தமிழனுக்கு உணவில்லை எனினும் சும்மா இருந்திடுவோம்
இனிமேல் சாப்பிட எதுவுமே இல்லை எனும் அவலக்குரல் கொடுக்கிறர்கள் வன்னியில் உலகத்தால் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் சபிக்கப்பட்ட ஏழை மக்கள். அறிக்கைத் துண்டுகளின் மூலம் கூட ஆறுதல் அளிக்கத் தவறிய இவர்களா ”ஸோற்றுப் பார்சலை” விமானம் மூலம் போடப் போகிறார்கள். கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் இந்த அவலத்தை எப்படி ஜீரணிப்பது என்று தெரியவில்லை. அதற்குத் தேவையில்லாமல் முத்துக்குமார் போன்ற தைரியசாலிகள் முன்னரே செத்துப் போய்விட்டார்கள். எனக்கு அந்த அளவிற்கு தைரியமும் இல்லை, வேறெதையும் செய்ய வக்குமில்லை. இனிமேல் புலம்புவதற்கு கூட அருகதை இருக்கிறதா எனத் தெரியவில்லை. என் நண்பன் ஒருவன் அதைச் சுட்டிக்காட்டினான். “நீ இதைப்பற்றி பேசி என்ன கிழித்தாய்” என்று. அவன் சொல்வதும் சரிதானே.
----
என் சிற்றறிவிற்கு எட்டிய எந்த சித்தாந்தங்களின் மீதும் திடமான நம்பிக்கை எனக்கு இல்லை(மதங்களிலிருந்து, கம்யூனிசம் வரை). தனிப்பட்ட முறையில் இந்த உலகத்தையும் சமூகத்தையும் அதில் என்னுடைய இடத்தையும் நான் ஒரு விதத்தில் புரிந்து கொண்டிருந்தேன். அந்த புரிதலின் அடிப்படையில் ”எனக்கு நேர்மையாக நான் நடந்து கொள்ளவேண்டும்” என்பதே எனது கொள்கை. அதுதான் எனது சரிகளையும், தவறுகளையும் தீர்மானித்தது. யாருக்கும்(விலங்குகளுக்குக் கூட) நம்மால் துன்பம் விளையக்கூடாது என்பதற்காக அசைவம் சாப்பிடுவதை தவிர்த்தது மட்டுமல்லாமல்; பால், முட்டை மற்றும் தோல் பொருட்கள் போன்ற விலங்குப் பொருட்களைக்கூட தவிர்த்து வருகிறேன். குளோபல் வார்மிங்கிற்கு நான் பங்களிக்கக் கூடாது என்பதற்காக கொஞ்ச நாள் சைக்கிள் ஓட்டினேன்(பின்னர் சவுகரியப் படாததால், கொள்கைச் சமரம் செய்துகொண்டு தானுந்திக்கு மாறிவிட்டேன் என்பது வேறு விசயம்). ஆனால் இதுபோன்ற கொள்கைச் சூரத்தனங்கள் எல்லாம் இப்போது பைத்தியக்காரத் தனமாகத் தோன்றுகிறது. சமூகம் மற்றும் சமூகத்தில் என் இடம் பற்றிய எனது கேள்விகளும் எனது புரிதல்களும் கூட பைத்தியக்காரத் தனமாகத்தான் தோன்றுகிறது.
பிகு: தற்போது, குளோபல் வார்மிங் சீக்கிரம் வந்து உலகம் முழுவதையும் இப்போதே கபளீகரம் செய்து விடாதா என லேசாக ஒரு ஆசை அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது என்பதையும் நேர்மையுடன் ஒத்துக் கொள்கிறேன்.
----
தேர்தல் என்ற ஒரு மயிரு நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தில் நடப்பது போலத்தான் இதுவும். கண்ணெதிரே நடக்கும் கேனத்தனங்களை ஒன்றும் செய்ய முடியாமல் ஒரத்தில் நின்று புலம்ப மட்டுமே முடிகிறது. இவர்கள் எல்லாம் ஓட்டுப் பொறுக்கிகள் என்று தெரியும் ஆனால் தமிழர்களின் குருதி நிரம்பிய குளத்தில் இறங்கி ஓட்டு பிடித்து விளையாடுவார்கள் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால், சாமான்ய மக்களிடம் பேசினால் பித்தே பிடித்துவிடுகிறது. காவேரி டெல்டா பகுதிகளில் ஈழத்திற்கு ஆழமான ஆதரவு என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். தமிழர்கள் சாவதைப் பார்த்துவிட்டு ஓட்டுக்கேட்டு வருபவர்களை செருப்பால் அடிப்பார்கள் என்று நினைத்தேன். கூச்சமே இல்லாமல் எல்லோரும் திமுக கொடியை பைக்கில் கட்டிக்கொண்டு ஜாலி பன்னிக் கொண்டிருக்கிறார்கள்(பைக்கில் கொடியுடன் மாஸ் காட்டினால் இருநூறோ ஐநூறோ தருகிறார்களாம்).
மக்களிடம் தேர்தல் பற்றி கேட்டால், “அந்த ஊர்ல TV கொடுத்துட்டய்ங்க அவங்க எல்லாம் திமுகவுக்குத்தான் ஓட்டு போடுவாய்ங்க. எங்க ஊர்ல இன்னும் TV கொடுக்கல அதனால அம்மா கூட்டணிக்குத்தான் ஓட்டு போடுவாய்ங்க” என்று சர்வ சாதரணமாக அரசியல் சமன்பாட்டை விளக்குகிறார்கள். ஈழம் பற்றிய தெரிதலும் சுத்தமாக இல்லை, புரிதலும் சுத்தமாக இல்லை.
----
பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தமிழர் நலக்கூட்டணி அமைய முயற்சிக்கவும், அப்படி அமையும் கூட்டணிக்கு பிரச்சாரம் செய்யவும் http://voteforeelam.in என்ற தள முகவரியையும், PHP/MySQl வசதியுடன் கூடிய serverக்கும் பணம் கட்டி பதிந்து வைத்திருந்தேன். பின்னர் நடந்த நாடங்களைக் கண்டு மனதுடைந்ததில் அதை அப்படியே விட்டு விட்டேன். யாருக்காவது அந்த தளத்தை அமைத்து எழுது விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும். அதற்கான உரிமையயையும், எனது சோகங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.
படித்தவர்களின் கருத்துகள் - 7
thalaivar ku mudhugelumbu nalla irunda padukama straight a okandhu unna viradam irupar..spineless cowards..
Aravind raj
உனது உணர்வினை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
உன்னால் எந்த உயிருக்கும் தீங்கு நேராமல் பார்த்துக்கொள்கிறாய் என்பது மிகவும் நல்ல விசயம். தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்.
அரவிந்த் ராஜ், செழியன்....
சோகங்களை பகிர்ந்து கொண்டதற்காக மிக்க நன்றி
ஜேகே
நண்பரே,
'உலகின் ஏதேனும் ஒரு மனிதனிடத்தில் மட்டும் வன்முறை இருக்குமானால் கூட அது முழு உலகின் அமைதிக்கும் எதிரானது ‘என்பது தத்துவ ஞானி காலம் சென்ற அருமை அண்ணன் ஜே.கே . சொன்னது. அவர் போலவே குறியீட்டு பெயர் வைத்தது மட்டும் அல்லாமல் அவர் சொன்ன அந்த தத்துவத்தை கடைப்பிடித்து வாழும் தங்களை நினைத்து பெருமை கொள்கிறேன். நிற்க!
ஈழத்தில் நடப்பது வெற்று வார்த்தைகளால் விவரிக்கக் கூடியது அல்ல (அல்லது) எனக்கு அந்த துயரங்களை எழுத்தில் வடிக்க புலமை மற்றும் தைரியம் இல்லை.
நாம் செய்ய வேண்டியது.
.. தொடர்ந்து குரல் கொடுப்போம்.. எழுதுவோம்...., மக்களுக்கு விளங்க வைப்போம்,,நிச்சயம் புரிந்து கொள்வார்கள் .. டி.வி, கொடுத்து மயக்கியது ஆட்சியாளர்களின் குற்றம்.. மக்களிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம்.,, மற்ற மாநில மக்களிடத்திலும் எடுத்து செல்வோம்.. ,தேசிய அரசுக்கும்,வெளி நாடுகளுக்கும் நம் தரப்பு நியாத்தை சரியான முறையில் லாபி செய்ய வேண்டும்.. திட்டமிட்டு குழுவாக இயங்கி, ஒத்த கருத்துடைய நண்பர்களை ஒருங்கினைத்து நல்ல முறையில் வெற்றி கிடைக்கும் வரையில் இயங்க வேண்டும்..இதுவே நல்ல தருணம் நண்பரே!
எந்த வித ஊடகங்களும் சாதகமாக இல்லாத நிலையிலும் , எல்லா ஊடகங்களும் தனக்கு எதிரான நிலையிலும், தன் இயக்கத்துக்குள்ளேயே எதிரிகள் ,துரோகிகள் இருந்தும் கூட ,தெருத்தெருவாக கிராமம் கிராமமாக ஒற்றை வயேதிகனாக இயங்கி தனது நேர்மையான பிரச்சாரத்தின் மூலம் மக்களை மேம்படுத்திய,ஆயிரமாயிரமாண்டுகளாக அடிமைதளையில் இருந்த மக்களை நேசித்து , இறுதி மூச்சு வரை உழைத்த படிக்காத அந்த ஈ.வே.இராமசாமி கிழவனை சற்று மனக்கன் முன் நினைத்து பாருங்கள் நண்பரே. நம்மால் முடியாதா???
அனைவரும் பெரியார் ஆக முடியாது ( ஏன் எவனும் இனி அவன் போல் முடியாது ) ஆனால் அனைவரும் சேர்ந்தால் ,அட ஒரு ஆயிரம் பேர் தொடர்ந்து இயங்க முடிந்தால் நிச்சயம் ஒரு மற்றம் வரும் ..
இந்த வெற்று தேர்தலோ,பிரபாகரனின் ( மீடியாக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ) முடிவோ ,ஜெயலலிதாவின் ஆதரவோ (!!!) நிச்சயம் தமிழ் ஈழத்தின் முடிவு அல்ல .இவை வெறும் நிகழ்வுகளே.. காலம் கனியும் .. கனிய வைப்போம்..
வாதி சார்...
உங்களுடைய ஆறுதலான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. இப்பொழுதுதான் இந்த வீடியோ (http://kalvetu.blogspot.com/2009/05/blog-post.html) பார்த்துவிட்டு ஒரு பாட்டம் அழுது முடித்தேன்.
ஆம் ஏதாவது செய்யவேண்டும்... இல்லையென்றால் நாமெல்லாம் குற்ற உணர்விலேயே மன நோயாளிகளாகிவிடுவோம்.
தலைவரே ! ஜெய்
உங்களது உள் உணர்வினை நானும்
பகிர்ந்து கொள்கிறேன்.
என்ன செய்வது?
இன்று தேர்தல் நீயா/ நானா கள்ள ஒட்டு போடா தயாராக இருக்கும் திருட்டு கும்பல்.
"ஒரு கை தட்டி ஓசை கேட்குமா?"
இளைய சமுதாயம் நீங்கள் சொன்னதுபோல் "கொடியை பைக்கில்
கட்டிக்கொண்டு ஜாலி பன்னிக் கொண்டிருக்கிறார்கள்(பைக்கில் கொடியுடன் மாஸ் காட்டினால் இருநூறோ ஐநூறோ தருகிறார்களாம்).
அந்த 500 அவனுங்களுக்கு தண்ணி அடிக்க உதவும் இல்லயா?
உலகமே அப்படிதான் பச்சையா எங்கு இருக்கோ அங்கு தாவும் மனித இயல்பு. எது சரி/ தப்பு யாருமே காண்பதில்லை.
விஜய் டிவி அந்த லைவ் ஷோ நானும் பார்த்தேன். என்னால் ஏற்று கொள்ள இயலவில்லை! என்ன செய்ய என்னால் முடிந்தது ஒரு துளி கண்ணீர்.
எப்போ திருந்துமோ இந்த உலகம் பார்க்கலாம்.
என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை?
உதவி செய்ய இயலவில்லை.
கடவுள் கூட கருணை காட்டவில்லை அப்பாவி மக்களுக்கு!
இவள்
உங்கள் தோழி.
அனானி தோழி...
மிக்க நன்றி...நாளுக்கு நாள் இந்த கொடுமை அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை.
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல