world reflect all the grieving Tamilians thoughts. Hope there is a Dawn in our lifetime!

 
At Sun May 24, 08:34:00 PM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

அனானி தோழரே, உங்களது வருகைல்லும், நமது சோகங்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி.

வீரா,
ஆம் தமிழர்களின் துரோகச் செயல்கள் திகைக்க வைக்கின்றன. சிலர் அவர்களது வீரத்தினாலும், பலர் அவர்களின் துரோகத்தினாலும் வரலாற்றில் பதியப்பட்டு விட்டார்கள்.இது கையறு நிலைப் படலம் பார்க்கலாம் எவ்வளவு நாள் இதுவும் இருக்கப்போகிறதென்று

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல