ஜேகேவின் சில குறிப்புகள்: December 2004

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Thursday, December 30, 2004

கோமாளிகள்...

நாமெல்லாம் கொடுத்துவைத்தவர்கள். ஏனெனில், நமது ஊரில் கோமாளிகளுக்கு குறைவே இல்லை. உதவாக்கரை சர்க்கார் நேற்று ஒரு "மீண்டும் சுனாமி" எச்சரிக்கை விடுத்தது (நமது "scientific temper"க்கு என்ன ஆனது என்று தெரியவில்லை....திடீரென நில நடுக்கத்தை முன் கூட்டியே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்)

அதைவிடுங்கள்...கோமாளி சாம்பிள்ஸ் சில

கோமாளி ஒன்னு - கபில் சிபல்....அறிவியல் இலாகா மந்திரி திடீரென்று அறிவியல் பேச ஆரம்பித்து விட்டார். இவர்களிடமிருந்து தானே தகவல் உள்துரைக்குச் சென்றது..அப்பவே இவர்களது மேதாவித்தனத்தை காட்ட வேண்டியது தானே...

கோமாளி ரெண்டு - IMD(Indian Muttal Department) இந்த துறையையும் அங்குள்ள துரைகளையும் மொத்தமாக வீட்டுக்கு அனுப்பலாம்...அவர்கள் இருந்தும் ஒன்றுதான்...இல்லாவிட்டாலும் ஒன்றுதான்(இவர்கள் வரும் என்றால் வராது...வராது என்றால் வரும்).

கோமாளி மூனு - சுப்ரமணியம் சாமி... நான் விளக்கம் கொடுக்க வேண்டியது இல்லை....இவர் கடைசியாக சிந்திய முத்து

Wednesday, December 29, 2004

இந்தியன் எக்ஸ்ப்ரஸில் வெளியான ஒரு கட்டுரை....

Govt got wind 1 hr before waves hit Chennai

நான் முன்னர் புலம்பிக்கொண்டிருந்தது சரியாகிவிட்டது. மடையர்கள் தூங்கிக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். கபில் சிபல் முதல், கிருஷ்னசாமி வரை எல்லோரையும் வீட்டுக்குத் துரத்த வேண்டும். ஓரு விமானப் படைத்தளம் முழுகிவிட்டது என்று 8 மணிக்குத்தெரிந்ததும் IAF உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் என்ன கிழித்துக் கொண்டிருந்தது. பாகிஸ்தான் எதாவது ஒரு ஊரில் குண்டு போட்டு, டெலிபோன் ஒயர் எல்லாம் அறுந்து போனால் இப்படித்தான் இரண்டு நாடகளுக்கு சும்மா உட்கார்ந்திருப்பாரா கிருஷ்னசாமி. அந்தமானில் நின்றுகொண்டிருந்த நேவி கப்பல்களுக்குமா தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது...அவர்களாவது சொல்லியிருக்கலாமே. தமிழ்நாடு மூழ்கிப்போய் 6 மணி நேரம் கழித்துத்தான் ராணுவம் அதன் உதவிக்கரம் நீட்டியிருக்கிறது. கேட்டால் மேலிடத்திலிருந்து உத்தரவு வரவில்லையாம்....இவர்கள் யரைப்பாதுகாக்க சென்னையிலும், திரிச்சியிலும் தளமமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


அரசாங்கமும், ராணுவமும், நேவியும், விமானப்படையும் மற்றும் வக்கத்த வானிலைத் துறையும்(IMD) மொத்தமாக சேர்ந்து மெத்தனமாக இருந்துவிட்டு, பத்து பதினைந்தாயிரம் பேரை பலி வாங்கிவிட்டார்கள்.

இந்த வெக்கக்கேட்டில், இந்தியா வெளிநாட்டு உதவி இப்போது வேண்டாம் என்கிறதாம்....எங்கே போய் நான் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை...

Tuesday, December 28, 2004

(ஏழை)உயிர்களின் பொருள்....

வெள்ளை நாட்டு ஊடகங்கள் நமது மக்களின் உயிரிழப்புகளைப் பற்றி அதிகமாகக் கண்டு கொள்ளவில்லை என்று தோழர்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம். CNN ஐ பார்த்துக்கொண்டிருந்ததில் அது எவ்வளவு உண்மை என்று தோன்றியது. நாகை மீனவ கிராமங்களுக்குப் பதில், அங்கு "beach resorts"ம் மேற்கத்திய சுற்றுலாப் பயனிகளும் பாதிக்கப்பட்டிருந்தால் ஊடகங்கள் அவற்றின் "சின்ன"த்திரைகளில், நாகைக்கும் சற்று அதிக இடம் ஒதுக்கியிருக்கலாம்.

ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, அடுத்தவர்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்ப்பதை விட நாம்தான் நமக்கு உதவியாக இருக்க வேண்டும்...

ஆனால், கோலங்களையும், மெட்டி ஒலிகளையும், நேரம் தவறாமல் ஒளி பரப்பிய, சன் TVகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். எதுவுமே நடக்கதது போல் மறுநாளிலிருந்து வேலைபார்த்துக் கொண்டிருக்கும் TCSகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

எனக்கு வயிற்றை குமட்டுகிறது...

பொதுவாகவே அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் நமது மக்களுக்கு ரொம்ப சகஜம்.

ஒரு சாமன்யனைக் கேட்டால் "சுனாமி, எனக்கு ஒரு புதிய வார்த்தை. செத்துபோனவர்கள் பாவம்" அவ்வளவுதான் அவன் பதிலாய் இருக்கும்.

அதிலும் இறந்தவர்கள் எல்லாம் ஏழைகள்...இருக்கும் பொழுதே அவர்கள் எல்லாம் வெறும் எண்ணிக்கைகள் தான்....இறக்கும் போது மட்டும் அரசாங்கமும், தொலைகாட்சிகளும் அவர்களுக்கு எங்கே ராஜ மரியாதை செய்துவிடப் போகின்றனர்.

அரசாங்கத்தையும், ஊடகங்களையும் தாண்டி மனிதம் இருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...இறந்தவர்களும், பிழைத்தவர்களும் வெரும் எண்ணிக்கைகள் அல்ல, அவர்களும் நம்மைப்போல கனவுகளும், கற்பனைகளும், ஊனும் உயிரும் கொண்ட மனிதர்கள்தான். அவர்களின் பிறப்புக்கும், இறப்புக்கும் ஏதாவது ஒரு பொருள் இருக்க வேண்டும்.

நான் தேடிக்கொண்டிருக்கிறேன்...

உங்களுக்குத் தெரிந்தாலும் சொல்லுங்கள்...

அதீத வலியுடன்
ஜேகே

கடலில எழுகிற அலைகளைக் கேளடி ஓ..

அலைகளெல்லாம் அழுகைகளாகத்தான் கேட்கின்றன...60000 உயிர்களை பலி கொண்ட இந்த அலைகளைப்பற்றி நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் வலிக்கிறது...இரண்டு நாட்களாக எந்த வேலையும் சரியாகவே ஓடவில்லை எனக்கு...

நில நடுக்கம் ஏற்பட்டு இரண்டு மணி நேரம் கழித்துதான் அலைகள் தமிழ் நாட்டை தாக்கியிருக்கின்றன. அரசாங்கம் ஒரு அறை மணி நேரம் முன்னால் எச்சரிக்கை விடுத்திருந்தாலே பல்லாயிரக்கணக்கான உயிர்களை காத்திருக்களாம். ஆனால் நமது வானியல் மற்றும் புவியியல் நிபுனர்கள் சாக்குப் போக்கு சொல்வதிலேயே கண்ணாக இருக்கிறார்கள். 6:55 க்கு ஏற்பட்ட நில நடுக்கத்தை உடனடியாக கருவிகள் மூலம் அறிந்து கொண்ட இவர்கள், ஒரு உத்தேசமாகவாவது "சூனமி" அலைகள் அடிக்களாம் என்று அறிவித்திருக்களாம்.

வேலை பர்க்கவேண்டிய நேரத்தில் நன்றாக தூங்கிவிட்டு இப்பொழுது, எங்களிடம் அது இல்லை, இது இல்லை அதனால்தான் முன்கூட்டி சொல்ல முடியவில்லை என்கிறார்கள். எனக்கென்னவோ, இவர்களுக்கு அறிவு இல்லை என்றுதான் தோன்றுகிறது. பின்னெப்படி, தேசிய கடலாய்வு நிலையத்தில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர், "இதுவரை சூனமி என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது" என்று சொல்லுவார்.

"கடற்கரை ஓரங்களில் பெரும்பாலும் ஏழை பாளைகள்தான் அதிகம் இருப்பர். இவர்கள் செத்தால் யாரும் கேட்கமாட்டார்கள், எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்த இது போன்ற இயற்கை சீரழிவுகள்தான் சரியான கருவி" என்று அரசாங்கமும், நமது விஞ்ஞான மேதாவிகளும் நினைத்திருப்பார்களோ என்னவொ....இல்லாவிட்டால் எப்படி இவர்களால் "இதுவரை சூனமி வராததால் நாங்கள் தயாராக இல்லை" என்றெல்லாம் காரணம் கூற முடிகிறது...

Friday, December 24, 2004

உறைபனிக்குளிர்

ஹாலந்தில் இன்று சரியான குளிர். சில நாட்களாகவே அப்படித்தான் இருக்கிறது. -20' C எல்லாம் நினைத்துக்கூட பர்த்தது கிடையாது...இது பொதாதென்று, இன்று பனி மழை கூட...
வெளியில் போகவே மனம் இல்லை....வீட்டில் ஒன்றும் வேலை நடப்பதாக தெரியவில்லை....
எவ்வளவு காரியம் மிச்சம் இருக்கிறது தெரியுமா...நினைக்கவே மலைப்பாக இருக்கிறது.