ஜேகேவின் சில குறிப்புகள்: October 2004

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Thursday, October 07, 2004

சொல்வதற்கெளியவாம்....

வாழ்வில் ஏமாற்றங்கள் வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்...நான் என்ன செய்தேன் என்று யோசிக்கிறேன்...ஏமாற்றங்களுக்கு ஒன்றும் பஞ்சமே இல்லை....பெரும்பாலும் ஏமாற்றங்களே, நிறைவுகளை விட அதிகம்..அதற்கு ஒரு காரணம் எதிர்பார்ப்புகள் அதிகம். அதிக எதிர்பார்ப்புகள் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது....

இன்னும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டுமோ என்னவோ...

அரிய (அறிய) சொல்லியவன்னம் செயல்....
இவை வெறும் சிறு குறிப்புகள்தான்...புரியவில்லை என்று குழம்ப வேண்டாம்...என் மனதில் உள்ள எல்லாவற்றையும் இங்கு குறிக்கமுடியவில்லை...குறித்தால் மட்டும் எல்லோருக்கும் புரியவாபோகிறது...
என் வழ்க்கையும் ஒரு ஆறு மாதிரிதான்.. ஓரிடத்தில் நின்று கொண்டு என்னால் வெகு நேரம் அழ முடியது....(அதனால்தானோ ஓடிக்கொண்டே அழுகிறாய்....)

Wednesday, October 06, 2004

GMAT ம் மற்றவையும்

சென்ற வாரம் GMAT எழுதினேன்...நினைத்தது போல் score வரவில்லை என்பதில் சரியான கடுப்பு(என்மேல்தான்)...ஆனால் நண்பர்கள் சிலர் இது பொதுமென்று கூறுகின்றனர்...பர்ப்போம்
யப்பா, apply செய்யத்தான் எவ்வளவு செலவாகிறது...என்னுடைய B.E. க்கான மொத்த செலவைத்தாண்டி விடுமென நினைக்கிறேன்...(படிப்பதற்காகும் செலவைப்பற்றி சொல்லவே வேண்டியது இல்லை)
பொன்னியின் செல்வனை இரண்டு நாட்களாக படிக்கவில்லை..
செழியன், கணகு mail அனுப்பியிருந்தனர்...
இன்று ஜெகன் வருகிறார்(அவருக்காக காட்திருக்கும் பொழுதில்தான் இதை எழுதுகிறேன்)
வேலை சரியான போர்....(ம்ம்ம் இன்றைக்கு பரவாயில்லை தான்...மற்ற நாட்களை விட)

Sunday, October 03, 2004

வெகு நாட்களுக்குப் பிறகு இன்று இரண்டாம் முறையாக "பொன்னியின் செல்வன்" படிக்க ஆரம்பித்தேன். தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை கதை கலமாக கொண்ட வரலாற்று புதினம் என்பதால் வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே எனக்கு இந்த கதை பிடிக்கும்... பழையாறையும், கொடும்பாலூரும் கதையில் வரும்போது, மிக அருகிலிருந்தும் அவ்விடங்களை பார்க்காத குற்ற உணர்வு எழுந்தது.... அடுத்தமுறை வாய்ப்பு கிடைக்கும் பொழுது கட்டாயமாக இந்த வரலாற்று சிறப்பு மிகுந்த ஊர்களை சுற்றிப்பார்க்க வேண்டும்....

முதல் பாகத்தில் 23 அத்தியாயங்களை இன்று படித்தேன்...

"Project Madurai" குழுவினருக்கு ஒரு பெரிய "கும்பிடு"..for digitizing பொன்னியின் செல்வன்.

மற்ற படி இன்று வேரு ஒன்றும் சிறப்பு இல்லை...EPDM பற்றிய ஒரு கட்டுரைக்கான குறுவுரையை(abstract?) எழுதினேன்...

வட கிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள், வருத்தம் கலந்த நிதர்சனத்தை நினைவு படுத்தியது. எத்தனை காலம் தான் இந்த அரசியல் பிரச்சனைகள் வெடிமருந்து வழிப்பேசும்...

நாளை வேலைக்கு செல்லவேண்டும் என்பதுதான் இப்போதைக்கு எனக்கிருக்கும் ஒரே அழுப்பான விஷயம்.

மீண்டும் சந்திப்போம்...அன்புடன் ஜேகே


Saturday, October 02, 2004

Odyssey of a Princess

Odyssey of a Princess

எதேச்சையாக இந்த வலைகுறிப்புகளை படிக்க நேர்ந்தது... ரொம்ப "professional" ஆக எழுதியிருக்கிறார் Princess...இவருடைய தமிழ் குறிப்புகளும் மிக அருமை..

ஒரு நாள் கழிந்தது....

சில நாட்களாய், இது போல் ஏதாவது வெட்டியாக எழுதவேண்டும் என்று ஆசை. இன்றுதான் வேறு ஏதும் செய்வதற்க்கு இல்லாமல் கடைசியாக குறிக்கத் தொடங்கியிருக்கிறேன்...

"The Thai Palace"ல் மதியம் நன்றாக ஒரு கட்டு கட்டிவிட்டு பின் வெகு நேரம் தூங்கினேன். மாலை 6 மணி போல உலாவ ஆரம்பித்தது, தூக்கம் வராமல் இன்னும் வலையில் உலாத்திக் கொண்டிருக்கிறேன்....ரொம்ப நாள் ஆகிவிட்டது இது போல வெட்டியாக இருந்து..."good for me"...