ஜேகேவின் சில குறிப்புகள்: February 2009

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Tuesday, February 17, 2009

தாம்பரம் மனித சங்கிலி புகைப்படங்கள்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவை அழைத்திருந்த மனித சங்கிலிப் போராட்டம் தாம்பரத்தில் இன்று நடைபெற்றது. திருமாவளவன், பழ நெடுமாறன், கோ க மணி போன்ற தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட எல்லா புகைப்படங்களும் இங்கே

சில புகைப்படங்கள் சில கீழே.

From Human Chain Protest For Tamil Eelam At Tambaram


From Human Chain Protest For Tamil Eelam At Tambaram


From Human Chain Protest For Tamil Eelam At Tambaram


From Human Chain Protest For Tamil Eelam At Tambaram


From Human Chain Protest For Tamil Eelam At Tambaram


From Human Chain Protest For Tamil Eelam At Tambaram


From Human Chain Protest For Tamil Eelam At Tambaram


From Human Chain Protest For Tamil Eelam At Tambaram

Labels: ,

Sunday, February 15, 2009

மக்களின் பேரெழுச்சியே இப்போதைய அவசரத் தேவை: சிறிதுங்கா ஜெயசூரியா

இலங்கையில் இன அழிப்புப் போரும் அதன் விளைவாக தமிழர்களின் மனித அவலமும் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், பெரும்பாலான சிங்களர்கள் போருக்கு ஆதரவாகவும், தமிழர்கள் தேசிய அபிலாசைகள் உலகத்திற்கே பெரிய இடரை விளைவிக்கும் என்கிற ரீதியிலும் தான் குரல் எழுப்பி வருகிறார்கள். சர்வதேச சமூகமும் ஏதோ சில தமிழ் ஆடுகள் இறந்து போகின்றன, அவற்றை கொடுமை செய்து கொல்லாதீர்கள், எதிகலான முறையில் கொல்லுங்கள் என்ற வகையில்தான் நிலைப்பாடு எடுத்துள்ளன. இந்த பின்னனியில்தான் சிறிதுங்க ஜெயசூரியா அவர்கள் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிப்பதாக இருந்தது.

சிறிதுங்கா ஜெயசூரியா, இலங்கை ஐக்கிய பொதுஉடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பெற்றவர். தேர்தல் அறிக்கையிலேயே தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவு தெரிவித்திருந்தவர்.

From Blogger Pictures


இவரைப் அறிமுகம் செய்துவைத்தார் Committee For Workers International என்ற சோசலிச அமைப்பைச் சேர்ந்த, லண்டனில் இருந்து வந்திருந்த, ஈழத்தமிழர் சேனன். அவர் கூறுகையில், எத்தகைய கொலை மிரட்டல்களுக்கு எதிராக தனது கருத்தை ஜெயசூரியா முன்வைக்கிறார் என்பதைக் குறிப்பிட்டர். மனித உரிமைகள் மீறல் இருக்கலாம் என்று கூறியதற்காக BBC, CNN, ஜெர்மன் தூதர் மற்றும் சுவிஸ் தூதர் போன்ற ஆனானப்பட்டவர்களையே நாட்டை விட்டு துரத்துவோம் என மிரட்டும் அரசு இயந்திரம், ”இனப்படுகொலையை நிறுத்து” எனக் குரல் கொடுக்கும் சிங்களவரை என்ன செய்வார்கள் என்பதை யாரும் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் பொழுது, ஜெயசூரியா சொன்னார் “நான் ஒன்றும் மறைந்து கொண்டு பிரச்சாரம் செய்யவில்லை. நான் இலங்கைக்கு திரும்பச் செல்வேன். நான் கொலை செய்யப் படலாம். எனது தோழர்கள் பலர் கொலை செய்யப் பட்டுள்ளார்கள்.” இவரது தன்னலமற்ற பணிக்கு நான் தலை வணங்குகிறேன்.


பேச்சின் சாராம்சத்தை எனது ஆங்கிலப் பதிவில் இட்டுள்ளேன். நமது போராட்டத்தையும் அதன் நியாயத்தையும் தமிழர்களிடம் மட்டுமல்லாது பிறருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முறையில் இனிமேல் பொதுவாக ஆங்கிலப் பதிவில்தான் அதிகம் எழுதப் போகிறேன்.


சேனனின் அறிமுகம்
From Blogger Pictures


ஜெயசூரியா பேசுகிறார்
From Blogger Pictures


பார்வையாளர்கள்
From Blogger Pictures


பார்வையாளர்கள்
From Blogger Pictures

Sunday, February 01, 2009

வேடிக்கை பார்க்கும் தமிழினமே....

முத்துக் குமாரின் இறுதி ஊர்வலத்தில் எதிரொலித்த உணர்ச்சிப் பூர்வமான முழக்கங்கள் வலையுலகையும் தொடவேண்டுமென்பதற்காக நினைவிலிருந்த சில கீழே

முத்துக்குமாருக்கு...

வீர வணக்கம், வீர வணக்கம்
முத்துக்குமாருக்கு வீர வணக்கம்

வீர வணக்கம், வீர வணக்கம்
மாவீரன் முத்துக்குமாருக்கு
வீர வணக்கம் செய்கின்றோம்

தமிழக அரசே தமிழக அரசே
முத்துக்குமாரின் தியாகத்திற்கு
நிதி வேண்டாம் நிதி வேண்டாம்
நீதி வேண்டும் நீதி வேண்டும்


தமிழனுக்கு...

வேடிக்கை பார்க்கும் தமிழினமே!
உங்களுக்காகச் செத்தான் முத்துக்குமார்
இன்னும் ஏன் வேடிக்கை?
வீதியில் வந்து போராடு!

வேடிக்கை பார்க்கும் தமிழினமே!
உந்தன் எந்தன் வரிப்பனம்
உன் இனத்தை அழிப்பதற்கா?
நம் இனத்தை அழிப்பதற்கா?
வீதியில் வந்து போராடு!

ராஜிவ் காந்தி கொலை பற்றி...

கொன்றது யார்? கொன்றது யார்?
ராஜிவ் காந்தி படுகொலையில்....
செத்தது எல்லாம் போலீஸ்காரன்.
எங்கே போனான் காங்கிரஸ்காரன்?

ஏன் கேட்கவில்லை...

எரிகிறதே எரிகிறதே...
தமிழீழம் எரிகிறது...
இந்து கோயில் எரிகிறதே...

சோ பார்ப்பான் கேட்கல...
தினமலர் கேட்கல...
இந்துராம் கேட்கல...
கருணாநிதி கேட்கல...
ஜெயலலிதா கேட்கல...
விஜயகாந்த் கேட்கல...

ஏன்யா கேட்கல?

பாப்பான் சாகல!
பாப்பாத்தி சாகல!
அதான் கேக்கல.

குடும்ப அரசியல் பற்றி...

அழகிரிக்கு மதுரையாம்
ஸ்டாலினுக்கு சென்னையாம்
கனிமொழிக்கு டெல்லியாம்
பேரனுக்கு டீவியாம்
தமிழனுக்கு நாமமாம்
உனக்கும் எனக்கும் நாமமாம்.

துரோகம்

முதுகில் குத்தும் கருணாநிதியே
முத்துக்குமாரை கொன்றாயே

தமிழீழம்...

வெல்லட்டும் வெல்லட்டும்
புலிகள் படை வெல்லட்டும்
மலரட்டும் மலரட்டும்
தமிழீழம் மலரட்டும்

இதுபோல இன்னும் பல கோபமும், பொருளும், உணர்ச்சியும் பொதிந்த முழக்கங்கள். எல்லாவற்றையும் விட எனக்கு முக்கியமாகத் தோன்றியது தமிழக மக்களை நோக்கி எழுப்பப் பட்ட இந்த முழக்கம்தான்... தமிழர்களுக்கு காதில் விழுமா?

வேடிக்கை பார்க்கும் தமிழனமே
வீதியில் வந்து போராடு!

Labels: ,