சும்மா விளையாட்டுக்கு...
ஒரு வருடமாக சிரமப்பட்டு படித்து +2 தேர்வு எழுதிய கையோடு சென்னை சென்று ஒரு மாதம் பயிற்சி எடுத்து நுழைவுத்தேர்வு எழுதினார் என் தங்கை. தேர்வு மதிப்பெண்கள் வந்தவுடன், எதிர்பார்த்ததை விட குறைவாக மதிப்பெண் வாங்கியதற்காக என் தங்கையிடம் அப்பா ஒரு வாரம் பேசவேயில்லை. ஏதோ பிற்பாடு +2 வில் நல்ல மதிப்பெண் வந்ததால் அப்பா இப்ப ஓகே. தமிழ் நாட்டில் இது போல சுமார் ஒன்னரை லட்சம் மாணவர்கள் இப்படியெல்லாம் பட்ட அவஸ்த்தை கொஞ்சம் அல்ல. எல்லாம் முடிந்து "அப்பாடா......." என்று பெரு மூச்சு விடத்தயாராகும்போது... CM தடால்னு "Entrance Exam aa" அதெல்லாம் ஒன்னும் இல்லை சும்மா வெளையாட்டுக்கு என்கிறார்...
கிட்ட பிடித்துக் கேட்டால் கிராமப்புற மாணவர்களை நோக்கி கை காட்டுகிறார். திடீரென்று எங்கிருந்து வந்தது கரிசனம் என்று தெரியவில்லை. இன்னொரு காரணம் குழப்பத்தை தவிர்க்கவாம். எனக்கென்னவோ அப்படித்தோனவில்லை. இனிமேல்தான் பெரிய குழப்பமெல்லாம் ஆரம்பிக்கப் போகிறது. எத்தனை பேர் நாளைக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் camp போட போகிறார்கள் என்று தெரியவில்லை.
இவர்களது அரசியல் சண்டைக்கு ஏன் கல்லூரி வளாகங்களைத் தேடிப்போகிறார்கள் என்று தெரியவில்லை. வேரு எந்த முச்சந்தியும் கிடைக்கவில்லையா என்ன? மக்கள் மீது கரிசனமோ, இல்லை தேர்தல் பயமோ, உண்மையில் என்ன காரணத்துக்காக இந்த முடிவு எடுக்கப் பட்டதென்பது நமக்கு ஒரு நாளும் தெரியப்போவதில்லை. இப்படி ஒரு knee-jerk reaction கொடுக்க அம்மாவால்தான் முடியும். இது போன்ற புறங்காலில் கண்ணை வைத்திருக்கும் கிட்டப்பார்வை வியாதியர்கள் முன்னால் இருந்து வண்டி ஓட்டும் வரை, இந்தியா "முன்னேரிய" ஊரை அடைவது ரொம்ப கஸ்டம்தான்....