ஜேகேவின் சில குறிப்புகள்: October 2008

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Wednesday, October 29, 2008

புலி இல்லாமல் புலிக் குழம்பு வைத்தல்

டிஸ்கி ஒன்னு: முதலில்... “புலி”யை அகராதியிலிருந்து நீக்கி விட வேண்டும். இந்தியாவின் தேசிய விலங்கைப்பற்றியோ அல்லது சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவலைப் பற்றியோ குறிப்பிடுவதாக இருந்தால்கூட “பூனை போன்ற ஒரு விலங்கு” என்றே சொல்லவேண்டும். மீறி யாராவது “புலி” என்று சொன்னால் ”இந்திய தண்டனைச் சட்டம்” பிரிவு 124A யின் கீழ் கம்பி எண்ண வைத்து விடுவார்கள். உங்களுக்கு சாப்பிட வேண்டுமா இல்லை கம்பி எண்ண வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

டிஸ்கி ரெண்டு/மூனு: சமையல் குறிப்பின் கடைசியில் இருக்கு. கொஞ்சம் பொருத்தருள்க

தேவை:

1) கொட்டை நீக்கப்பட்ட பழைய புலி இரண்டு துணுக்கு
2) குழம்பு வைக்கத் தேவைப்படும் மற்ற இத்யாதிகள்
2அ) இந்த குழம்பு ஐயர்/ஐயங்கார் வீட்டு ஸ்டைலில் வைக்கப்படுவதால் வெங்காயங்கள் பூண்டுகளுக்கு இங்கே வேலை இல்லை


செய்முறை:

1) முதலில் கொட்டை நீக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட புலிகளை தேசிய வடிநீர்(இதை தேசிய சிறுநீர் என்றும்/ தேசிய ஆண்மை இரை என்றும் சில இடங்களில் அழைப்பர்) விட்டு நன்கு கழுவ வேண்டும். இதன் மூலம் பல பிரிவினைக் கிருமிகள் கொல்லப்பட்டு, நாளை உங்களுக்கு வயிற்றுப்போக்கு வருவது தடுக்கப்படுகிறது.
2) அவ்வாறு கழுவப்பட்ட புலிகளை ஒரு சட்டியில் வைக்கவும்.
3) உங்கள் சமையல் அறையில் கொட்டை நீக்கப்படாத புலிகள் ஏதாவது இருக்கிறதா எனத் தேடவும். அப்படி ஏதேனும் இருப்பின் அவற்றை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட “ஹிட்” ஸ்ப்ரே கொண்டு அழிக்கவும்.
3அ) “ஹிட்” ஸ்ப்ரே விஷம் நிறைந்தது., அருகில் இருக்கும் அரிசி சோறையும் அழித்துவிடும் என்று சில மற மண்டைகள் சொல்லும். அவர்களை IPC Section124Aஇல் உள்ளே தள்ளிவிட வேண்டும்.
3ஆ) உங்களுக்கு ஹிட் ஸ்ப்ரே அடிக்க தெம்பு இல்லையென்றால் தெருவில் போகும் அஹிம்சைக்கு பெயர்போன புத்த சன்னியாசிகள் யாரையாவது கூப்பிட்டு அவர்களை அடிக்கச் சொல்லவும்.
3இ) கொட்டை நீக்கப்படாத புலிகளை நீங்கள் அழிக்கும் வரை அடுத்த நான்காவது சமையல் குறிப்பிற்கு நீங்கள் போக முடியாது.
4) கொட்டை நீக்கப்படாத புலிகள் ஏதும் இல்லையென்று சர்வதேச தரச் சான்று பெற்றுக்கொள்ளவும்.
5) தரச்சான்று பெற்ற பின் கொஞ்ச நாள் காத்திருக்கவும்.
6) பின், கொட்டை நீக்கப்பட்ட புலிகளை ”கெட்டுப் போய் நாற்றம் வருகிறதென்று” டாய்லெட் சின்கில் கொட்டி நிறைய தண்ணீர்(முடிந்தால் காவிரி நீர் விடவும். புலிகளுக்கு மிகவும் பிடித்தது) விட்டு கழுவவும்.
7) ”கொட்டை உள்ள/கொட்டை இல்லாத புலி ஏதும் இல்லாததால் புலிக் குழம்பு வைப்பது சாத்தியம் இல்லை” என்று ஒப்பாரி வைக்கவும்.
8) பின்னர் இருக்கும் இத்யாதி பொருட்களை வைத்து ஐயர் அல்லது ஐயங்கார் வீட்டு ஸ்டைலில் சாம்பார் வைக்கவும்

டிஸ்கி ரெண்டு : “புலி” என்ற சொல்லை அகராதியில் இருந்து நீக்கிவிட்டு நீ மட்டும் ஏன் பயன் படுத்துகிறாய் என்று யாராவது கேட்கும்பட்சத்தில்... ”நீங்கள் புலிக்குழம்பு வைக்கப்போய் ஜெயில் கம்பி எண்ணக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் “புலி” என்று நான் சொன்னதற்காக நான் ஜெயில் கம்பி எண்ண வேண்டியிருந்தால் அது ராஜினாமா மிரட்டல் விடுவது போல ஜுஜுபி மேட்டர்” என சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்

டிஸ்கி மூனு: பதிவில் எழுத்துப் பிழைகள் தெரிந்தோ தெரியாமலோ இருக்கலாம்.

Labels: ,

Friday, October 24, 2008

குர‌ல்வ‌ளையை நெறிக்காதீர்

காங்கிர‌ஸ் க‌ட்சியின் பாசிச‌த் த‌ன‌மான‌ கோரிக்கைக‌ளுக்கு ப‌யந்து க‌லைஞ‌ர் தொட‌ங்கி வைத்த‌ ச‌ட்ட‌த்தின் ப‌ய‌ண‌ம் இன்று மான‌மிக்க‌ த‌மிழ‌ர்க‌ள் சீமான், அமீர் கைதில் முடிவ‌டைந்து இருக்கிற‌து. இது ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு யாராவ‌து தீவிர‌மாக‌ ஆத‌ர‌வு தெரிவித்தால் அவ‌ர்க‌ளுக்கும் இதே க‌திதான் எனும் பீதியைக் கிள‌ப்புவ‌த‌ற்கான‌ ந‌ட‌வ‌டிக்கை. அல்ல‌வா?

க‌லைஞ‌ர் அவ‌ர்க‌ளே....என்ன‌ ந‌ட‌க்கிற‌து. த‌மிழீழ‌ விடுத‌லைக்கு ஆத‌ர‌வு தெரிவித்தால் அவ‌ர்க‌ளுக்கும் தீவிர‌வாத‌ ப‌ய‌ங்க‌ர‌ வாத‌ முத்திரை குத்தி உள்ளே த‌ள்ளுவ‌தா...அவ‌ர்க‌ள் என்ன‌ அப்ப‌டி இந்திய‌ இரையாண்மைக்கு குந்த‌க‌ம் விளைவித்து விட்டார்க‌ள். இந்தியா சிங்க‌ள‌ர்க‌ளுக்கு ஆயுத‌ உத‌வி செய்ய‌வில்லையா. நிறுத்த‌ச்சொல்லி ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ த‌மிழ‌ர்க‌ள் குர‌ல் கொடுக்க‌வில்லையா. அத‌ற்கு ஒப்புக்கு சப்பானி கார‌ண‌ம் சொல்லி அவ‌ர்க‌ள‌து சிங்க‌ள‌ ஆத‌ர‌வு கொள்கையை தொட‌ர‌வில்லையா. ந‌ம‌து 40 உறுப்பின‌ர்க‌ளின் தெம்பில் ஆட்சி ந‌ட‌த்திக் கொண்டு ந‌ம‌து ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு எதிரான‌ இன‌ அழிப்பிற்கு உட‌ந்தையாக‌ இருப்ப‌து அயோக்கிய‌த்த‌ன‌ம் இல்லையா. அதைத்தானே அமீர் சொன்னார்.

நீங்க‌ள் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் ராஜினாமா செய்வார்க‌ள் என்று சொன்னதைக்கூட‌ விளையாட்டாகத்தானே எடுத்துக் கொள்கிறார்க‌ள். ஏதோ முக‌ம‌ன்கூறுவ‌து போல‌ போர் பிர‌ச்சனைக்கு தீர்வாகாது என‌ கிளிப்ப்பிள்ளை போல‌ சொல்லிக்கொண்டிருக்கிறார்க‌ள் பிர‌த‌ம‌ரும், வெளிவிவ‌கார அமைச்ச‌ரும்.

இந்த‌ போக்கு உண‌ர்வுள்ள‌ யாருக்கும் க‌டுப்பை கிள‌ப்பாதா. அவ‌ர்க‌ள், உன்னால் முடியாவிட்டால் சொல் நாங்க‌ள் எங்க‌ள் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு உத‌வுகிறோம் என்று தானே சொல்வார்க‌ள். அது தானே இங்கே ந‌டக்கிற‌து. நீங்க‌ள் கூட‌ இது ஒரு அப‌யக்குர‌ல் என்று ம‌த்திய அர‌சிட‌ம் சொன்ன‌போது அதைத்தானே உண‌ர்த்தினீர்க‌ள். அத‌ற்காக‌ சிலரை ம‌ட்டும் கைது செய்வ‌து அர‌சிய‌ல் அப‌த்த‌ம் ம‌ட்டும‌ல்ல‌...பிர‌ச்ச‌னையை திசை திருப்பி விடும்.

த‌யவு செய்து குர‌ல்வ‌ளையை நெறிக்காதீர்க‌ள்

Labels: ,

Thursday, October 23, 2008

என்ன கொடுமை கலைஞர் ஐயா இது...

கலைஞரின் அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானங்களின் தீவிரம் மிக மகிழ்ச்சியைத் தந்தாலும், கொஞ்சம் பயத்தையும் தந்தது, வெகு சீக்கிரத்தில் இது பிசு பிசுத்து விடுமோ என்று. இருப்பினும் போராட்டம் முக்கிய பரிமானத்தை அடைந்த ஏதாவது நல்ல விளைவுகள் ஏற்படுத்தும் என்று ஒரு நப்பாசை இல்லாமல் இல்லை. ஆனால் அதற்குள் கலைஞரே ஆட்டத்தைக் கலைத்துவிடுவார் போலிருக்கிறது. இப்பொழுது எதற்கு வைகோவை கைது செய்ய வேண்டும். ’ஜெ’த்தனமான் அறிக்கைகளுக்கு பயந்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதா.

அப்படி என்ன வைகோ சட்டத்திற்கு புறம்பாக நடந்துகொண்டார். ஆயதப் போராட்டத்திற்கும், பிரிவினை வாதத்திற்கும் கருத்துரீதியாக ஆதரவு தெரிவிப்பது எந்த சட்டத்தின் படி குற்றம்? கருத்து ரீதியாகத் தானே எலோரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர், பாரதிராஜா என ஆதரவு தெரிவிப்பவர்களையெல்லாம் கைது செய்து உள்ளே தள்ளச் சொல்வது ஹிட்லர்தனமாக இருக்கிறது.

ஐயா, இந்திய அதி தேச பக்த சிகாமனிகளே...சிறைக்கம்பிகளைக் காட்டி மக்களின் குரல்வலைகளை நெறிக்காதீர்கள். நீங்கள் எது நடக்க வேண்டாம் என்கிறீர்களோ அதை நடக்கவைத்து விடாதீர்கள். வடக்கில் ஒரு காஷ்மீர் போதும். தெற்கிலும் ஒன்று வேண்டாம்.

கலைஞரே...தமிழர்களுக்கு உண்மையிலேயே முதுகெலும்பில்லை என்று நிரூபிக்க வேண்டாம். தயவு செய்து வைகோவையும் மற்றவர்களையும் பினையிலாவது உடனடியாக விடுவியுங்கள். நமது பங்காளிச் சண்டைக்கு இதுவா நேரம். ஒரு இனம் உங்களின் தீர்க்கமான நடவடிக்கைகளுக்காக ஏக்கத்தோடு காத்திருக்கிறது.

Labels: ,

Sunday, October 12, 2008

தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு பெருவாரியான ஆதரவு : இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்துக் கணிப்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ்/தினமணி குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் புலிகளுக்கு பெருவாரியான ஆதரவு இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் மிக ஆச்சரியமாகவும் இதுவரை ஊடகத்தால் சித்தரிக்கப்பட்ட நிலைக்கு முற்றிலும் மாறாகவும் உள்ளன.

”பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டால்” என்ற கேள்விக்கு
  • ”நாம் அவரை இராஜிவ் கொலை வழக்கு விசாரணைக்காக இந்தியாவிற்கு கொண்டு வரக் கோர வேண்டும்” - 6%
  • அவருக்கு தமிழ்நாட்டில் புகலிடம் தரவேண்டும் - 23%
  • இலங்கை அரசால் பல்வேறு குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும் - 12%
  • இது நடக்காமல் இருக்க ஐநா சபையின் தலையீட்டை நாம் கோரவேண்டும் - 25%
  • அனைவரது பிரச்சனைகளையும் தீர அவர் கொல்லப்படுவார் என நம்புகிறேன் - 3%
  • அப்படி நடப்பதை தடுக்க இந்திய இராணுவத்தை அனுப்பவேண்டும் - 31%
இவ்வளவு தெளிவாக மக்கள் இருப்பார்கள் என்று மிகத் தீவிரமான புலிகள் அனுதாபிகள்கூட எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இது கேட்குமா?

தகவல், படம் : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், அக் 12, 2008

Labels: ,